Wednesday, July 21, 2021

ஆதார் 'மொபைல் எண்' தபால்காரர் புதுப்பிக்கலாம்



இந்தியா

ஆதார் 'மொபைல் எண்' தபால்காரர் புதுப்பிக்கலாம்

Added : ஜூலை 20, 2021 21:52


புதுடில்லி:பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு வழங்கிய 'மொபைல் போன்' எண்ணை, தபால்காரர் வாயிலாக புதுப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய தபால் மற்றும் பரிவர்த்தனை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட்ராமு வெளியிட்டு உள்ள அறிக்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் அனைவருக்கும் தனிப்பட்ட எண் உடைய ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.இதற்காக மக்கள் தங்கள் 'மொபைல் போன்' எண்ணை, ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணை எளிதாக புதுப்பிக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து, இந்திய தபால் மற்றும் பரிவர்த்தனை வங்கி ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி ஆதார் அட்டைக்கான மொபைல் எண்ணை, மக்கள் வீடுகளில் இருந்தபடி தபால்காரர் வாயிலாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

நாட்டில் 650 இந்திய தபால் பரிவர்த்தனை வங்கிகள் வாயிலாக 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் சேவகர்கள் இந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்குவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024