Thursday, December 29, 2016

ராமர் பாதுகை அரசாண்ட பாணி.. ஜெ. நாற்காலி முன்னிலையில் நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு!
The Chair used by former CM Jayalalithaa has been brought to AIADMK GC council


சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஜெயலலலிதா இத்தனை காலமாக அமர்ந்த நாற்காலி கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த அதிமுக பொதுச் செயலர் யார் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. சசிகலாவை அப்பதவிக்கு கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே இந்த நிகழ்வுக்கு சென்டிமென்ட் டச் கொடுக்க அதிமுக தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, இதுவரை ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலி பொதுக்குழு நடைபெறும் வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு இன்று காலை காரில் கொண்டு வரப்பட்டது. கூட்ட மேடையில் அந்த நாற்காலி நடு நாயகமாக போடப்பட்டது. அந்த நாற்காலி மீது, ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமாயண இதிகாசத்தில், ராமர் பாதுகையை வைத்து அவரது தம்பி பரதன் அரசாண்ட பாணியில் அதிமுக, ஜெயலலிதா இருக்கை முன்னிலையில், சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து, ஜெயலலிதாவே இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024