நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Updated : செப் 07, 2021 15:05 | Added : செப் 07, 2021 15:03
புதுடில்லி: நடப்பு 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு வரும் 12ல் நாடு முழுதும் நடக்கவுள்ளது. மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 198 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனை, https://www.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து, விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment