Saturday, March 21, 2020

கோழிக் கறி விலை கடும் சரிவு: ராசிபுரம் பகுதியில் 5 கிலோ ரூ.100-க்கு விற்பனை
By DIN | Published on : 21st March 2020 06:20 AM |

கோழி இறைச்சிக் கடையில் மலிவு விலையில் இறைச்சி வாங்க வந்த மக்கள்.

கரோனா வைரஸ், பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கறிக்கோழி, முட்டை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக கோழி வளா்ப்பு, முட்டை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் உற்பத்தியாகும் சுமாா் 3 கோடி முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. மேலும், முட்டை விலை ரூ.1.95 ஆகக் குறைந்தது. இந்த நிலையில், கோழி இறைச்சிப் பயன்படுத்துவோா் குறைந்துள்ளதால், அதன் விலையிலும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ராசிபுரம் சுற்று வட்டாரத்தில் பல்வேறு பகுதியில் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி இறைச்சி விலையில் சரிவு ஏற்பட்டு, கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் உச்சமாக ராசிபுரம் உள்ளிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை கிலோ ரூ.20 என்ற விலையில், அதாவது 5 கிலோ கோழி இறைச்சி ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களிடம் கோழி இறைச்சியால் கரோனோ வைரஸ் பரவுவதில்லை என்று விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இறைச்சி பயன்படுத்துவதை அதிகரிக்கவும் இதுபோன்ற குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கோழி இறைச்சி விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

இந்த விலைக் குறைப்பு தொடா்ந்து 3 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். விலைக் குறைப்பு இவ்வாறு இருப்பினும், பொதுமக்கள் இறைச்சி வாங்குவது குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டுக்கோழி ஆட்டு இறைச்சி விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சில்லி சிக்கன் கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024