சவூதியில் நர்ஸ் வேலை! இவர்களுக்கு முன்னுரிமை
சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ ((NICU), மருத்துவம் & அறுவைசிகிச்சை ((Medical & Surgical)) மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவு (ICU) போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி, 2017 முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவூதி ப்ரோமெட்ரிக் (Saudi pro-metric) தேர்ச்சி மற்றும் IELTS 7 Band மற்றும் TOFEL தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம் & அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.41,000 மற்றும் என்ஐசியூ/தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன் ரூ.6,300 உணவுப்படியும், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் (அறிவிக்கை எண் (Notification No.037) என தவறாமல் குறிப்பிட்டு கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவூதி புரோமெட்ரிக், IELTS/TOFEL போன்ற சான்றிதழ்களின் நகல்கள்
மற்றும் ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் எண். B-0821/CHENNAI/ CORPN/1000+/ 5/ 308/84 ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment