போலி பல்கலைக்கழகம் மருத்துவ அதிகாரிகள், 'சீல்'
Added : ஜன 11, 2019 04:05
மயிலாடுதுறை:நாகை அருகே குத்தாலத்தில் இயங்கிய, போலி பல்கலைக்கழகத்தை மூடி, மருத்துவத் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
நாகை மாவட்டம், குத்தாலத்தில், 'அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம்' என்ற பெயரில், கல்வி நிறுவனத்தை, திருவேள்விக்குடியை சேர்ந்த செல்வராஜ் என்பவன், ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறான்.தொலைதுார பல்கலை என்ற பெயரில், சான்றிதழ்கள் அளித்துள்ளான்.
இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் இந்த பல்கலையில், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பட்டங்கள் பெற்றுள்ளனர்.இவனிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும், மாற்று முறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இக்கல்வி நிறுவனம் தொடர்பாக, பத்திரிகை ஒன்றில், செல்வராஜ் விளம்பரம் செய்திருந்தான். அந்த விளம்பரம் குறித்து அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், கல்வி நிறுவனத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதில், குத்தாலத்தில் ஒரு வீட்டில், உரிய அனுமதி இல்லாமல் போலி பல்கலை நடத்தி வருவது தெரிந்தது.
ஏராளமான போலி சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பல்கலையை, அதிகாரிகள் மூடி, 'சீல்' வைத்தனர். செல்வராஜை, போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment