பராமரிக்காத மகன் தாயிடம் திரும்பிய சொத்து
Added : ஜன 26, 2019 05:27
தேனி: சொத்தை எழுதி வைத்த தாயை மகன் பராமரிக்காததால், பத்திரத்தை சப் - கலெக்டர் ரத்து செய்து, சொத்தை மீண்டும் தாயிடம் ஒப்படைத்தார்.தேனி மாவட்டம், மேலக்கூடலுாரைச் சேர்ந்தவர் வீர்சிக்கம்மாள், 70. இவர், தன் ஒரே மகனான குமரனுக்கு, தனக்கு சொந்தமான வீட்டை, 2007ல், தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். மகன், மனைவியுடன் திருப்பூரில் குடியேறி விட்டார். சாப்பாடு, மருத்துவ வசதியின்றி வீர்சிக்கம்மாள் அவதிப்பட்டார்.இதையடுத்து, உத்தமபாளையம், சப் - கலெக்டர் வைத்தியநாதனிடம், வீர்சிக்கம்மாள் புகார் செய்தார். விசாரணை நடத்திய அவர், வீர்சிக்கம்மாள், மகனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த பத்திரத்தை, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007ன் படி ரத்து செய்தார்.வீட்டை மீண்டும் ஒப்படைக்கும் ஆவணத்தை, வீர்சிக்கம்மாளிடம் கலெக்டர் பல்லவிபல்தேவ் வழங்கினார்.
No comments:
Post a Comment