Saturday, January 26, 2019

ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று உண்டு

Added : ஜன 26, 2019 00:51


சென்னை: தெற்கு ரயில்வேயில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், இன்று முழு நேரமும் இயங்கும்.தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் விடுமுறை நாட்களில், காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 2:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இதில், குடியரசு தினத்திற்கு மட்டும், முன்பதிவுக்கான வேலை நேரம் மாற்றப்பட்டுஉள்ளது.தெற்கு ரயில்வேயில் உள்ள கம்ப்யூட்டர் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும், இன்று காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, முழு நேரமும் திறந்திருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024