Saturday, March 21, 2020

மருத்துவம் சார்ந்த படிப்பு மாணவர்களுக்கு விடுமுறை

Added : மார் 21, 2020 02:03

சென்னை : தமிழகத்தில், மருத்துவம் சார்ந்த, துணை படிப்புகள்படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 31ம் தேதி வரை விடுமுறை அளித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளர், அஸ்வத் நாராயணன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்கலை இணைப்பு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - டிப்ளமோ உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள் பயில்வோருக்கு, வரும், 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.இந்த படிப்புகளில் செய்முறை, நடைமுறை தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும். தேர்வுகள் நடைபெறும் போது, மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள, பொதுநல அறிவிப்புகளை கடைபிடிக்க வேண்டும்.அதேபோல், பி.பார்ம்., படிப்புகளுக்கு, முதல் மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், வரும், 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அவை மாற்றி அமைக்கப்பட்டு, ஏப்., 15 முதல் தேர்வுகள் துவங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...