Thursday, June 25, 2020

போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை -சென்னையில் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது

போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை -சென்னையில் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 25, 2020 04:30 AM
சென்னை, 

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தாக்குதலையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் செல்வதற்கு அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தால் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு காரியங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் துணையோடு போலியாக தயாரித்து ஒரு கும்பல் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்தன.

‘இ-பாஸ்’ தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை அண்ணாசாலையை சேர்ந்த துரைராஜ் (வயது 29) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், போலி ஆவணங்கள் மூலம் சிலர் இ-பாஸ் தயாரித்து பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ‘சைபர் க்ரைம்’ இன்ஸ்பெக்டர் துரை, ‘தொற்று நோய் தடுப்பு’ சட்டப்பிரிவு 269 மற்றும் ‘பேரிடர் மேலாண்மை’ சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

போலி இ-பாஸ் தயாரிப்பு வழக்கில் சென்னை பேசின்பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கோபி (35), மனோஜ்(30), வினோத்(37) ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

'வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்கள்


'வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்கள்

Added : ஜூன் 24, 2020 23:13

சென்ன; 'வெளிநாடுகளில் சிக்கியுள்ள, 26 ஆயிரம் தமிழர்கள், படிப்படியாக அழைத்து வரப்படுவர். இதுவரை, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தி.மு.க., செய்தி தொடர்பாளரான, டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு:மலேஷியா, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். விமான போக்குவரத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்துக்கு விமானங்கள் வர, தமிழக அரசு தடை விதித்துள்ளது.வெளிநாடுகளில் தவிப்பவர்களை, இங்கு அழைத்து வர வேண்டியது, அரசின் கடமை.

எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.'தமிழகம் திரும்ப விண்ணப்பித்துள்ள அனைவரும் எப்போது அழைத்து வரப்படுவர்; அதற்கான காலவரம்பு என்ன; 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், கூடுதல் விமானங்கள் இயக்கம் குறித்த திட்டம் என்ன' என்பதற்கு, மத்திய அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு, 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 26 ஆயிரம் தமிழர்கள், படிப்படியாக அழைத்து வரப்படுவர். அதற்கான விமானங்கள் இயக்கப்படும்' என்றார்.

இவ்வழக்கில், வெளியுறவு துறை துணைச் செயலர் வினேஷ்குமார் கைரா தாக்கல் செய்த பதில் மனு:வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர, 4.87 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 2.63 லட்சம் பேர், இந்தியா அழைத்து வரப்பட்டனர். தமிழகத்துக்கு வர, 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 17 ஆயிரத்து, 701 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வர, மூன்று கட்டங்களாக, விமானங்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

சேலத்துக்கும் ஊரடங்கு வருமா?


சேலத்துக்கும் ஊரடங்கு வருமா?

Added : ஜூன் 25, 2020 00:02

சேலம் மாவட்டத்தில், இரண்டு மாதங்களாக, கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. தற்போது, வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர்.இவர்கள், சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட சாலைகளில் வராமல், கிராம சாலைகள், குறுக்கு சாலைகளில் புகுந்து, சேலத்துக்குள் வந்துள்ளனர்.

இவர்களில் பலருக்கு அறிகுறி இல்லாத நிலையிலும், தொற்று பாதிப்பு இருந்துள்ளது.அதேநேரம், ஊரடங்கு தளர்வால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக சென்று வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், சமூக இடைவெளி, முக கவசம் அணிவதை யாரும் பின்பற்றவில்லை.

இதனால், யார் தொடர்பிலிருந்து தொற்று உருவானது என கண்டறிய முடியாத நிலையில், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 'இது, சமூக பரவலாக மாறாமல் தடுக்க, சேலம் மாவட்டத்திலும், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஓராண்டு நீட்டிப்பு: கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு


அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஓராண்டு நீட்டிப்பு: கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு

Added : ஜூன் 24, 2020 23:35

சென்னை; அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், கொரோனா பாதிப்புக்கும் சிகிச்சை பெற, அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு, 2016ல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு முதல், 2020 ஜூன், 30 வரை, நான்கு ஆண்டுகளுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், யுனைடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, ஒவ்வொரு ஊழியருக்கும் காப்பீட்டு தொகையாக, 2,100 ரூபாய், அரசு சார்பில் செலுத்தப்பட்டது.

இதற்காக, ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து, மாதத்திற்கு, 180 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.மருத்துவ காப்பீட்டு திட்டம், வரும், 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, திட்டகாலத்தை நீட்டிக்கும்படி, நிதித்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசின் கோரிக்கையை ஏற்று, இன்சூரன்ஸ் நிறுவனமும், காப்பீட்டு காலத்தை நீட்டிக்க சம்மதித்தது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை, 1 முதல், 2021 ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், 7.50 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ சிகிச்சை பெற முடியும்.புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனா பாதிப்புக்கான சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மேலாண் இயக்குனர் உமாநாத் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.

இக்குழு கூடி, கொரோனா சிகிச்சைக்கு, அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்து, அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, 'ஏ1, ஏ2' தர மருத்துவமனைகளில், தனி அறை வசதியுடன், தினசரி, 9,500 ரூபாய்; 'ஏ3-, ஏ6' தர மருத்துவமனைகளில், தினசரி கட்டணமாக, 7,500 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டால், தினசரி, 8,500 ரூபாய்; வென்டிலேட்டர் பொருத்தாமல், சிகிச்சை அளிக்கப்பட்டால், தினசரி, 6,500 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் பெற முடியும்.

அதேபோல, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டால், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். இதற்கான அரசாணைகளை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

'இ- - பாஸ்' புரோக்கர்களால் வாடகை டிரைவர்கள் அவதி


'இ- - பாஸ்' புரோக்கர்களால் வாடகை டிரைவர்கள் அவதி

Added : ஜூன் 24, 2020 23:24

சென்னை; புரோக்கர்கள் பெற்றுத் தரும், 'இ- - பாஸ்'களால், வாடகை வாகனஓட்டுனர்கள் அவதிஅடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், எட்டு போக்குவரத்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

, ஒரு போக்கு வரத்து மண்டலத்தில் இருந்து, பிற போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் செல்ல, இ- - பாஸ் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. அவசியமில்லாத பயணத்தை கட்டுப்படுத்தி, கொரோனா பரவலை தடுப்பதற்காக, இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதில், கெடுபிடிகள் அதிகம் உள்ளதால், எளிதாக இ- - பாஸ் பெற முடிவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, சில புரோக்கர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சியை சேர்ந்தோர், போலி இ- - பாஸ்களை தயாரித்து, பல ஆயிரம் ரூபாய் பணம் கறக்கின்றனர். இவர்களுக்கு உடந்தையாக, போலீஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு பெறப்படும் இ- - பாஸ்களை, உண்மையென நம்பி, வாடகை வாகனங்களில் பயணியரை, ஓட்டுனர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இவர்களில் பலர், போதிய கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால், உண்மையான இ- - பாஸ்களை எப்படி கண்டறிவது என்பது தெரியவில்லை.பயணியரை அழைத்துச் செல்லும் போதோ அல்லது பயணியரை இறக்கி விட்டு திரும்பும் போதோ, வாகன சோதனையில்சிக்குகின்றனர். அப்போது, உரிய பதில் கூற தெரியாமல் விழிக்கின்றனர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, பேரிடர் சட்டத்தை மீறியதாக, வழக்கு பதியப்பட்டு, அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

அத்துடன், ஓட்டுனர்களை, 15 நாட்கள் தனிமைப்படுத்தி விடுகின்றனர். போலி இ- - பாஸ்களை நம்பி, சவாரி ஏற்றும் ஓட்டு னர்கள் சிக்கலில் தவிக்க, அதற்கு காரணமான பயணியர் மீதோ, புரோக்கர்கள் மீதோ, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?


கல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா?

Updated : ஜூன் 25, 2020 04:31 | Added : ஜூன் 25, 2020 04:29 |

சென்னை : கல்லுாரி மற்றும் பல்கலைகளின் இறுதி பருவ தேர்வுகளை ரத்து செய்ய பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. திட்டமிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லுாரிகள் மூன்று மாதங்களாக செயல்படவில்லை. பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் இறுதி பருவத்துக்கான தேர்ச்சி கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, மதுரை காமராஜர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகளை யு.ஜி.சி. வகுத்து வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என யு.ஜி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

Guv wants common platform for real-time info on varsity issues


Guv wants common platform for real-time info on varsity issues

TIMES NEWS NETWORK

Jaipur: 25.06.2020

Governor Kalraj Mishra has expressed the need to bring all state-run universities on a common platform for providing real-time information related to admissions, courses, degrees, fees and facilities to students.

During a video conferencing with the VCs of all 27 state varsities, Mishra said every university should come up with an integrated management system to be able to connect with the integrated portal, which will act as a single window for providing all information to students.

Expressing concern over the rising Covid cases, Mishra said, “Every university has to organise the admission process online given the present situation. I ask every institute to work in this direction.” The admission process in the state varsities begins in June and session commences from July first week. Due to the pandemic, the process is yet to start.

Mishra, who is the chancellor of university, directed the varsities to be ready for online classes as soon as the admission process ends.

Most of the VCs expressed their inability toholdonlineexams as they lack technical resources and shortage of infrastructure. He said, “Since most of the universities would like to go for offline exams, they should make all preparations like proper sitting arrangements to ensure social distancing and thermal scanning of every student. Remember, utmost priority has to be given to the safety and security of the students.”

NEWS TODAY 07.09.2026