Friday, November 5, 2021

கூடுதல் மருத்துவ கல்லுாரிகள் தமிழக மாணவர்களுக்கு பயன்

DINAMALAR

கூடுதல் மருத்துவ கல்லுாரிகள் தமிழக மாணவர்களுக்கு பயன்

Added : நவ 04, 2021 23:10

கோவை:கூடுதல் மருத்துவக் கல்லுாரிகளால் 'கட் ஆப்' மதிப்பெண் குறையும் என்பதால் தமிழக மாணவர்களுக்கு பயன் கிடைக்க உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப் பட்டன. மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 700 - 720 மதிப்பெண்களை 85 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு 197 பேர் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான 'கட் ஆப்' குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கூடுதலாக மருத்துவ கல்லுாரிகள்துவங்கப்படுவதே.

கடந்தாண்டு தமிழகத்தில் 2747 மருத்துவ இடங்கள் இருந்தன. நடப்பாண்டு புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்பட்டதால் மொத்தம் 4100 மருத்துவ இடங்கள் இருக்கும். இதனால் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும். மருத்துவ இடங்களுக்கான 'கட் ஆப்' மூன்று முதல் ஐந்து மதிப்பெண் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024