Thursday, December 29, 2016

தேர்வானார் ! எதிர்ப்பாளர்கள் யாரும் வராததால் சசி

சென்னை: பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று டிச. 29 ம் தேதி கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் எட்பாடி பழனிச்சாமி முன்மொழிய மறைந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும் போது உரை நிகழ்த்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கண்ணீர் விட்டார். மற்றொரு தீர்மானத்தில் சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்றும் , தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2,490 உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். சூழ்ச்சிக்கு இடமளிக்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு கேட்டு கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு ,மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் ஜெ., பிறந்த தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தி்ல நிறைவேற்றிய தீர்மானத்தை போயஸ்கார்டன் சென்று ஓ.பி.எஸ்,. தலமையிலான குழுவினர் சசிகலாவிடம் வழங்குகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024