புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் பாரத தர்ஷன் ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்விச் சுற்றுலா போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி கூடுதல் பொதுமேலாளர் எல்.ரவிக் குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில் திட் டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, வரும் 29-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ஆன்மிக சுற்றுலா ரயில் ஈரோடு, சேலம், காட்பாடி, சென்னை சென்டரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயத்துக்கு செல்லும். மொத்தம் 7 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.5,855 கட்டணமாகும்.
இதேபோல, வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷலாக மதுரையில் இருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்படும் சுற்றுலா ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், ஈரோடு வழியாக குருவாயூர், கொல்லூர் மூகாம்பிகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். மொத் தம் 6 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,900 கட்டணமாகும். மதுரையில் இருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்படும் குளிர்கால சுற்றுலா ரயில் மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு வழியாக கொச்சின், ஆலப்புழா, கோவா ஆகிய இடங் களுக்கு செல்கிறது. மொத்தம் 6 நாட்கள் கொண்ட இந்த சுற்று லாவுக்கு ரூ.5,225 கட்டணமாகும்.
ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். இது தொடர்பாக தகவல்களை பெற சென்னை சென்ட்ரல் 90031 40681, மதுரை: 0452 - 2345757, கோயம்புத்தூர்: 90031 40655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல சிங்கப்பூர் - மலேசியா (7 நாட்கள்), துபாய் - அபுதாபி (4 நாட்கள்), லங்கா (7 நாட்கள்), பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் (15 நாட்கள்) விமான சுற்றுலா அறிவிக்கப் பட்டுள்ளது. கட்டண விவரங்கள், சலுகைகளை தெரிந்துகொள்ள 90031 40617, 90030 24169 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment