67 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்ததடைந்தது
Updated : ஜூலை 31, 2021 03:49 | Added : ஜூலை 31, 2021 03:47
சென்னை : தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த 53 லட்சம் தடுப்பூசியை விட 14 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.
மத்திய அரசு கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து நேற்று 2.70 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. தமிழக அரசிற்கு ஜூலையில் மத்திய தொகுப்பில் 53 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.
அந்த ஒதுக்கீட்டை விட கூடுதலாக 14 லட்சம் தடுப்பூசிகள் சேர்த்து மொத்தமாக 67 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை விட கூடுதலான தடுப்பூசிகள் வரும் என மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment