Saturday, January 26, 2019


போலி சான்றிதழ் மோசடி : நூலகராக பணிபுரிந்தவன் கைது

Added : ஜன 26, 2019 05:26 |

வேலுார்: போலி சான்றிதழ் கொடுத்து, நுாலகராக, 28 ஆண்டுகள் பணியாற்றியவன் கைது செய்யப்பட்டான்.வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல் அரசம்பட்டைச் சேர்ந்தவன் லோகநாதன், 48.இவன், 1991ல், பகுதி நேர நுாலகராக பணியில் சேர்ந்தான். 2005ல், ஊர் புற நுாலகராக பதவி உயர்வு பெற்று, வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலையில், தற்போது வேலை செய்கிறான்.சிறந்த நுாலகருக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளான். 2010ல், இவனது பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தணிக்கைக்காக, சென்னை அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், ஆங்கில பாடத்தில், 27 மதிப்பெண்களை, 87 ஆகவும், கணித பாடத்தில், 11 மதிப்பெண்ணை, 91 ஆகவும் திருத்தி, போலியாக மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து வேலையில் சேர்ந்தது தெரிய வந்தது.மாவட்ட நுாலக அலுவலர் ஆனந்தன் கொடுத்த புகார்படி, வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், போலி சான்றிதழ் உறுதிபடுத்தப்பட்டது.இதையடுத்து அவன், 10ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவனைபோலீசார் நேற்று கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024