சென்னைக்கு வந்து செல்லும் 118 விமான சேவைகள் ரத்து
Added : மார் 21, 2020 01:20
சென்னை : பயணியர் வருகை குறைவு மற்றும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும், 118 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள், நேற்று ரத்து செய்யப்பட்டன.
கொரோனா வைரஸ் தாக்குதல் பீதி காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும், உள்நாட்டு மற்றும்பன்னாட்டு விமான பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னைக்கு வந்து செல்லும், 58 பன்னாட்டு விமான சேவைகள்,நேற்று ரத்து செய்யப்பட்டன.குறிப்பாக, இலங்கை -சென்னை, 6; மலேசியா - சென்னை, 6; மஸ்கட் - சென்னை, 3; குவைத் - சென்னை, 3; துபாய் - சென்னை, தாய்லாந்து - சென்னை, 2; ஹாங்காங், தோகா, சிங்கப்பூர்.பஹ்ரைன், பிராங்க்பர்ட், ஷார்ஜா, மொரீஷியஸ் நகரங்களில் இருந்து வரும், தலா ஒரு விமான சேவை என, இரு மார்க்கங்களிலும், 58 பன்னாட்டு விமான சேவைகள், நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதேபோல, உள்நாட்டு விமான சேவையிலும், சென்னையில் இருந்து மும்பை, டில்லி, பெங்களூரு, மதுரை, ஐதராபாத், கோவை, ஷீரடி, புனே, திருவனந்தபுரம், கொச்சி, கோவா, கோல்கட்டா.துாத்துக்குடி, மங்களூரு, திருச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும், 60 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்ட
No comments:
Post a Comment