Friday, January 11, 2019


குமரி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம்

Added : ஜன 11, 2019 04:17


நாகர்கோவில்:கன்னியாகுமரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஏழுமலையான் கோவில், 22.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் நடந்தன.பணிகள் முடிந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான, சென்னை தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.பின், அவர்கள் அளித்த பேட்டி:

கோவில் திருப்பணிகள் முழுமையாக முடிந்துஉள்ளன. 22-ம் தேதி மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கின்றன. 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து, மதியம், 12:30 மணிக்கு மேல், பக்தர்கள் தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆகம விதிகளின் படி, அனைத்து பூஜைகளும் நடக்கும். கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு, தமிழக, ஆந்திர முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024