Saturday, March 21, 2020


'டாஸ்மாக்' கடையில் இடைவெளி கோடு

Added : மார் 21, 2020 00:39


ஈரோடு : மொடக்குறிச்சி அருகே, கொரோனா வைரஸ்பரவாமல் தடுக்க, 'டாஸ்மாக்' மதுக்கடையில், ஒரு மீட்டர் இடைவெளியில், கோடு வரையப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் பார்களை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மதுக்கடைகளை மூடவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளதால், கொரோனா வைரஸ் பரவும் என்ற, அச்சம் எழுந்துள்ளது. அதை போக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே, குளூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், ஒரு மீட்டருக்கு ஒரு கோடு என, வெள்ளை சுண்ணாம்பில் கோடு போட்டுள்ளனர்.

மது வாங்க வருவோர், ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று வாங்கிச் செல்கின்றனர். குடிமகன்களும் ஒத்துழைப்பு தருவதால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் போக்கப்பட்டுள்ளதாக, கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024