Thursday, November 19, 2020

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளது: ரிசர்வ் வங்கி

லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளது: ரிசர்வ் வங்கி

Added : நவ 18, 2020 22:23

மும்பை:'லஷ்மி விலாஸ் வங்கியில், வாடிக்கையாளர்கள், 'டிபாசிட்' செய்த பணம் பாதுகாப்பாக உள்ளது; அஞ்ச வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி நியமித்த, புதிய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், லஷ்மி விலாஸ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாக, மூலதன தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம் திடீரென, லஷ்மி விலாஸ் வங்கியின் பல்வேறு நிதிச் சேவைகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. அத்துடன், வாடிக்கையாளர்கள், வங்கியில் 'டிபாசிட்' செய்துள்ள பணத்தில், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுப்பதற்கு வரம்பு நிர்ணயித்தது.இந்த கட்டுப்பாடு, வரும், டிச., 16 வரை அமலில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கனரா வங்கியின் முன்னாள் செயல்சாரா தலைவர், டி.என்.மனோகரன், லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:லஷ்மி விலாஸ் வங்கி, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், டி.பி.எஸ்., வங்கியுடன், டிச.,16க்குள் இணைக்கப்படும். அதனால், லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள், டிபாசிட் பற்றி கவலைப்பட வேண்டாம்.

வங்கியிடம், 20 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் உள்ளது. 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வங்கியின் நிதிநிலை குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களின் டிபாசிட் பத்திரமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். டி.பி.எஸ்., உடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான, வரைவுஅறிக்கையை, வரும், 20ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024