Monday, January 28, 2019

மாவட்ட செய்திகள்

சேலம் கன்னங்குறிச்சியில் குடியரசு தினத்தன்று மது விற்றவர் கைது; 1,052 பாட்டில்கள் பறிமுதல் தப்பி ஓடிய பார் உரிமையாளருக்கு வலைவீச்சு



குடியரசு தினத்தன்று மது விற்றவரை போலீசார் கைது செய்ததுடன், 1,052 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பார் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: ஜனவரி 28, 2019 03:30 AM

சேலம்,

குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி சந்து கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? என சேலம் மதுவிலக்கு பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கன்னங்குறிச்சி சின்ன அரசி தெரு பகுதியில் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீட்டின் அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனிடையே போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

அதே நேரத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றவர்களில் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,052 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சேகர் (வயது 38) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர், அதே பகுதியில் டாஸ்மாக் கடையில் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சொக்கநாதன் என தெரியவந்தது. இதையடுத்து தப்பிஓடிய பார் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024