Thursday, July 29, 2021

டாக்டர் கொலை வழக்கு: ஆக., 2ல் தீர்ப்பு

டாக்டர் கொலை வழக்கு: ஆக., 2ல் தீர்ப்பு

Added : ஜூலை 29, 2021 01:44

சென்னை:'டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், ஆக., 2ல் தீர்ப்பு வழங்கப்படும்' என, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு செப்., 14ல், சென்னை ஆர்.ஏ.,புரத்தில், நரம்பியல் டாக்டர் சுப்பையா, கூலிப் படையினரால் தாக்கப்பட்டார். தலை, கழுத்து, கை, என, 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், 23ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த வழக்கில், பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், அய்யப்பன் ஆகிய, 10 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில், இருவர் வழக்கறிஞர்கள்; இருவர் ஆசிரியர்கள்; ஒருவர் அரசு மருத்துவர்; ஒருவர் இன்ஜனியர். வழக்கு நடந்த காலத்தில் அய்யப்பன், 'அப்ரூவர்' ஆக மாறிவிட்டார்.சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், 2015 முதல் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

கொரோனா காலத்திலும், இந்த ஒரு வழக்கு மட்டும், நேரடி விசாரணையில் நடந்தது.அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் விஜயராஜ் வாதாடினார். அரசு தரப்பில், 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஆக., 2ம் தேதி, வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024