Friday, January 11, 2019

திருச்சி ஜவுளி கடையில் வருமான வரி, 'ரெய்டு'

Added : ஜன 11, 2019 03:36

திருச்சி:திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையில், நேற்று வருமான வரித் துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி, என்.எஸ்.பி., சாலையில், பிரபல ஜவுளி நிறுவனங்கள் மற்றும் நகை கடைகள் உள்ளன. இந்த சாலையில், அடுக்குமாடி கட்டடத்தில், பிரசித்தி பெற்ற சாரதாஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு, பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இந்த ஜவுளி நிறுவனத்தில், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

நேற்று காலை, 11:00 மணிக்கு, எட்டுக்கும் மேற்பட்ட கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 35க்கும் மேற்பட்டோர், சாரதாஸ் ஜவுளி கடைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.தொடர்ந்து, வாடிக்கையாளர்களை வெளியேற்றி, கடையின் ஷட்டர்களை மூடி, சோதனையை துவங்கினர்.நேற்று இரவு, 8:00 மணி வரை, சோதனை நீடித்தது. ஆவணங்களை சரி பார்த்தல், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024