பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்
Updated : ஜூலை 27, 2021 12:43 | Added : ஜூலை 27, 2021 12:40 |
புதுடில்லி: 'யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை, வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர்' எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், 'பிச்சை எடுப்பதை தடை விதிக்க முடியாது' என தெரிவித்துள்ளது.
கோவிட் பரவலைத் தடுக்கும் விதமாக போக்குவரத்து சந்திப்புகளிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் பிச்சை எடுப்பதற்கு பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் தடை விதிக்குமாறும், அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க உத்தரவிடுமாறும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 27) நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
மேலும் நீதிபதிகள் கூறியதாவது: யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர். பிச்சை எடுப்பதை உயர் வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. பிச்சை எடுப்பதற்காக மக்கள் வீதிகளில் இறங்குவது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் காட்டுகிறது. இது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்னை. ஒரு உத்தரவால் இதை சரி செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும் "கோவிட் விவகாரத்தில் பிச்சைக்காரர்களுக்கும், வீடற்றவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே மருத்துவ வசதி பெற உரிமை இருக்கிறது," எனக்கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment