Friday, October 25, 2019

Other universities

மருத்துவ பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள்: அக் 22,2019 23:39

சென்னை தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினம் நடைபெற இருந்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிவிப்பு:தீபாவளிக்கு மறுநாள் 28ம் தேதி பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில் மருத்துவம் சார் அறிவியல் படிப்பு மற்றும் இந்திய மருத்துவ படிப்புளுக்கான தேர்வுகள் நடைபெற இருந்தன.அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4; இந்திய மருத்துவ படிப்புக்கான தேர்வு நவம்பர் 9ம் தேதியும் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024