மார்ச் 31-க்கு பின் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்: மத்திய அரசு
புதுடெல்லி:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.அதற்கு பதில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பழைய ரூ.500,ரூ.1000 வைத்திருக்க கூடாது
பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதற் கான கால அவகாசம் நாளை மறுநாள் (30-ந்தேதி) முடிகிறது.அதன்பிறகு அதாவது 31-ந்தேதியில் இருந்து ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் கை இருப்பு வைத்து இருப்பது குற்றமாகக் கருதப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. அப்படி வைத்து இருப்பவர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து கணக்குகளை தெரிவித்து உரிய வரி கட்ட மத்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. இத்தகைய சலுகைகளையும் மீறி அதிக பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய் துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவசரச் சட்டத்துக்கான அம்சங்களை அதிகாரிகள் தயாரித்தனர். பிறகு அது மத்திய அரசிடம் ஒப்படைக் கப்பட்டது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட்டது. பிறகு அந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்து இருப்பவர்கள் மார்ச் 31-ந்தேதி வரை அவற்றை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க அந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 10 தாள்களுக்கு மேல் பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது. சராசரியாக ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மிக அதிக அளவில் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகள் வைத்து இருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும் அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் எந்த அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்து இருக்கிறாரோ அதற்கு ஏற்ப சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பழைய நோட்டுகளின் சட்ட விரோத நடமாட்டத்தை தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வர உள்ளது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதம் தொடர்பான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதாவது பழைய ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு 50 நாட்கள் கெடுவான நாளை மறுநாளுக்கு பிறகு அபராதம் விதிக்கப்படுமா? அல்லது மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு அதிக பழைய நோட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்பது தெளிவுபடுத்தப்பட வில்லை.
இதுபற்றி நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இனி யாரும் அதிக அளவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருக்க முடியாது. பழைய நோட்டுகள் வைத்து இருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் ஒப்படைத்து விட வேண்டும். 30-ந்தேதிக்கு பிறகு பழைய நோட்டுகள் மாற்றப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும்.
ரிசர்வ் வங்கியில் 31-ந்தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றலாம். ஆனால் குறைந்த தொகைக்கே மாற்ற முடியும். 30-ந்தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
இந்த அபராத நடவடிக்கை மூலம் திரட்டப்படும் பணத்தை நீர்ப்பாசனம், வீட்டு வசதி, கழிவறைகள், உள் கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் திட்டங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.