Friday, July 30, 2021

மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய பல்கலைக்கு தடை விதிக்க மறுப்பு Added : ஜூலை 29, 2021 23:04 சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், அதற்காக நடத்தப்படும் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்வு முடிவுகளை பரிசீலிக்காமல், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய, பல்கலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.மதிப்பீடு செய்த மதிப்பெண் மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண், இதில் இறுதி மதிப்பெண் எது என்பதையும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனரா என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யூகம், அனுமானத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றனர்.இதையடுத்து, இந்தப்பிரச்னையை எழுப்ப தகுதி இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்படும் மாணவர்கள், நீதிமன்றத்தை அணுக தடையில்லை என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய பல்கலைக்கு தடை விதிக்க மறுப்பு

Added : ஜூலை 29, 2021 23:04

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், அதற்காக நடத்தப்படும் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்வு முடிவுகளை பரிசீலிக்காமல், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய, பல்கலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.மதிப்பீடு செய்த மதிப்பெண் மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண், இதில் இறுதி மதிப்பெண் எது என்பதையும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனரா என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யூகம், அனுமானத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றனர்.இதையடுத்து, இந்தப்பிரச்னையை எழுப்ப தகுதி இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்படும் மாணவர்கள், நீதிமன்றத்தை அணுக தடையில்லை என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024