Friday, July 30, 2021

அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்?


அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்?

Updated : ஜூலை 30, 2021 05:41 | Added : ஜூலை 30, 2021 05:38

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், படித்து முடித்த பின், சில நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி அளிக்கும் திட்டத்தை நீக்க, அந்நாட்டு பார்லி.,யில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பு முடிந்த பின், மூன்றாண்டுகள் வரை அந்நாட்டிலேயே தங்கியிருந்து வேலை பார்க்க, அந்நாட்டின் குடியுரிமை மற்றும் தேசிய சட்டம் இடம் அளிக்கிறது. இது, ஓ.பி.டி., எனப்படும், விருப்ப பயிற்சி திட்டம் என, அழைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 80 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். இந்த திட்டத்தால், அமெரிக்க குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக குடியரசு கட்சி எம்.பி.,க்கள் குரல் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் குடியுரிமை மற்றும் தேசிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இந்த வேலை வாய்ப்பு திட்டத்தை நீக்க வலியுறுத்தி, குடியரசு கட்சி எம்.பி.,க்கள், பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்தனர்.

இந்த மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட பின், அதிபரின் ஒப்புதலுக்கு செல்லும். 'ஆனால், இரு சபைகளிலுமே ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், மசோதா நிறைவேறுவது கடினம்' என கூறப்படுகிறது.ஒருவேளை நிறைவேறினால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024