Wednesday, October 16, 2019

சுதா சேஷய்யனுக்கு கூடுதல் பொறுப்பு

Added : அக் 16, 2019 02:16




சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன், தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,க்கு மாற்றாக, என்.எம்.சி., என்ற, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கான மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியது. இந்த ஆணையம், நாடு முழுவதும், புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்க அனுமதி மற்றும் அங்கீகாரம் அளித்தல், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான ஒப்புதல் வழங்குதல் போன்ற பணிகளை, மேற்கொள்ள உள்ளது.

ஆணையத்தில், பகுதி நேர உறுப்பினர் தேர்வுக்கு, மாநில கவர்னர்கள், தங்கள் மாநிலத்தில் இருந்து, ஒருவரை முன்மொழியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல, மருத்துவக் கவுன்சில் தரப்பிலிருந்தும் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன.நாடு முழுவதும், 65 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களில், 19 பேர் ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை.,துணைவேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் மேற்கு வங்கம், டில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் மருத்துவ பல்கலையின் துணைவேந்தர்கள் இடம் பெற்று உள்ளனர்.விரைவில், தேசிய மருத்துவ ஆணையம் செயல்பட துவங்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024