Friday, November 5, 2021

இலவச பயணம் செய்யும் பெண்களை நாயாய் விரட்டும் கண்டக்டர்கள்



தமிழ்நாடு

இலவச பயணம் செய்யும் பெண்களை நாயாய் விரட்டும் கண்டக்டர்கள்

Updated : நவ 05, 2021 01:19 | Added : நவ 04, 2021 23:53

பெரம்பலுார் :டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை, அரசு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் நாயாய் விரட்டுவதால், தமிழக அரசு மீது பெண்களுக்கு அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குறுதிப்படி, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இலவசம் என்பதால், அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. டவுன் பஸ்களில் ஆண்கள் எண்ணிக்கையை விட, பெண்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இலவச பயணத்தால் தி.மு.க., அரசு மீது பெண்கள் மத்தியில் ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பு தற்போது குறையத் துவங்கி உள்ளது.

இதற்கு, அரசு டவுன் பஸ்களில் இலவமாக பயணிக்கும் பெண்களை, அந்த பஸ்களில் பணியாற்றும் பெரும்பாலான கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள், இலவசமுன்னு சொன்னதும் போதும், ஆட்டோவுலேயே போகாம எல்லாரும் டவுன் பஸ்சுலேயே வாறீங்க. ஓசியில வர்றவங்களாம் டிக்கெட்டை கேட்டு வாங்குங்க. காசு கொடுத்து வர்றவங்க நின்னுட்டு வர்றாங்க, நீங்க பக்கத்துல இறங்குற ஊருக்கு உர்கார்ந்துட்டீங்களோ. அந்த ஸ்டாப்புல நிக்காது. இந்த பஸ்சுல ஏறாதீங்க, அடுத்த பஸ்சுல வாங்க. வீட்டுல, காட்டுல வேலை ஏதும் இல்லையா, எல்லாம் கிளம்பி வந்துடுறீங்க என்று, இஷ்டத்துக்கு பெண்களை அவர்கள் வசை பாடுவதே காரணமாக உள்ளது.

அரசாங்கம் உத்தரவால் தான் இலவசமாக நாங்க போறாம். நீங்க ஏன் இப்படி பேசுறீங்க என பெண்களுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே தினமும் தகராறு நடக்கிறது. இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு, தங்களுக்கு படிக்காசு கிடைக்காது என்ற கோபமே காரணம்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றும் நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே, தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, இலவச பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024