Wednesday, December 28, 2016

சேகர் ரெட்டி கருப்புப்பணத்தை மாற்றியது எப்படி தெரியுமா?

By DIN  |   Published on : 28th December 2016 01:37 PM  |
சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக ஆட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் அளவுக்கு வலுவான பல ஆதாரங்களை சேகர் ரெட்டி வீட்டிலிருந்து வருமானவரித்துறை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இணைய ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவியில் இருந்து வந்த சேகர் ரெட்டி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, திருப்பதி தேவஸ்தான உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை கொடுத்து வெள்ளை பணமாக மாற்றியுள்ளார் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த 8-இல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்னர். இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லோதா கொடுத்து தெரியவந்தது. இதில் லோதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு நேரில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சேகர்ரெட்டி, சீனிவாசுலு ஆகியோருக்கு 15 நாள் காவலும், மற்ற மூவருக்கும் 5 நாள் காவலும் கேட்டு சிபிஐ சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 5 பேரும் ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலர் இருந்த ராமமோகன ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ராம மோகன ராவ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சட்ட விரோதமாக இருந்த பணம், சொத்துக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தமிழக அரசு ராமமோகன ராவை தலைமைச் செயலர் பதவியிருந்து இடைநீக்கம் செய்து புதிய தலைமைச் செயலரை நியமித்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சாமானிய மக்கள் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம்  ரூபாய் பெறுவதற்கே சிரம்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர்களிடம் 34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் விசாரணை இன்னும் முடிவடையாததால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கிடையே சேகர் ரெட்டி திருப்பதி உண்டியல் பணத்திலும் கை வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினராக இருந்த சேகர்ரெட்டி, அந்த செல்வாக்கை பயன்படுத்தி திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கொடுத்து மாற்றியுள்ளார். இதற்கு சிலர் உதவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த செயலுக்கு ஆந்திர அரசின் வாகனமும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தான உண்டியல் பணம் மூலம் கருப்பு பணம் மாற்றப்படுவதை அறிந்த வங்கி அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு உண்டியலில் போடப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக. சார்பில் போட்டியிட்ட 234 வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவிர மற்ற 197 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்காக தலா ரூ.4 கோடி வீதம் சேகர் ரெட்டி கொடுத்ததாகவும், இதற்கான ஒப்புகை ஆவணத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி கோப்பாக தயாரித்து வைத்திருந்ததாகவும், அவற்றை வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் செய்திகள் வெளியாகி வருகின்றன.
வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை வியூகமே அமைத்து கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024