Saturday, October 3, 2020

'ஆம்னி பஸ்களை ஒப்படைப்போம்'

'ஆம்னி பஸ்களை ஒப்படைப்போம்'

Added : அக் 02, 2020 23:54


சென்னை:''ஆம்னி பஸ்களை, கோட்டையில் முதல்வரிடம் ஒப்படைப்போம்,'' என, தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க செயலர், அன்பழகன் கூறினார்.

துகுறித்து, அவர் கூறியதாவது:ஆறு மாதங்களாக, 4,000 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலைச் சேர்ந்த, இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு உள்ளது. எங்களின் கோரிக்கை மனுவை, போக்குவரத்து துறை அமைச்சரிடம் வழங்கி உள்ளோம்; முதல்வரை சந்திக்க முடியவில்லை.

ஆறு மாதங்களாக பஸ்களை இயக்காத நிலையில், 2.5 லட்சம் ரூபாய், சாலை வரியாக செலுத்த வேண்டியுள்ளது. பஸ்களை பராமரித்து இயக்க, ஒரு பஸ்சுக்கு, 5 லட்சம் ரூபாய் தேவை. இந்த தொழிலில், 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களால், 300 கோடி ரூபாய் டீசல் விற்பனை வழியாக, அரசுக்கு கலால் வரி கிடைக்கிறது. வங்கி கடனுக்கான தவணையை செலுத்தும் அவகாசம் முடிந்து விட்டதால், நெருக்கடி தொடர்ந்துள்ளது.

இதனால், பஸ்கள் ஓடாத இரண்டு காலாண்டுக்கான, 20 கோடி ரூபாய் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என, கோரினோம்; வழக்கும் தொடர்ந்தோம்; இதுவரை சாதகமான பதில் இல்லை. பல மாநிலங்களில், சாலை வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், ௫ம் தேதிக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால், அனைத்து ஆம்னி பஸ்களையும், கோட்டையில் நிறுத்தி, முதல்வரிடம் ஒப்படைக்க உள்ளோம்.இவ்வாறு, அன்பழகன் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024