Wednesday, April 10, 2019

ஷீரடிக்கு சிறப்பு ரயில்

Added : ஏப் 09, 2019 23:17


சென்னை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ஷீரடிக்கு, சிறப்பு ரயிலை இயக்குகிறது.மதுரையில் இருந்து, மே, 12ம் தேதி ஷீரடிக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.இப்பயணத்தில், மஹாராஷ்டிராவில், ஷீரடி, பண்டரிபுரம்; ஆந்திராவில், மந்தராலயம் சென்று வரலாம்.ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 5,670 ரூபாய் கட்டணம். மத்திய -- மாநில அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

மேலும் தகவலுக்கு, எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...