Monday, January 4, 2016

அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 02 January 2016 12:58 AM IST


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்து தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நடைமுறை ஏற்கெனவே நமது அண்டை மாநிலங்கள் மூன்றிலுமே நடைமுறையில் இருப்பவைதான். தமிழகத்திலும் இருந்துவந்த நடைமுறைதான் இவை.
கேரள மாநிலத்திலுள்ள ஆலயங்களில் ஆண்களாக இருந்தால் வேட்டி அணிந்து சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முழுக்கால் சட்டை, பைஜாமா உள்ளிட்ட தைக்கப்பட்ட ஆடை எதையும் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமல்ல, மேல் சட்டை அணிவதும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும்கூட தென்னிந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்துச் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நடைமுறைகள் சிறப்பு தரிசனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இறைவழிபாட்டிற்கும் தெய்வத்தின் தரிசனத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இந்து மதத்துக்கு மட்டுமே இருப்பவை அல்ல. இஸ்லாமியர்களின் தொழுகைக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேபோல, கிறிஸ்தவர்களுக்கும்கூட பெண்கள் தலையைத் துணியால் போர்த்திக்கொள்வது உள்ளிட்ட சில மாதா கோயில் வழிபாட்டு முறைகள் உள்ளன. சீக்கியர்களுக்கும், பெளத்த மதத்தினருக்கும்கூட இதுபோன்ற சம்பிரதாயங்கள் உண்டு.
இந்து கோயில்களில் ஆண்கள் வேட்டி கட்டுவது, அங்கவஸ்திரம் மட்டுமே போர்த்திக்கொண்டு ஆலயத்திற்குள் செல்வது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க ஆகம விதிமுறைகளோ, இன்ன இடத்தில் இன்ன பிராகாரங்கள் அமைய வேண்டும் என்றோ விதிமுறைகள் கிடையாது. ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடி பிரார்த்திக்கும் இடமாக மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல.
இங்கே வழிபாட்டுத் தலங்கள் எனப்படுபவை கூட்டுப் பிரார்த்தனைத் தலங்களாக இல்லாமல், பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றன. அவை ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியை மையப்படுத்தி ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டவை. அதனால்தான், இன்னென்ன பிரச்னைகளுக்கு இன்னென்ன குறிப்பிட்ட ஆலயங்களைத் தரிசிப்பது, அங்கே பரிகாரங்களைச் செய்வது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலாடை அணியாமல் செல்லும்போது அந்த ஆலயத்தின் அடிப்படையாகக் கருதப்படும் கிரகத்தின் காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இதுபோன்ற விதிமுறைகளுக்குக் காரணம். கோயில்களில் வலம்வருவது, கொடி மரத்துக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிப்பது போன்றவையும் இதனால்தான்.
இறை நம்பிக்கை இல்லாத, அன்னிய மோகத்தின் பாற்பட்ட திராவிட அரசியலின் காரணமாக இந்து ஆலயங்களின் வழிபாட்டு முறைகளும், சம்பிரதாயங்களும் கேலிக்கும், பழிப்புக்கும் உள்ளாயின. மேல் சட்டை அணியாமல் ஆலய வழிபாடு என்கிற சம்பிரதாயம் பூணூல் அணிந்த பிராமணர்களையும், அணியாத பிராமணர் அல்லாதவர்களையும் பிரித்தறிந்து பார்ப்பதற்காகத்தான் என்கிற குதர்க்கமான பொய்ப் பிரசாரத்தை புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்று அனைவரையும் நம்ப வைத்தனர் அந்த இறை மறுப்பாளர்கள். ஆலயங்களில் மட்டுமல்லாமல் மகான்களையும், துறவிகளையும், வயதில் மூத்தவர்களையும் தரிசிக்கும்போதுகூட மேலாடை அணியாமல் செல்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் ஆத்ம சக்தியையும் அருளையும் முழுமையாகப் பெற முடியும் என்கிற பாரம்பரிய நம்பிக்கைக்கும்கூட இதேபோன்ற காரணத்தைக் கூறி பழிக்க முற்பட்டனர்.
கடந்த 70 ஆண்டு கால இந்து மத எதிர்ப்பை (வெறுப்பை) முன்னிலைப்படுத்தும் சக்திகளின் பிரசாரத்தால், இடையில் சிறிது காலம் துவண்டுபோன இறை நம்பிக்கை உணர்வு, இப்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. ஆலயங்களில் முக்கியமான தினங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் அதற்கு கட்டியம் கூறுகிறது. அதேநேரத்தில், ஆலயம் தொழுவது ஏனைய மதத்தினரிடம் காணப்படும் ஈடுபாட்டைபோல இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக இளைஞர்களிடம் புதிய போக்குகள் தோன்றி டி-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட நாகரிக ஆடைகளும், பெண்கள் லெக்கின்ஸ், ஸ்கின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகளும் அணிந்து கோயிலுக்கு வரத்தொடங்கியதால், தமிழக ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு குலைந்தது. நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, பாவாடை - தாவணி போன்றவை காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. நமது பாரம்பரியச் சின்னங்களைக் குறைந்தபட்சம், ஆலய வழிபாட்டிலாவது கடைப்பிடிக்க இந்த உடைக்கட்டுப்பாடு நிச்சயமாக உதவும். இறை வழிபாட்டைப் பொருத்தவரை நாம் இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ஆலயங்களில் உடைக் கட்டுப்பாடு என்கிற நல்லதொரு முடிவை நடைமுறைப்படுத்தி இருக்கும் இந்து அறநிலையத் துறையையும், அரசையும் பாராட்டும் அதேநேரத்தில் இன்னும் ஒரு வேண்டுகோள். இதேபோல, கோயிலுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிப்பதற்கும் தடை பிறப்பிக்க வேண்டும். கோயிலுக்குள் செல்லிடப்பேசி ஒலித்தால் அபராதம் விதிப்பது, செல்லிடப்பேசியில் படம் பிடித்தால் பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஆடைக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து அமல்படுத்த வேண்டும்!

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை

மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அட்டவணை விவரம் வருமாறு:-

10-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந் தேதி -பாதுகாப்பு, டைனமிக் ரீடெய்ல் உள்ளிட்ட தேர்வுகள்

2-ந் தேதி -அறிவியல்

3-ந் தேதி -தெலுங்கு, பிரெஞ்சு

5-ந் தேதி -ஓவியம்,

8-ந் தேதி -தமிழ்

10-ந் தேதி - சமூகஅறிவியல்

12-ந் தேதி - மனைஅறிவியல்

15-ந் தேதி -ஆங்கிலம்

19-ந் தேதி -கணிதம்

22-ந் தேதி -தட்டச்சு

28-ந் தேதி -ரஷ்ய மொழித்தேர்வு

12-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந்தேதி-ஆங்கிலம்

5-ந் தேதி - இயற்பியல்

8-ந் தேதி -வரலாறு

9-ந் தேதி- வேதியியல்

11-ந் தேதி- தமிழ்

12-ந் தேதி -என்ஜினீயரிங் கிராபிக்ஸ்

14-ந் தேதி - கணிதம், மைக்ரோ பயாலஜி

17-ந் தேதி - அக்கவுண்டன்சி

18-ந் தேதி -அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல்

19-ந் தேதி -விவசாயம்

21-ந் தேதி -உயிரியல்

26-ந் தேதி-

கம்ப்யூட்டர் சயின்ஸ்

28-ந் தேதி- உடற்கல்வி

31-ந்தேதி-பொருளாதாரம்

ஏப்ரல் 2-ந் தேதி

- உளவியல்

4-ந் தேதி- சமூகவியல்

7-ந் தேதி - புவியியல்

12-ந் தேதி

- மனை அறிவியல்

16-ந் தேதி -தத்துவ இயல்

22-ந்தேதி-என்.சி.சி.தேர்வு

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி,

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரோக்கர்-ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). பிளஸ்-2 படித்துள்ள இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். இவர் போலி சான்றிதழ் மூலமாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்ததாக வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியப்பன், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்ற புரோக்கரை சந்தித்ததும், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் பெயரில் ஆசிரியர் பயிற்சி முடித்ததைபோல ஒரு போலி சான்றிதழ் தயாரித்து முனியப்பனை அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்த்து விட்டதும் தெரியவந்தது. முதலில் நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்த முனியப்பன், பிறகு வேலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆனார். இதையடுத்து முனியப்பன், புரோக்கர் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலி சான்றிதழ்

இந்நிலையில் புரோக்கர் ராஜேந்திரன் மூலமாக போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பி.செந்தில்குமார். இவர் கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியாற்றி வருவதாக வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணி பதிவேடு மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கூச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர். கிருபா என்ற பெயரில் ஆதிதிராவிடர் என்று போலி சான்றிதழ் பெற்று சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராக செந்தில்குமார் பணியில் சேர்ந்து, பிறகு மாறுதல் ஆகி தற்போது வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விசாரணையில் அனைத்து சான்றிதழ்களும் புரோக்கர் ராஜேந்திரன் வழங்கியதும், அந்த சான்றுகள் வேறொருவருடையது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த செந்தில்குமாரை (37) போலீசார் நேற்று கைது செய்தனர். போலி சான்றிதழ் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான செந்தில்குமார், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதாகி உள்ள 3 பேருக்கும் மேலும் சில மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தடையற்ற சான்றிதழ் கேட்ட பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


logo

சென்னை,

தடையற்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம்

வேலூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளை, கே.டி. கல்வி அறக்கட்டளை, மதுரையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள், பி.எட். கல்வி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் விண்ணப்பித்தன.

இந்த நிலையில் அந்த கல்வி அறக்கட்டளைகளுக்கு கல்விக் குழுமத்தின் தென் மண்டல இயக்குனர் ஒரு நோட்டீசு அனுப்பினார். அதில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடையற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்காததால், ஏன் உங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

கல்வி விதிகள்

இந்த நோட்டீசை எதிர்த்து 3 கல்வி அறக்கட்டளைகளும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவை கோரின.

இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கல்வி விதிகளின்படி விண்ணப்பத்தோடு தடையற்ற சான்றிதழ் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வாரங்களுக்குள்

ஆனால் 3 கல்வி நிறுவனங்களும் நோட்டீசை பெற்றுக் கொண்டு அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக, அந்த நடவடிக்கையை செல்லத் தகாததாக செய்வதற்காக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்த நோட்டீசுக்கு பதிலளிக்க கல்வி அறக்கட்டளைகளுக்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுபோல தடையற்ற சான்றிதழ் கேட்டு கல்வி அறக்கட்டளைகள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் இன்னும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு பிரதமரின் பரிசு

logo

பொதுவாக புத்தாண்டு தினத்தன்று எல்லோரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள். சிலர் புத்தாண்டு பரிசுகளை வழங்குவார்கள். ஆனால், இந்த 2016–ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்தாகவும், பரிசாகவும் இந்திய நாட்டு இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல அறிவிப்பை அதாவது, இனி மத்திய அரசாங்க குரூப்–3 மற்றும் குரூப்–4 பணிகளுக்கு இண்டர்வியூ என்று சொல்லப்படும் நேர்முகத்தேர்வு கிடையாது. அவர்கள் இனி தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருக்கிறார். அதாவது, அவர்கள் படித்த படிப்பின் இறுதித்தேர்வில் பெற்ற மார்க்குகள் மற்றும் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கான ஒரு அடிப்படைக்கருத்தையும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இண்டர்வியூ என்றாலே பிரபலமானவர்களின் சிபாரிசு என்பதுதான் பொருள் என்று அனைவருக்கும் தெரியும். வலுவான பரிந்துரை இல்லாவிட்டால் தகுதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால்தான் குரூப்–3 மற்றும் குரூப்–4 பிரிவுக்கான பணிதேர்வுகளுக்கு இண்டர்வியூ வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

ஒருவர் தகுதி படைத்தவர் என்றால், அவருக்கு வேலை நியமனத்துக்கான உத்தரவு வீடு தேடி வரும். ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை இது. இந்த புதியமுறை ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசாங்க பணிகளோடு நின்று விடக்கூடாது, மாநில அரசுகளும் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றாத இண்டர்வியூ முறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். குரூப்–3 மற்றும் குரூப்–4 என்பது இளநிலைப்பணிகள்தான். இந்த பணிகளுக்குத்தான் ஏராளமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்குமேல் உள்ள பணிகள் அதிகாரிகள் பணிகள். எனவே, இந்த குரூப்–3, குரூப்–4 பணிகளுக்குத்தான் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். புதுமை இந்தியாவை படைக்கப் போகும் நுழைவு வாயில் இந்த பணிகள்தான்.

பள்ளிக்கூட படிப்பு காலத்தில் இருந்தே நான் படித்து முடித்தவுடன், இந்த வேலைக்குத்தான் போவேன் என்று ஒரு இலக்கோடு மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடருவார்கள். அப்போது தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும்வரை அந்த லட்சியத்தோடு இரவு–பகலாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். படித்து முடித்து வேலைக்கு முயற்சிக்கும் போது, தகுதியுள்ளவனுக்கு வேலை கிடைக்காமல் பணம் கொடுத்து, சிபாரிசு பெற்று தகுதி இல்லாதவன் அந்த பணிக்கு தேர்வானால், அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். தகுதியற்றவனுக்கு வேலை என்பதோடு முடிந்து விடுவது இல்லை. பணம் கொடுக்க வசதி உள்ளவனுக்கே வேலை என்று வேலைவாய்ப்புகள் விலை பேசப்பட்டால், அரசு நிர்வாகத்தில் ஆற்றல் இல்லாமல் போய்விடும். இதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து வேலைக்கு சேருபவன் கை சும்மா இருக்காது. வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வரை அவன் லஞ்சம் வாங்கிக் கொண்டே இருப்பான். அவனால் அவன் பணியாற்றும் அலுவலகமே ஊழலின் ஊற்றுக்கண்ணாகி விடும். அந்த வகையில், தகுதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள இளைஞர் சமுதாயமும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இருக்கக் கூடாது என்று லஞ்சத்தை எதிர்ப்போரும் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறார்கள். ஆனால், வெறும் மதிப்பெண்கள் மூலமும், எழுத்துத்தேர்வு மூலமும் ஒருவரது திறனாய்வை, உடனடி முடிவெடுக்கும் ஆற்றலை, நடத்தையை, தோற்றத்தை, உடல் திறனை கண்டுபிடிக்க முடியாதே என்று சொல்வோரும் உண்டு. ஆனால், ஒவ்வொரு பணியிலும் தகுதி காண்பருவம் என்று அதிகபட்சம் 2 ஆண்டுகள் உண்டு. அந்த காலகட்டத்தில் ஒருவரது பணி நிறைவளிக்க வில்லையென்றால், அவரை நிறுத்திவிட முடியும். எனவே, இந்த புதியமுறை பலனளிக்கக்கூடியதே, இதன் வெற்றியைப் பார்த்து மாநில அரசு பணிகளிலும் பிரதமர் வேண்டுகோளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

Saturday, January 2, 2016

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்



புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சிறப்பு வழிபாடு

திருவாரூரில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜ சாமி கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில், கீழவீதியில் பழனியாண்டவர் கோவில், துர்வாசகர் கோவில் அமைந்துள்ள பாலஅய்யப்பன் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சர்க்கரை விநாயகர் கோவில், காட்டூர் கீழத்தெரு மகா காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது. காலை முதல் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

பாத்திமா அன்னை ஆலயம் 

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டு தொடக்கத்தையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் பொதுமக்கள் வெடி, வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

நீடாமங்கலம் 

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. 

இதை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், கெஜலெட்சுமி சன்னதிகளில் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல்அலுவலருமான சாத்தையா, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் தக்காருமான சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளி உள்ள சங்கடஹர மங்கள மாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், குழந்தை பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் புத்தாண்டு விழா மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு


ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு


புதுடெல்லி,

சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நேரடியாக நுகர்வோர் வங்கி கணக்குக்கு செலுத்தும் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

இந்த திட்டத்தை சில வடமாநிலங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் செயல்படுத்த முன்வந்துள்ளன. அந்த பகுதிகளில் ஏப்ரல் 1–ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் அந்த பகுதிகளில் நுகர்வோர் வெளிமார்க்கெட் விலைக்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். அதற்கான மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்

logo

இந்தியா பண்டைய காலத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு, வடக்கே நாளந்தா பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டில் காஞ்சி பல்கலைக்கழகமும்தான். கி.பி. 5–ம் நூற்றாண்டில் இருந்து 12–13–ம் நூற்றாண்டுவரை நாளந்தா பல்கலைக்கழகம் பிரமாண்டமாக இயங்கியதற்கு சரித்திரச்சான்றுகள் இருக்கின்றன. இங்கு வெளிநாடுகளில் இருந்து எண்ணற்றோர் படிக்க வந்திருக்கிறார்கள். இதுபோல, காஞ்சீபுரத்தில் அதே காலகட்டங்களில் பல்கலைக்கழகம் இயங்கியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க, வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் படையெடுத்து வந்த காலம் போய், இப்போது நிறைய மாணவர்கள் சிறந்த கல்வியை நாடி வெளிநாடுகளுக்கு அலை, அலையாய் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற தகவல், மத்திய–மாநில அரசுகளைத் தட்டியெழுப்பும் தகவலாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச கல்வி நிறுவனம், சர்வதேச கல்வி பரிமாற்றம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2014–15–ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் கூடுதலாக வந்த சதவீதம்தான் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கவந்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட, 29.4 சதவீதம் அதிகமாக வந்திருக்கிறார்கள்.

இந்த கணக்குப்படி, இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 888 மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில், 80 சதவீத மாணவர்கள் என்ஜினீயரிங், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியல், வர்த்தக படிப்புகளைப் படிக்கவே சென்று இருக்கிறார்கள். அங்கு மட்டுமல்ல, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேப்போகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக அண்டை நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம், கல்வித்தரம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்ற எண்ணம் வளர்வதாகும். வசதி படைத்தவர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமல்லாமல், வசதி இல்லாதவர்கள்கூட வங்கிக்கடனை பெற்று வெளிநாடுகளுக்கு படிக்கச்சென்றுவிடுகிறார்கள். சிறந்த கல்விக்கும், நல்ல வேலைவாய்ப்பு தரும் செயல்முறை பயிற்சிக்கும் வெளிநாடுகளில் சீரிய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், உடனடியாக உயர்கல்வியில் மேலான மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் இன்னும் தீவிரமாக மத்திய–மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இந்தியாவில் 1992–ல்தான் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, இப்போதுதான் புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. உலகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டாலும், நமது கல்விக்கொள்கை மட்டும் மாற்றம் காணாமல் இருப்பது சரியல்ல. சர்வதேசதரத்துக்கு இணையான பாடத்திட்டங்களை இணைக்கும் வகையில், கல்லூரிப்படிப்பு இருக்கவேண்டும்.

ஒருகாலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நான் மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவன் என்று சொன்னால் தனி மதிப்பு இருக்கும் என்பார்கள். அத்தகைய நிலை மீண்டும் தோன்றவேண்டும். சர்வதேச அளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இல்லை என்பது வெட்கித்தலைகுனிய வைக்கிறது. அதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல் கல்லூரிகளில் உள்ள சோதனைக்கூட அட்டெண்டர்கள் நியமனம்வரை லஞ்சம் இல்லாத நியமனங்களாக, தகுதிபடைத்தவர்களாக நியமிக்கப்பட்டால், கல்வி நிச்சயமாக வளரும்.

தகுதிபடைத்த ஆசிரியர்கள், தரமான கல்வி என்றால் போதும், வெளிநாட்டுக் கல்வி இங்கேயே கிடைத்துவிடும். உயர்கல்விகளில் சிறந்த கல்வியாளர்கள் வேண்டும். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி கொண்டதாக இருந்தால் நல்லது. புதிய கல்விக்கொள்கை இதையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

வி.எஸ்.ராகவன்10 ....i ராஜலட்சுமி சிவலிங்கம்



பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் (V.S.Raghavan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கத்தில் (1925) பிறந்தவர். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு புனித கொலம்பஸ் பள்ளி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். தந்தை மறைவுக்குப் பிறகு, தாயுடன் புரசைவாக்கத்தில் அக்கா வீட்டில் வசித்தார்.

l சிறு வயது முதலே நாடகங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிய நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார். பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். துமிலன் நடத்திய ‘மாலதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ஓர் அச்சகத்தில் வேலை செய்தபோது, சக ஊழியர்கள் நடத்திய நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் நாடக கம்பெனி தொடங்கினார். சென்னையில் பல இடங்களில் நாடகங்களை இந்த கம்பெனி நடத்தியது.

l கம்பெனி மூடப்பட்ட பிறகு கே.பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்தார். ‘நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். சினிமாவில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்தார். இவர் நடித்த ‘வைரமாலை’ என்ற மேடை நாடகம் 1954-ல் திரைப்படமாகத் தயாரானது. நாடகத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இவரது முதல் திரைப்படம்.

l தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக் குரல்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்த மாளிகை’, ‘சுமை தாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

l 30-35 வயது இருக்கும்போது, ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். ‘உலக அளவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன்’ என்று அடிக்கடி கூறுவார்.

l நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, ‘எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஃபில்டர் காபி’ என்றவாறே நுழைவாராம். ‘‘அவரைப் போன்ற அபாரமான நடிகர், அற்புதமான மனிதரைக் காண்பது அரிது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். நாடக மேடையில் இருந்து என்னை சினிமாவுக்கு கொண்டுவந்தது நாகேஷ்தான் என்றும் சொல்வார்.

l திரைத்துறையில் 60 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். எம்ஜிஆர், சிவாஜி, பின்னர் ரஜினி, கமல் மட்டுமல்லாது, அஜித், விஜய், விமல் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

l சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அவ்வாறே, கடைசிவரை நடித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

l அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர். நினைவாற்றல் மிக்கவர். 1000-க்கும் அதிகமான படங்கள், ஏராளமான நாடகங்கள் என வெற்றிகரமான நடிகராக வலம் வந்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்த வி.எஸ்.ராகவன் 2015-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 90-வது வயதில் காலமானார்.

விவரங்கள் சரிபார்ப்பு: வெள்ள நிவாரணம் கிடைப்பது எப்போது? - வருவாய்த் துறையினர் தகவல்

Return to frontpage

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு விவரங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மேலும், ஏற்கெனவே நிவாரணம் பெற்றவர்கள், எதற்காக நிவாரணம் பெற்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களும் தொகுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால், பொங் கலையொட்டி, நிவாரணம் மற்றும் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் கடலூர் மாவட்டங் களில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெய்த கனமழையால், பெரும் பாலான பகுதிகள் பாதிக்கப் பட்டன. இதன் காரணமாக, லட்சக்கணக்கானவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இதையடுத்து, வெள்ள நிவாரணமாக குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், மற்ற வீடுகளில் 2 நாட்கள் மழைநீர் சூழ்ந்திருந்தால் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, வெள்ள நிவாரண கணக்கெடுப்பு முடிக்கப் பட்டு, தற்போது தகவல்கள் தொகுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.

முன்னதாக, வெள்ள நிவாரண கணக்கெடுப்பின்போது, பெயர், வங்கியின் பெயர், கணக்கு எண், கிளை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. அந்த விவரங்களை சரிபார்க்கும்போது சிலரது பெய ரும் வங்கிக்கணக்கும் பொருந்த வில்லை. சிலர் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை. எனவே இந்த விவரங்களை பெறும் முயற்சியில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

கணக்கெடுப்பின்போது சம்பந் தப்பட்ட குடும்பத் தலைவரின் கைபேசி எண்ணை பெற்றுள்ள தால், அந்த எண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் பெயரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் வங்கிக்கணக்கு பொருந் தாதவர்களுக்கு, ‘குடும்பத் தலை வரின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் பொருந்த வில்லை. எனவே, கணக்கு வைத்திருப்பவர் பெயர், வங்கியின் பெயர், கிளை, வங்கிக்கணக்கு எண் விவரத்தை இதே கைபேசியில் இருந்து ‘98401 31067’ என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்பவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கு எண் அளிக் காதவர்களுக்கு, பெயர், வங்கியின் பெயர், எண், கிளை விவரங்களை தெரிவிக்குமாறும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், கணக்கெடுப்பின்போது விவ ரங்கள் அளித்த பயனாளி களுக்கு உரிய நிவாரணம் சென்ற டையும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

‘வாட்ஸ் அப்’ குழப்பம்

அந்த குறுஞ்செய்தி தற்போது ‘வாட்ஸ் அப்’பில் பரவி வரு கிறது.

இதுதொடர்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘வாட்ஸ் அப் பார்த்து தகவல் அனுப்பினால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, யாருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளதோ அவர்கள் மட்டும் விவரங்களை அளித்தால் போதும்’ என்றார்.

Friday, January 1, 2016

புத்தாண்டுக் கொண்டாட்ட விநோதங்கள் .......... சைபர் சிம்மன்


புத்தாண்டு என்றதும் நள்ளிரவுக் கொண்டாட்டமும், வாணவேடிக்கையும் வாழ்த்துப் பரிமாற்றங்களும் நினைவுக்கு வரலாம். அமெரிக்காவின் நியூயார்க் நகரச் சதுக்கம், பாரிஸ் ஈஃபெல் கோபுரம், ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகம் ஆகியவை புத்தாண்டுக் கொண்டாட்ட‌த்திற்கான புகழ் பெற்ற இடங்களாக இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால் உலகம் முழுவதும் புத்தாண்டு எத்தனை விதமாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

அதாவது பல நாடுகளில் புத்தாண்டை வரவேற்க விதவிதமான வழக்கங்கள் கொண்டிருக்கின்றனர் தெரியுமா? இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு தொடர்பாக உள்ள விநோதமான கொண்டாட்ட வழக்கங்களை 'தி லிட்டில் திங்ஸ்' இணையதளம் பட்டியலிட்டுள்ளது:

இதன்படி தென்னமெரிக்க நாடான ஈக்வேடாரில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் உருவ பொம்மைகளை எரிக்கின்றனராம். இதன் மூலம் கடந்த ஆண்டின் தீமை ஒழியும் என்பது நம்பிக்கையாம். இதேபோல சுவிட்சர்லாந்து நாட்டில் தரையில் ஐஸ்கிரீமை சிந்துகின்றனராம். இது அதிர்ஷ்ட‌த்திற்கு வழி வகுக்கும் என்பது நம்பிக்கையாம்.

ஸ்பெயின் நாட்டில் அனைவரும் தொலைக்காட்சி முன் அல்லது பொதுச் சதுக்கங்களில் கூடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்போது சிவப்பு உள்ளாடை அணிந்து கையில் ஒரு கோப்பைத் திராட்சைப் பழங்களையும் வைத்திருப்பார்கள். புத்தாண்டு மணி 12 முறை ஒலிக்கும் போது 12 திராட்சகளை விழுங்கினால் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் நீடிக்குமாம்.

டென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும்போது நாற்காலியிலிருந்து குதிப்பதையும், பக்கத்து வீட்டில் தட்டை வீசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் நட்பு தழைக்கும் என்பது நம்பிக்கை. எஸ்டோனியா நாட்டில் 7, 9 மற்றும் 12 எண்கள் ராசியானவையாக கருதப்படுவதால் இத்தனை முறை சாப்பிட முடிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.

காற்றில் கலந்த இசை - 36: பருவங்களின் கூட்டிசை!....வெ.சந்திரமோகன்

Return to frontpage




இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடிக்கும் பாக்கியம் மோகனுக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்றும் மோகன் ஹிட்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் சிடிக்களில் அவரது படத்தைவிடப் பெரிய அளவில் சிரித்துக்கொண்டிருப்பது இளையராஜாதான். தமிழ்த் திரை இசையின் வசந்த காலமான 80-களில் மோகனை நாயகனாக வைத்து ஆர். சுந்தர்ராஜன், கே. ரங்கராஜ் என்று பல இயக்குநர்கள் ‘இனிய கானங்கள் நிறைந்த படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான இயக்குநர் மணிவண்ணன். ‘திரில்லர்’, குடும்பக் கதைகள், அரசியல் விமர்சனம் என்று பல்வேறு வகைப் படங்களை இயக்கிய மணிவண்ணன், இறுதிவரை இளையராஜாவின் மீது பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார். 1983-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘இளமைக் காலங்கள்’ படத்தின் பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. கோவைத் தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்’ஸின் இரண்டாவது தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘இசை மேடையில் இன்ப வேளையில்’ பாடல் முகப்பு இசை தரும் சுகந்தம் செழுமையானது. வசந்தத்தை மீட்டும் பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். ஹம்மிங்கின் மேலடுக்கில் ஜானகியின் அதிரசக் குரல் சிணுங்கும். பள்ளத்தாக்கின் மீது படர்ந்திருக்கும் காற்றில், சிறகை அசைக்காமல் பறந்துகொண்டிருக்கும் பறவையைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக் கோவையைத் தொடர்ந்து, ‘இசை மேடையில்…’ என்று பாடத் தொடங்குவார் ஜானகி.

பல்லவியின் சில நொடிகளில் எஸ்.பி.பி.யின் மெல்லிய ஹம்மிங் வந்துபோகும். இளமையின் உற்சாகத்தை உணர்த்தவோ என்னவோ குதிரைக் குளம்பொலியைப் போன்ற தாளக்கட்டை இப்பாடலுக்குத் தந்திருப்பார் இளையராஜா. நிரவல் இசை முழுவதும் வயலின்களின் ராஜாங்கம்தான். முகப்பு இசையில் பயன்படுத்தியதுபோலவே இரு வேறு அடுக்குகளில் ஜானகியின் ஹம்மிங்கையும், பெண் கோரஸ் குரல்களையும் ‘மிக்ஸிங்’ செய்திருப்பார் ராஜா.

மோகன் இளையராஜா கூட்டணியின் முக்கியக் கண்ணி எஸ்.பி.பி.யின் குரல். இந்தப் பாடலில் அதை உறுதியாக நிரூபித்திருப்பார் எஸ்.பி.பி. ‘முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்’ எனும் வரியின் இறுதியில் சின்ன பிர்கா ஒன்றைத் தருவார். ‘கொன்னுட்டான்யா’ என்று தோன்றும். இரண்டாவது நிரவல் இசையில் ‘பாப்பபப பாப்பப’ எனும் ஹம்மிங்கை ஜானகி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் ஆண் தன்மையும், பெண்ணின் இனிமையும் கலந்த குரலாக ஒலிக்கும். அது ஜானகியின் ஹம்மிங்கா, எஸ்.பி.பி.யுடையதா என்று குழம்பாமல் அப்பாடலைக் கடந்துவர முடியாது. அந்த அளவுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களைத் தனது இசையில் இளையராஜா புகுத்திய காலம் அது.

இப்படத்தில் ஷைலஜா பாடும் ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ’ பாடல், அக்கால ‘ஆடம் டீஸிங்’ பாடல்களில் ஒன்று என்றாலும், வேகமான அதன் தாளக்கட்டும் ஷைலஜாவின் கூர்மைக் குரலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

இப்படத்தில் சுசீலாவுடன் ஷைலஜா இணைந்து பாடும் ‘ராகவனே ரமணா ரகுநாதா’ பாடலில் பஜன் பாடல்களுக்குரிய பக்தி மணமும், காதல் ரசமும் ஒரு புள்ளியில் இணைவதை உணரலாம். நிதானமான தாளக்கட்டில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவிகளுடன் தனது வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் முத்திரையை இணைத்து இளையராஜா உருவாக்கிய பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில் வயலின் இசைக் கோவையின் மேலடுக்கில் ஒலிக்கும் சுசீலாவின் ஆலாபனை, இப்பாடலின் உச்சபட்ச இனிமைத் தருணம்.

இப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் காதல் சோக கீதம் இது. தாளக்கட்டில் மிருதங்கத்தின் ஒரு துளி, முதல் நிரவல் இசையில் கனத்த நெஞ்சின் விம்மலைப் போன்ற வயலின் கீற்று, விரக்தியை வெளிப்படுத்தும் விசில் என்று இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் இசை நுணுக்கங்களைப் புதைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் பனியால் உருவான மேகத்தின் நகர்வைப் போன்ற வயலின் இசைக் கோவை, நம்மைத் தழுவியபடி நகர்ந்து செல்வதை உணர முடியும்.

இப்படத்தின் மிக முக்கியமான, அற்புதமான டூயட், ஜேசுதாஸ் சுசீலா பாடிய ‘பாட வந்ததோர் கானம்’ பாடல். சுசீலாவின் ‘லாலலா’வுடன் தொடங்கும் இப்பாடலிலும் தாளக்கட்டில் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பல்வேறு இசைக் கருவிகளின் நடுவே பியானோவைப் பிரதானமாக ஒலிக்கச் செய்த அரிதான பாடல்களில் ஒன்று இது.

பல்லவியிலிருந்தே பியானோவின் உரையாடல் தொடங்கிவிடும். முதல் நிரவல் இசையில் விண்கல்லின் வீழ்ச்சியைப் போன்ற ஒற்றை வயலின் நீட்சி ஒலிக்கும். சரணத்தில், ‘கண்ணில் குளிர்காலம்… நெஞ்சில் வெயில் காலம்’ எனும் வரியின்போது அந்த இரண்டு பருவங்களையும் இசையாலேயே உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாந்தமான அமைதியுடன் ஜேசுதாஸும், காதலின் பரவசத்தை வெளிப்படுத்தும் குரலில் சுசீலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.

இளையராஜா பாடல்களின் உடனடி வெற்றிக்கு, தனித்த சுவை கொண்ட மெட்டுக்கள் காரணம் என்றால் 30 ஆண்டுகள் தாண்டியும் அவை ரசிகர்களின் மனதில் வியாபித்திருப்பதற்குக் காரணம், வெவ்வேறு மனச் சித்திரங்களை எழுப்பும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் `பான்’ கட்டாயம்: ஹோட்டல் பில்களுக்கு உத்தரவு இன்று முதல் அமல்

Return to frontpage

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல் பில்களுக்கு நிரந்தர கணக்கு என் (பான்) கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்புது உத்தரவு புத்தாண்டு முதல் (ஜனவரி 1) அமலுக்கு வருகிறது.

நிரந்தர கணக்கு எண் தற்போது பல்வேறு நிலைகளில் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோர் கட்டாயம் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரம் அளிக்க வேண்டும். கடன் அட்டை மூலம் இத்தொகை செலுத்தப்பட்டாலும் கட்டாயம் பான் எண் விவரம் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதேபோல ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட அசையா சொத்துகளை பரிவர்த்தனை செய்தாலும் பான் எண் அவசியமாகும். சிறிய அளவில் முதலீடு செய்து வீடு வாங்குவோருக்கு இது ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். முன்னர் இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறித்த கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்வோர் கட்டாயம் பான் எண் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத பிற நிதி நிறுவனங்களில் (என்பிஎப்சி) முதலீடு செய்வோரும் பான் விவரத்தை அளிக்க வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் வரையிலான தொகையைச் செலுத்தி கேஷ் கார்டு மற்றும் முன்கூட்டி பணம் செலுத்தி பெறும் பிற வசதிகளைப் பயன்படுத்துவோரும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ரூ.1 லட்சத்துக்கு மேலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் பான் விவரத்தை அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குக ளுக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) அவசியம் அளிக்க வேண்டும். பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு மட்டும் இது அவசியம் இல்லை.

சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரூ.2 லட்சத்துக்கு மேலான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அதாவது ரொக்கமாகவோ அல்லது கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டால் பான் அட்டை விவரம் கட்டாயம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

2015-16-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

தற்போது இது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான ரூ. 5 லட்சத்தைவிட இது குறைவாகும்.

வங்கிகளில் ரொக்கமாக ரூ. 50 ஆயிரம் செலுத்துவது, காசோலை மற்றும் வரைவோலை பெற ஒரே நாளில் ரூ.50 ஆயிரமோ அதற்கு மேலோ செலுத்துபவர்கள் பான் அட்டை விவரத்தை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு தொடங்கினால் அந்த கணக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் பான் அட்டை விவரத்தை தாக்கல் செய்யத் தேவை யில்லை.

இது தவிர எந்த வங்கியில் கணக்கு தொடங்கினாலும் குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் தொடங்கினாலும் பான் அட்டை விவரத்தைத் தாக்கல் செய்ய முடியும்.

UGC asks varsities to adopt online admission process


The University Grants Commission has urged universities – private and public - to adopt online admission system for all programmes offered by them from the next academic year.

The aim is to ensure greater efficiency and promote transparency, besides enabling parents and students to make informed choices, the UGC has said in its notice.

Though professors feel that the system would not only usher in a paperless admission process but also bring about some amount of transparency, they are uncertain if it can be implemented immediately.

While Anna University and the Tamil Nadu Dr. MGR Medical University have in place a single window admission process, they also allow candidates to purchase application forms. Thousands of candidates purchase the hard copy of the forms. The 11 State-run arts and science universities have started publishing exam results online, but many candidates rely on hard copy of application forms even in autonomous colleges.

A few years ago government colleges implemented the single-window system of admission. This has cut the cost on application forms for students, says P. Sivaraman, president of the Government College Teachers Manram.

During her tenure as Vice-Chairperson of the Tamil Nadu State Council for Higher Education Cynthia Pandian had tried to introduce single-window system of admission for postgraduate programmes in arts and science colleges. “She had wanted all universities to sent particulars but no one responded,” recalls K. Pandiyan, former State president of Association of University Teachers.

In the 1980s, the government issued an order empowering regional joint director to receive details of admission from colleges on a daily basis during the season. The order also specifies that colleges should submit admission particulars subject-wise and community-wise.

Colleges should display vacancies on the notice board too. “Yet, for the last 15 years no college has followed the rule,” Prof. Pandiyan says, adding that universities should not have trouble implementing the notice as already hall tickets and exam results are issued online. But he wonders how private institutions would react.

The Registrar of a private university in South Chennai points out that such a system would work only for programmes that admit without entrance exams. “It is a good idea but applicability is the issue. We are thinking about taking counselling online but it is in the preliminary stages,” the official informs.

UGC Vice Chairman H. Devaraj, however, says the aim is to expedite the admission process, bring in transparency and create a database.

HAPPY NEW YEAR 2016


சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்,,,dinamani

சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்

First Published : 01 January 2016 01:03 AM IST
சென்னை வெள்ள நிவாரணத்துக்காக சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் சார்பில் 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்நாட்டைச் சேர்ந்த "மீடியா கார்ப்' என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தி: சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு "மீடியா கார்ப்' நிறுவனத்தின் கீழ் இயங்கும் வசந்தம் தொலைக்காட்சியும், ஒலி பண்பலை அலைவரிசையும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டன. "லிட்டில் இந்தியா ஷாப்கீப்பர்ஸ்', "ஹெரிடேஜ் அúஸாசியேஷன்' உள்ளிட்ட நிறுவனங்களும் அந்தப் பணிகளில் இணைந்து பணியாற்றின.
 ஹிந்து அறக்கட்டளை வாரியம், நற்பணி பேரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவுவிடுதிகள் சங்கம், சிங்கப்பூர் தமிழ் சமூகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் நிவாரண நிதி திரட்டும் பணிகளுக்கு பெரும் பங்காற்றின.
 இதுவரை 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சென்னை வெள்ளத்துக்கு நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

வணிகப் பொருளாகிவிட்ட வாடகைத் தாய்கள்

Dinamani


By ரமாமணி சுந்தர்

First Published : 30 December 2015 01:02 AM IST


திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைப் பேறு கிட்டாத தம்பதிகளுக்கு இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்பங்கள் (Assisted Reproductive Technology) வரப்பிரசாதமாக விளங்குகின்றன. குழந்தையின்மை மருத்துவத்தில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த கண்டுபிடிப்பு, IVF (in vitrofertilization) எனப்படும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் தொழில்நுட்பம்.
1978-ஆம் ஆண்டு ஜூலை மாதம், IVF செயற்கைக் கருவூட்டல் முறையைப் பயன்படுத்தி உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பிறக்க வைத்தார் இங்கிலாந்து நாட்டு மகப்பேறு மருத்துவர் பேட்ரிக் ஸ்டேப்டேயும், விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சும். (இவர் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்).
இந்த மருத்துவ அதிசயம் நடந்த இரண்டே மாதங்களில், இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை நமது நாட்டில் பிறக்கச் செய்து சாதனை புரிந்தார் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் முகோபாத்யாய்.
செயற்கைக் கருவூட்டல் முறையில், பெண்ணின் சினைப்பை முட்டை தூண்டப்பட்டு, அது வெளியே எடுக்கப்பட்டு, ஆண் விந்து அணுவுடன் சேர்த்து கருவை உருவாக்கி, உருவான கருவை குறிப்பிட்ட நாள்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்து, பிறகு வளர்ந்த கரு தாயின் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது.
இந்த செயற்கைக் கருவூட்டல் முறையின் வெற்றிதான், ஒரு பெண்ணின் கருப்பைக்கு குழந்தையைப் பத்து மாதங்கள் சுமப்பதற்கான சக்தி இல்லாமல் இருந்தால்,அல்லது வேறு ஏதாவது மருத்துவச் சிக்கல் இருந்தால், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, அவள் மூலம் குழந்தையைப் பெற முடியும் என்பதைச் சாத்தியமாக்கியது. இதுவே, வாடகைத் தாய் என்ற கருத்திற்கு வித்திட்டது.
1986-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாடகைத் தாயின் மூலம் உலகின் முதல் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது. இந்தியாவில், 2001-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டில் வாழும் இந்திய தம்பதியருக்காக வாடகைத் தாய் ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில்தான் வாடகைத் தாய் சேவை மையங்கள் அதி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன
தற்பொழுது தில்லி, மும்பை, சென்னை போன்ற எல்லா பெரு நகரங்களிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களுக்கும், வாடகைத் தாய் சேவைக்கும் பஞ்சமில்லை என்றாலும், நமது நாட்டில் வாடகைத் தாய் சேவைக்கு பிரசித்தி பெற்ற இடம் குஜராத் மாநிலத்திலுள்ள ஆனந்த் எனும் ஊர்தான்.
நாட்டில் பால் தட்டுப்பாடு என்பதை அறவே மறக்கச் செய்து வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட ஆனந்த், இன்று பல தம்பதியருக்கு, குறிப்பாக வெளிநாட்டினருக்கு, குழந்தை பாக்கியத்தை அளித்து அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. வாடகைத் தாய்களின் சுற்றுலாத் தலமாக மாறி விட்ட ஆனந்த், கடந்த பத்தாண்டுகளில், செயற்கைக் கருவூட்டல் மையங்கள், வெளிநாட்டினர் தங்குவதற்கான விடுதிகள், உணவகங்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் வணிக வளாகங்கள் என மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சுமார் இரண்டு லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஆனந்தில், 5 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் துறையில் உள்ளனர். சுமார் ஆயிரம் பெண்மணிகள் தங்கள் சினை முட்டைகளைத் தானமாக வழங்குவதிலும், தங்கள் கருப்பையை வாடகைக்கு விற்று குழந்தையைப் பெற்றுக் கொடுப்பதிலும், பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரையில் தாய்ப் பால் புகட்டி வளர்ப்பதிலும், ஈடுபட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகர்களான ஆமிர் கானும், ஷாருக் கானும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை ஒன்றைப் பெற்றது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். இப்படி ஒரு சில இந்தியர்களும் வாடகைத் தாய்களின் சேவையை நாடுகிறார்கள் என்றாலும், இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில், வாடகைத் தாயின் சேவையை நாடும் உள்நாட்டு தம்பதியரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களும் மட்டுமல்லாது, அயல் நாட்டவர்களும் வாடகைத் தாயைத் தேடி இந்தியாவிற்கு வருவதற்கான காரணம் என்ன?
இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், வேறு ஒரு பெண்மணி மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை, குறிப்பாக வர்த்தக ரீதியாக, குழந்தை பெற்றுக் கொள்வதை சட்டம் தடை செய்கிறது.
நமது நாட்டில் வாடகைத் தாய்களின் மூலம் குழந்தை பெறுவதற்கு தடையொன்றும் இல்லை. இதுவே பல்வேறு நாடுகளிலிருந்து தம்பதிகள் இந்தியாவை நோக்கி வருவதற்கு முக்கியக் காரணம். நமது நாட்டின் நவீன மருத்துவ தொழில்நுட்பமும், ஆங்கிலம் பேசும் மருத்துவர்களும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டினரை இந்தியா ஈர்ப்பதற்கான மேலும் சில காரணங்கள்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும், நமது நாட்டில் பணத்திற்காக தங்கள் சினை முட்டைகளை தானம் செய்வதற்கும், கருப்பையை வாடகைக்கு விடுவதற்கும் பல ஏழை, எளிய பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, வாடகைத் தாயாக செயல்பட்ட பெண்மணிகளில் பலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலான வாடகைத் தாய்கள், வீட்டு வேலை அல்லது கட்டடப் பணிகளில் கூலி வேலை செய்பவர்கள் அல்லது செயற்கைக் கருவூட்டல் மருத்துவ மனைகளில் பணியாற்றும், செவிலித் தாய்கள்.
ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெற்றோர்கள் தங்களுக்காகக் குழந்தையைச் சுமக்கும் பெண்ணிற்கு நான்கு அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரையில் ரொக்கப் பணம் கொடுக்க வேண்டும். இதைத் தவிர, பிரசவம் ஆகும் வரையில் மாதா மாதம் சத்துள்ள உணவு, மருந்து மாத்திரைகள், மற்றும் பிரசவத்திற்கான செலவு என்று எல்லா செலவுகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தம்பதியரே கவனித்துக் கொள்ள வேண்டும்.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவச் செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.
தற்பொழுது நமது நாட்டில் வாடகைத் தாய் வர்த்தகம் ஆண்டொன்றிற்கு சுமார் 900 கோடி ரூபாயிலிருந்து 1,300 கோடி வரையில் புழங்கும் தொழிலாக வளர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படி, கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்களுக்கு, சமீபத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வர்த்தக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கவில்லை என்று அறிவித்ததோடல்லாமல், அயல் நாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் தடை செய்துள்ளது. இனப் பெருக்கத்திற்கு உதவும் நாட்டிலுள்ள எல்லா தொழில்நுட்ப மையங்களுக்கும் சென்ற அக்டோபர் 27-ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தடை உத்தரவு அனுப்பியுள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்கு வந்து வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெறுவதில், குழந்தையை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான கடவுச் சீட்டு, விசா போன்றவைகளைப் பெறுவது போன்ற பிரச்னைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
வாடகைத் தாய் தங்களுக்காக பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்த அந்த பத்து மாத காலத்திற்குள், அதன் ஜப்பானியப் பெற்றோர் விவாகரத்து செய்து விட, தனக்கு அக்குழந்தை வேண்டாம் என்று தாய் முடிவெடுக்க, அந்தப் பெண் குழந்தையை தந்தை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதி அளிக்காததால் தர்ம சங்கடமான நிலைமை உருவாகியது அனைவரும் அறிந்ததே!
பணம் படைத்த அயல் நாட்டினர், நமது ஏழை எளியப் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. நமது பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் உடலுக்கு கூறு விளைவித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்தத் தொழிலில், வாடகைத் தாய்கள், குழந்தையின் பெற்றோர்கள் போடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு குழந்தையை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்களாகவும், குழந்தைகள் விற்பனைப் பொருளாகவும் ஆகி விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணிற்கும், பணத்திற்காக குழந்தையைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பு பெண்களும் பயனடைகிறார்களே, இதில் என்ன தவறு? என்று கேட்கிறார்கள் மற்றொரு சாரார்.
இன்று நாட்டில் பெருகிவரும் மருத்துவச் சுற்றுலாவில், வாடகைத் தாய் தொழிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு கணிசமான அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலை தடை செய்ய வேண்டுமா என்றக் கேள்வியும் எழாமல் இல்லை.
செயற்கைக் கருவூட்டல் மற்றும் வாடகைத் தாய் தொழில்களுக்கான விதிமுறைகளை எடுத்துரைக்கும், இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) மசோதா 2014, இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இதில் குறிப்பிட்டுள்ள விதி முறைகளைக் கடைப்பிடித்து, வாடகைத் தொழிலை, ஒழுங்குபடுத்தி, வெளிநாட்டவர் வாடகைத் தாயைப் பயன்படுத்துவதற்கானத் தடையை நீக்கினால், வாடகைத் தாய்களின் சேவையின் மூலம் பலரும் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை.
தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவ செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.

Wednesday, December 30, 2015

எதிர்ப்பலையை 'உணர்ந்து' தேர்தல் களம் காணும் அதிமுக! .....தமிழக செய்திப் பிரிவு

Return to frontpage

ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்ப்பு அலைக்கு நிகரான உணர்வு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்."

கூட்டணி முயற்சிகள், கட்சிகளின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகள் என தமிழக தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.

அதிமுகவும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் அதிமுக மீதான மக்கள் நம்பிக்கையையும் அடித்துச் சென்றதாக கட்சியினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டது.

அதிமுகவினர் சிலரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதை முதல் முறையாக நாங்கள் சமீபகாலமாக பார்க்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதாகி சிறையில் இருந்தபோது அதிமுகவினர் திக்கற்று நிற்பதுபோல் உணர்ந்தனர். ஆனால், அவர் விடுதலையான பிறகு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையும் புது உத்வேகமும் பிறந்தது.

ஆனால், வரலாறு காணாத மழை நிலைமையை புரட்டிப் போட்டுவிட்டது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மக்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. "ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்ப்பு அலைக்கு நிகரான உணர்வு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்" என்று ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும்போது, "மழை, வெள்ள பாதிப்புகள் மீது அரசு காட்டிய மெத்தனத்தால் அதிமுகவின் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், மக்கள் அதிருப்தி திமுகவுக்கு சாதகமாக அமையும் எனக் கூற முடியாது. மக்கள் நலக் கூட்டியக்கத்துக்கு ஓரளவு சாதகம் ஏற்படலாம்" என்றார்.

அதிமுகவின் நாஞ்சில் சம்பத் கூறும்போது, "மக்களின் கோபம் நியாயமானதே. ஆனால் அது மிகவும் தற்காலிகமானதே. வரலாறு காணாத மழையை மக்கள் எதிர்கொள்வது கடினமே. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூறியது அவர்கள் உள்ளங்களை தொட்டுள்ளது" என்றார்.

ஆனால், சமூக வலைதளங்களில் ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கட்சிக்குள்ளும் அதிருப்தி

மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் கிளம்பியிருப்பது ஒருபுறம் இருக்க கட்சிக்கு உள்ளேயும் அதிருப்திகள் நிலவுகிறது. தேனி, கோயமுத்தூர் போன்ற அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாகக் கூறுகின்றனர்.

அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களே மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு முன்னிறுத்துவதால் கட்சியில் பல ஆண்டுகளாக தொண்டாற்றியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என சிலர் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்து ஒருவர் கூறும்போது, "அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. ஆனால் இதை அம்மாவிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்" என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மற்றொரு மூத்த தலைவர் , "கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும்கூட அமைச்சரவையில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். இது முழுக்க முழுக்க அம்மாவின் முடிவு. அம்மாவுக்காகவே மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கின்றனர். மாவட்ட, மாநகர பிரமுகர்களுக்காக யாரும் வாக்களிப்பதில்லை" என்றார்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர். 2006 தேர்தல் வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றியுள்ளதால் இந்த மாவட்டங்களில் அதிமுக வெற்றி நிச்சயம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஈரோடு அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது விலையில்லா மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு ஆகியன எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்கிறார்.

நலத்திட்டங்களால் நன்மையடைந்த பெண்கள் வாக்கும், முதல் முறை வாக்காளர்கள் வாக்கும் தங்களுக்கே என அடித்துச் சொல்கின்றனர் சில அதிமுகவினர்.

கூட்டணி கணக்கு:

தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவுக்கு கூட்டணி அமைப்பதில் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பாஜகவுடன் கூட்டணி அமைப்பது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக பாஜக தொடர்ந்து மறுத்து வந்தாலும், மத்தியில் இருந்து எவ்விதமான மறுப்பும் வரவில்லை. இதனால் பாஜகவுடனான கூட்டணி வாய்ப்பு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

பாஜக இல்லாவிட்டால் அதிமுக, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், இந்த கூட்டணி அமைவதற்கான பணிகள் துவங்குவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

தேர்தல் கூட்டணி கணக்குகள் எப்படி இருக்கும் என இப்போதைக்கு கணிக்க முடியாத நிலையில் கட்சி வட்டாரத் தகவலை வைத்து பார்க்கும்போது மக்கள் மத்தியில் அதிமுக எதிர்ப்பலைகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

புத்தாண்டின் புதுவரவு 4-ஜி

புத்தாண்டின் புதுவரவு 4-ஜி

COMMENT   ·   PRINT   ·   T+  
1
தொலைத் தொடர்பு சேவைகளின் தேவை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. கையிலிருக்கும் ஸ்மார்ட்போனின் திரைகளை மேலும் கீழுமாக நகர்த்தும் நொடிக்குள் இருக்கிறது நமது தொழில்நுட்ப வேகம். தொழில்நுட்ப வளர்ச்சியின் இந்த வேகம்தான் தகவல்களை நமது உள்ளங்கையில் கொண்டு வந்து கொட்டுவதற்காக உலகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது இணைய உலகின் வேகம்தான் அந்த சேவையை கொண்டுவந்து தரும் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக உள்ளது.
10 ஆண்டுகள்
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது வேகம் நிகழ்கிறது. 1991க்கு முன்னர் இருந்த தொலைத்தொடர்பு சேவைகளை முதல் தலைமுறை தொழில்நுட்பம் (1ஜி) என்று குறிப்பிடலாம். 1991க்கு பிறகுதான் 2ஜி தொழில்நுட்பம் அறிமுகமானது. இதற்கு பிறகுதான் சிக்னல் குறைவான இடத்திலும் தொடர்புகள் கிடைப்பது, குறுஞ்செய்திகள், புகைப்படம் அனுப்புவது மற்றும் தரமாக குரல் வசதிகள் கிடைத்தன.
இதற்கு பிறகு ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட அலைவரிசை முயற்சிகள் நடந்தன. 2.5ஜி, 2.75ஜி என 1999 வரை தொலைத்தொடர்பு அலைவரிசைகளில் முயற்சிகள் இருந்தன. இதற்கடுத்த தொழில்நுட்ப முயற்சியாக 3ஜி தொழில்நுட்ப சேவைகள் 2001ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் முன்பைவிட தரமான குரல் வசதி, பாதுகாப்பு, வீடியோ அழைப்புகள், மொபைல் டிவி போன்ற சேவைகள் கிடைக்கப்பெற்றன.
4ஜி
2011 முதல் நான்காம் தலை முறை தொழில்நுட்பமாக 4ஜி அறிமுக மானது. 3ஜி-யை விட வேகம் அதிகமானது. தற்போது பெரிய நகரங் களில் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தங்களது அலைவரி சைகளை பயன்படுத்திக் கொள்ள கூட்டு வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 4ஜி- யின் வேகம் அதிக சிக்னல் கிடைக்கும் இடங்களில் (High Mobility) அதிக பட்சம் 100Mbps தரவிறக்கம், - 50Mbps தரவேற்றம் செய்யலாம். குறைவான சிக்னல் உள்ள இடங்களில் (Low Mobility) 1Gbps-ல் டேட்டாவும் பெற முடியும்.
2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax என்கிற தொழில்நுட்பத்துடன் முதன் முதலில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து இதர நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. உலக அளவில் 4ஜி சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடு தென் கொரியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு இந்தியா ஈடு கொடுத்துள்ளதா என்று திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. கம்ப்யூட்டரில் இன்டெல் பென்டியம் காலத்து பயன்பாடுகளையே இன்னும் பலர் தாண்டவில்லை. இன்டெல் கோர், கோர் டூ டுயோ போன்ற அதிவேக பிராசஸர்களைப் பயன்படுத்திவருபவர் களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.
செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மிகக்குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான். இதனால்தான் தலைமுறை தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் மக்களுக்கு முறையாக சென்று சேர்திருக்கிறதா என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் பல கிராமங்கள் முதல்தலைமுறை தொழில்நுட்ப வாடையே இல்லாமல் இருக்கின்றன என்பதும் உண்மை. தவிர உலகை ஒரு நொடிக்குள் இணைக்கும் இந்த வேகத்தில் நாம் முந்தைய அலை வரிசைகளை பயன்படுத்திய வேகமும் குறைவுதான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
முன்னணியில் ஏர்டெல்
நான்காம் தலைமுறை அலைவரிசை நமக்கு முன்பாகவே பல நாடுகளிலும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்தியாவில் 2011 ஆண்டில்தான் சேவை தொடங்கப்பட்டது.
ஏர்டெல் நிறுவனம் இதற்கான சோதனை முயற்சிகளில் இறங்கி 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் 4ஜி சவால் என்று இந்தியா முழுக்க சவால் விட்டது. துரு துருவென ஒரு பெண் பல நகரங்களிலும் பிற தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துபவர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார். தற்போது இந்த விளம்பரம் தரக்கட்டுப்பாடு அமைப்பால் தடை செய்யப்பட்டு ஓய்ந்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் 4ஜி சேவை வழங்கும் அளவுக்கு அலைவரிசை ஏலம் விடப்படவில்லை என்றும், 3ஜி தொழில்நுட்பத்துக்கும் 4ஜிக்கும் இடையிலான அலைவரிசை சேவையைக் கொண்டே 4ஜி என்கிற பெயரில் சேவை வழங்கப்படுகிறது என்கிற சர்ச்சையும் உள்ளது.
உலக அளவில்...
நம்மைப்போல பல நாடுகளும் படிப்படியாகதான் அலைவரிசை பயன் பாட்டில் முன்னேறியுள்ளன. இப்போதும் பல நாடுகள் 2 ஜி தொழில்நுட்பத் தையே தாண்டவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் வசிப்பவர் களுக்குகூட 4ஜி சேவை இப்போதுதான் எட்டிபார்த்துள்ளது. 3 ஜியைக் கூட சரியான முறையில் அனுபவிக்கவில்லை என்கின்றனர்.
தென்கொரியா
ஆனால் இன்று தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஐந்தாம் தலைமுறை வரிசையை நோக்கி அடுத்த கட்டமாக நகர்ந்து வருகிறது. தென் கொரியா 5 ஜி தொழில் நுட்ப சேவை வழங்க ஆய்வுகளில் இறங்கி உள்ளது.
இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு உலக அளவில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் இதற்கான எஸ்.கே டெலிகொம், கொரியா டெலிகொம் மற்றும் சாம்சங், எல்ஜி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளது.
வேகம்... வேகம்.. வேகம்...
பலரும் 3ஜி சேவைதான் வேகம் என நம்பிக் கொண்டிருந்தபோதுதான் 4ஜி வந்து வாசல் திறந்துவிட்டது. 4ஜி-யை விட பல நூறு மடங்கு வேகம் கொண்டது 5 ஜி தொழில்நுட்பம். அதாவது ஒரு நொடியில் ஒரு முழு திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யும் அளவுக்கு வேகம் இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.
5 ஜி சவால்
இந்த வேகம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப போட்டியை சமா ளிக்க இப்போதே தென் கொரியாவுக்கு போட்டியாக சில நாடுகள் 5 ஜி அலைவரிசையை மேம்படுத்த ஆய்வில் இறங்கியுள்ளன. சீனாவின் ஹுவாய் நிறுவனம் 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளது. இதனால் வரும் நாட்களில் 5 ஜி அறிமுகமாகும் பரபரப்பு உலகைத் தொற்றிக் கொள்ளும். இதற்கான சந்தை வளரத் தொடங்கும்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் முன்பைவிட அதிக முனைப்போடு சந்தையில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது. உலகளவில் தொலைத்தொடர்பு சந்தையிலும் தீவிர போட்டிகள் நிகழ உள்ளன.
2016-ம் ஆண்டில் இந்தியாவை ஆட்டிவைக்கும் தொழில்நுட்பமாக 4ஜி உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் உலக அளவில் 5ஜி என்கிற அடுத்தகட்ட வளர்ச்சியும் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் நம் கண்முன்னே தெரியும் உண்மை.

இணையதளப் பயன்பாட்டாளர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 50 கோடியாக அதிகரிக்கும்



By புது தில்லி,

First Published : 30 December 2015 02:55 AM IST






இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடிப் பேராக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் குறித்து நான் முன்பு கருத்து தெரிவித்தபோது, இன்னும் 2 ஆண்டுகளில் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை 50 கோடியாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தேன்.
ஆனால், இந்தியாவில் தற்போதே 40 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கையில், அடுத்த ஆண்டே 50 கோடி பேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என்பது தெரிகிறது என்றார் அவர். "டிஜிட்டல் இந்தியா' திட்டம் குறித்து ரவிசங்கர் பிரசாத் பேசியபோது, வரும் ஆண்டுகளில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு, கல்வி, சுகாதார சேவைகளுக்கு "டிஜிட்டல் இந்தியா' திட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா? என்பது உறுதி செய்யப்படும். "டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், இணைய வழிக் கல்வி வழங்குவது, தொலைத்தொடர்பு வசதிகள் வாயிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, கிராம மையப்பகுதிகளில் வை ஃபை வசதியுடன் எல்இடி விளக்கு பொருத்தப்பட்ட மையத்தை அமைப்பது உள்ளிட்டவற்றில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Tuesday, December 29, 2015

New V-C for MGR Medical University

New V-C for MGR Medical University



The current Director of Medical Education (DME) S. Geethalakshmi has been appointed Vice-Chancellor of the Tamil Nadu Dr. MGR Medical University. She will be the ninth V-C of the university and takes over from D. Shantaram.

Ms. Geethalakshmi received the appointment order from Chief Minister Jayalalithaa on Monday. Dr. Shantaram’s term ended on December 17. Though Stanley Medical College has seen many of its students take the post of DME, Dr. Geethalakshmi will be the first student from the college to hold the V-C post. She belongs to the 1974 batch and graduated in 1979. She went on to study microbiology in Madras Medical College, where she served as assistant professor. She has completed her Ph D degree from the MMC. Ms. Geethalakshmi has served as Dean of Tiruvannamalai Medical College, Kilpauk Medical College and Stanley Medical College. On January 31, 2014, she took over as the DME.

The Chief Minister recognised her services in managing the rescue operations during the Moulivakkam building collapse in June 2014. Dr. Geethalakshmi has also held the post of vice president of the Chennai chapter of the Tamil Nadu Government Doctors Association.

Kanpur University VC gheraoed over non-availability of former PM’s MA degree



Share
BJP workers on Tuesday gheraoed the Kanpur University Vice Chancellor after the varsity failed to provide the MA degree records of the former Prime Minister Atal Bihari Vajpayee.
Vice Chancellor Jayant Vinayak Vaishampayan was confronted by BJP Kanpur chief Surendra Maithani, MLA Salil Vishnoi and a dozen other party workers after the university maintained that they did not possess the post-graduation degree of the former PM.
Vaishampayan clarified that Vajpayee did his MA in Political Science from Dayanand Anglo-Vedic College (DAV) in around 1950.
He said that Chhatrapati Shahu Ji Maharaj University or the Kanpur University was only established in 1966.
The DAV College was under the Agra University when the honourable former PM graduated, he said.
Meanwhile, BJP leader Maithani stated that they had approached the DAV college as well as the Kanpur University for the said records but did not get a favourable reply.
We had to confront the VC who assured us that inquiries will be made to the Agra University by him to get the records.
While Professor Vaishampayan wondered why was the party making a hue and cry over the records after so many years, the BJP workers have threatened to launch an agitation in the campus if the records are not found at the earliest.

உங்களைத் தேர்ந்தெடுத்த தவறுக்கான தண்டனையா?

Return to frontpage

சர்ச்சைக்குரிய பேச்சுகள், நடத்தைகளை தன்னுடைய அரசியல் கலாச்சாரமாகவே மாற்றிக்கொண்டிருக்கும் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், இம்முறை ஒருபடி மேலே போய் ஊடகச் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்துத் துப்பியிருக்கிறார். மேலும், தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, “இதே கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் போய் கேட்க முடியுமா? பத்திரிகையாளர்களா நீங்கள்” என்றும் கேட்டிருக்கிறார். அதிர்ச்சியையும் அவமானத்தையும் தரும் நிகழ்வு இது.

பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொள்வது விஜயகாந்துக்குப் புதிதல்ல. பொது நிகழ்ச்சிகளில் தன்னுடைய கட்சி நிர்வாகியைப் பொதுமக்கள் முன்னிலையில் அவர் அறைந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தன் கட்சி வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அவர் அடித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் ஒருமுறை செய்தியாளரை, “நாய்” என்று திட்டியிருக்கிறார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில் “தூக்கி அடித்துவிடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் பல முறை கடுமையாகப் பாய்ந்திருக்கிறார். குறிப்பிட வேண்டிய விஷயம், ஊடகவியலாளர்களை அவர் அணுகும்விதமே பேச்சில் மட்டும் அல்ல; உடல்மொழியிலும் கீழ்த்தரமானது என்பதுதான்.

ஊடகத் துறையும் ஊடகவியலாளர்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. எல்லாத் துறைகளிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருப்பதுபோலவே நிச்சயம் ஊடகத் துறையிலும் போதாமைகளும் குறைகளும் தவறுகளும் கலந்திருக்கின்றன. ஆனால், அடிப்படையில் ஊடகத் துறையையும் ஊடகவியலாளர்களையும் எது இயக்குகிறது என்பது முக்கியம். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் அடிப்படையில் வெறுமனே ஒரு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்ல; மக்களின் பிரதிநிதிகள். மக்களுடைய குரல், மக்களுடைய கேள்விகளே ஊடகவியலாளர்கள் குரலாகவும் கேள்விகளாகவும் வெளியே வருகின்றன; அப்படித்தான் அவை வெளிவர வேண்டும். ஆகையால், ஊடகவியலாளர்களின் குரலை மக்களின் குரலாகவே பாவிக்க வேண்டும். குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது அவர்களுடைய அடிப்படை ஜனநாயகக் கடமைகளில் ஒன்று.

முதல்வர் ஜெயலலிதா இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, அடிக்கடிச் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்பது. ஆனால், செய்தியாளர்களை அவர் சந்திப்பதே இல்லை. அமைச்சர்களும் மிக மிக அரிதாகவே ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்கள். இத்தகைய சூழலில், ஊடகவியலாளர்கள் செய்யக்கூடிய காரியம் ஒன்றுதான், அரசுக்கு மக்கள் தரப்பிலிருந்து செல்ல வேண்டிய கருத்துகளையும் விமர்சனங்களையும் தம் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிப்பது. தம்மாலான அளவில் ஊடகங்கள் அதைச் செய்துகொண்டே இருக்கின்றன. இடையில் பல காலம் இதே விஜயகாந்தும்கூட செய்தியாளர்கள் சந்திப்பை முற்றிலும் தவிர்த்தார். அப்போது ஊடகவியலாளர்கள் செய்ய முடிந்ததென்ன? அரசியல் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான உறவு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் ஊடகங்களிலிருந்து விலகியிருப்பது/தமக்கேற்ற ஊதுகுழலாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது ஜனநாயக இழுக்கு.

சட்டசபையில் சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் தொடர்பான ஆளுங்கட்சியினருடனான வாக்குவாதத்தின் உச்சத்தில், நாக்கைத் துருத்தியபடியும், கையை நீட்டியும், கோபமாகப் பேசினார் விஜயகாந்த். அதோடு, எதிர்க்கட்சிகளுக்குச் சட்டசபையில் உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று சொல்லி சட்டசபை செல்வதையே நிறுத்திக்கொண்டுவிட்டார். ஆளுங்கட்சி மட்டும் அல்ல; ஆக்கபூர்வமான, உயிர்த்துடிப்பான எதிர்க்கட்சிகளும் சேர்ந்துதான் ஒரு அரசை உந்தித்தள்ளுகின்றன. செயல்படாமை தொடர்பாக ஒரு விவாதம் நடந்தால், அதில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தன்னையும் விடுவித்துக்கொள்ள முடியாது. தமிழகம் கொந்தளிப்பான பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொண்டபோது எதிர்க்கட்சித் தலைவர் என்னவானார் என்பதே தெரியாமல் இருந்ததை மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மக்கள் சிக்கியிருக்கும் சூழலில்கூட ஊடகங்கள் வழியே மக்களைச் சந்திக்காமல், ‘வாட்ஸ்அப் உரை’ நிகழ்த்தும் ஒரு முதல்வர், கேள்வி கேட்கும் ஊடகங்களை நோக்கி ‘தூ’ என்று வெறுப்பை உமிழும் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழகத்தின் சமகாலத் தலைவர்களை நினைத்துப்பார்க்கையில் வேதனையே எஞ்சுகிறது. இருவரும் ஒன்றுசேர்ந்துதானே கடந்த தேர்தலில் மக்களைச் சந்தித்தீர்கள், வாக்குக் கேட்டீர்கள், நல்லாட்சி கொடுப்போம் என்றீர்கள். மக்கள் செய்த தவறென்ன; வாக்களித்ததா? ஊடகங்களிடமிருந்து விலகுபவர்கள், மக்களிடமிருந்தும் விலகுகிறார்கள் என்பதே வரலாற்று உண்மை!

NEWS TODAY 21.12.2024