Sunday, April 18, 2021

பயணியர் குறைவால் பஸ் குறைப்பு குடும்பத்துடன் கண்டக்டர் தர்ணா!

பயணியர் குறைவால் பஸ் குறைப்பு குடும்பத்துடன் கண்டக்டர் தர்ணா!

Added : ஏப் 17, 2021 22:43

சென்னை:கொரோனா பரவலால், பயணியர் வருகை சரிந்ததால், அரசு பஸ்கள் குறைக்கப் பட்டு வருகின்றன. இதனால், வருவாய் இழந்த கண்டக்டர், பணிமனையில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, எந்த நேரத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தால், வெளியூர் பயணத்தை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். பஸ்களில் பயணிக்கவும், பலர் தயக்கம் காட்டுகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு பஸ்களில், 25 சதவீத இருக்கைகளே நிரம்புகின்றன.

சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களிலும்,பல நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி அளித்துள்ளதால், மாநகர பஸ்களிலும் கூட்டம் இல்லை. இதனால், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணி கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.

குடும்பத்துடன் தர்ணா'

தனக்கு கிடைக்கும், 22 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலும், பணி இல்லாத நாட்களுக்கு சம்பளம் பிடிக்கப்படுவதால், வீட்டு வாடகை, வங்கிக் கடன், குடும்ப செலவுகளை சமாளிக்க முடிய வில்லை' எனக்கூறி, சென்னை, வடபழநி பணிமனையின் நடத்துனர் நந்தகுமார், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து, ஆம் ஆத்மி தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:எம்.டி.சி.,யில், ஒரு பஸ்சுக்கு, 9,000 ரூபாய்க்கு டீசல் போட்டால், 22 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வந்தது. தற்போது, 6,000 ரூபாய் கூட வசூலாவதில்லை. இதனால், ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க, பஸ்கள் இயக்கத்தை குறைத்து விட்டனர். வேலை இல்லாத நாட்களுக்கு வருகை பதிவு வழங்க நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தர்ணாக்கள் நடக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024