Wednesday, December 28, 2016

வங்கி கணக்கில்லாதவர்களுக்கு ஏ.டி.எம்.,கார்டு; நக்சல் சதி என போலீஸ் சந்தேகம்

பாட்னா: பீஹாரில் வங்கி கணக்கில்லாவர்களுக்கு ஏ.டி.எம்.,கார்டு வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பண தட்டுபாட்டை சமாளிக்க நக்சல் தீவிரவாதிகள் சதி வேலை காரணமாக இருக்கலாம் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். 

பீஹார் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜமூய் மாவட்டத்தில் உள்ள அச்சம்பாவ் கிராமத்தில் வங்கி கணக்கு இல்லாத சிலருக்கு சிஜோரி பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து ஏ.டி.எம்., கார்டுகள் வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜமூய் போலீசார் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர்.

நக்சல் சதி வேலையா?

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்பு நக்சல் தீவிரவாதிகள் மத்தியில் பணபுழக்கம் குறைந்துள்ளதாகவும், அதை சமாளிக்க கிராமமக்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024