Monday, April 13, 2020

திருச்சிக்கு நடந்தே வந்த குடும்பம்; ஆறுதல் அளித்த போலீசார்

Updated : ஏப் 13, 2020 01:46 | Added : ஏப் 12, 2020 23:20 |



திருச்சி : வேளாங்கண்ணியில் இருந்து, திருச்சிக்கு ஆறு நாட்களாக நடந்து வந்த குடும்பத்தினரை, சாப்பிடவைத்த போலீசார், லாரியில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி, மணப்பாறை, மஞ்சம்பட்டியில், நேற்று காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 5 வயது சிறுமி உட்பட, ஆறு பேர், கையில் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அவர்கள், வேளாங்கண்ணிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். ஊரடங்கால், வேலை இல்லாமல், ஊருக்கு திரும்ப பணம் இன்றி, அங்கிருந்து நடந்தே வந்துள்ளனர்.

தொடர்ந்து, ஆறு நாட்களாக நடந்து வந்த அவர்கள், ஒன்றரை நாட்களாக சாப்பிடவில்லை எனவும் தெரிவித்தனர். அவர்களுக்கு, போலீசார் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து, அந்த பக்கம் வந்த காய்கறி லாரியில் ஏற்றி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar

Two more crocodiles rescued from former MLA’s home in Sagar  TIMES NEWS NETWORK 12.01.2025 Bhopal : Two more crocodiles were rescued on Satu...