மகாளய அமாவாசைக்கு கயா, காசிக்கு சிறப்பு ரயில்
Added : செப் 02, 2021 21:56
சென்னை:மகாளய அமாவாசைக்கு, கயா, காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.
இந்த ரயில், மதுரையில் இருந்து வரும் 30ம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலுார், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.
இப்பயணத்தில், பீஹார் மாநிலம் கயாவில் மகாளய அமாவாசையன்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில் தரிசனம் செய்யலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். கோல்கட்டா நகரை சுற்றிப் பார்க்கலாம். ஆந்திர மாநிலம், விஜயவாடா கனகதுர்க்கா சக்தி பீடத்தை பார்த்து வரலாம். மொத்தம் 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 11 ஆயிரத்து 340 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை அலுவலகத்தை, 90031 40680; மதுரை - 82879 31977; திருச்சி, 82879 31974; கோவை அலுவலகத்தை, 82879 31965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களை, www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment