தனிமைப்படுத்தி கொண்ட ஐசிஎம்ஆர் துணை இயக்குநர்
18.06.2020
வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிக்காக 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் (ஐசிஎம்ஆர்) செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநரான பிரப்தீப் கவுர், இந்தக் குழுவை வழிநடத்தி வருகிறார். முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டங்களில் பிரப்தீப் கவுர் பங்கேற்றார்.
இதற்கிடையே, சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்துக்கு பெரிய இழப்பு என்று கருத்து தெரிவித்திருந்தார். கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென குறைவதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், 14 நாட்கள் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று அவர் நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment