Monday, January 28, 2019

பயணத்துக்கு, 'டிரெய்ன் - 18' தயார் :

கட்டணம் எவ்வளவு தெரியுமா?


dinamalar

அதிக வேகத்தில் இயக்கும் திறனுள்ள, 'டிரெய்ன் - 18' பயணத்துக்கு தயாராக உள்ளது.





டில்லி - வாரணாசி இடையே, முதல் ரயில் இயக்கப்பட உள்ளது. சதாப்தி ரயிலை விட, 50 சதவீத கட்டணம் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெய்ன் - 18 எனப்படும், இன்ஜின் இல்லாத, பெட்டிகளில் பொருத்தப்படும் கருவியின் மூலம், இழுப்பு விசையில் இயக்கப்படும், ரயில், சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ரயிலில், இலவச, 'வை - பை' மற்றும் தானியங்கி கதவு என, பல நவீன

வசதிகள் உள்ளன. இந்த ரயில், கடந்த சில மாதங் களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டது. அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

சோதனையின்போது, அதிகபட்சம், மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது.'இந்த டிரெய்ன் - 18, முதன்முதலில், டில்லியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான, உத்தர பிரதேசத் தின் வாரணாசிக்கு இயக்கப்படும்' என, அறிவிக்கப் பட்டு இருந்தது.தற்போது, ரயில் அறிமுகத்துக்கான தேதி கோரப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின், இந்த ரயில் அறிமுகம் செய்யப்படும் என, எதிர்பார்க்கபடுகிறது. வழக்கமான, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை விட, இந்த ரயிலுக்கான கட்டணம், 50 சதவீதம் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லி - வாரணாசி இடையே, தற்போது இயங்கும் விரைவு ரயில்கள்மூலம், பதினொன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும்.அதே நேரத்தில், டிரெய்ன் - 18 மூலம், எட்டு மணி நேரத்தில் சென்ற டைய முடியும்.இந்த ரயிலில், எக்சிகியூடிவ் வகுப்புக்கான கட்டணம், 2,900 ரூபாயாகவும்,

'சேர் கார்' வகுப்புக்கு, 1,700 ரூபாயாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரதம்!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ரயிலுக்கு, என்ன பெயர் வைப்பது என, பலரிடமும் கருத்து கேட்டிருந்தோம். பலரும், பலவிதமான பெயர்களை பரிந்துரைத் திருந்தனர். இறுதியாக, 'வந்தே பாரதம்' என்ற, பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தபின்,டில்லி - வாரணாசி வழித்தடத்தில், முதல் ரயில் சேவை துவக்கி வைக்கப்படும்.

-பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர், பா.ஜ.,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024