Monday, March 16, 2020

ஆம்பூரில் 1000 வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியுடன் சிக்கன் 65 இலவசம்: காரணம் தெரியுமா?

By DIN | Published on : 15th March 2020 08:56 PM |

சிக்கன் பிரியாணியுடன் சிககன்65 இலவசம்

ஆம்பூர்: பிராய்லர் சிக்கனால் கரோனா பரவுகின்றது என்ற வதந்தியின் காரணமாக ஆம்பூரில் 1000 வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியுடன் சிககன்65 இலவசமாக வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 107 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதேசமயம் கரோனா பரவுவது குறித்து பல்வேறு வதந்திகளும் வாட்சப்பிலும் சமூக ஊடகங்களிலும் உலவி வருகின்றன. பிராய்லர் சிக்கனால் கரோனா பரவுகின்றது என்பதும் அப்படிப்பட்ட ஒரு வதந்தியாகும்.

இந்நிலையில் வதநதியின் காரணமாக ஆம்பூரில் 1000 வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியுடன் சிக்கன் 65 இலவசமாக வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிராய்லர் சிக்கனால் கரோனா பரவுகின்றது என்ற வதந்தியின் காரணமாக பிராய்லர் ஆம்பூரில் சிக்கன் விலை கிடுகிடுவென 30 ரூபாய்க்கு சரிந்து விட்டது.

எனவே பிராய்லர் சிக்கனால் கரோனா பரவாது என்பது குறித்து ஒரு நூதன விழிப்புணர்வு ஏற்படுத்த, 1000 வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியுடன் சிககன்65 இலவசமாக வழங்கி ஆம்பூர் சிக்கன் கடைக்காரார்கள் அசத்தினர்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...