வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் உட்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை
அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அதிகாரிகள் தீவிர ஆலோசனை
வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் உட்பட 4 பேர் விசாரணைக்கு வராததால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சேகர் ரெட்டியை தொடர்ந்து ராம மோகன ராவும், அவரது மகனும் சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ராம மோகன ராவ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென போரூரில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் 26-ம் தேதி வீடு திரும்பினார். யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் காலையில் ராம மோகன ராவ் தனது வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
டெல்லி அதிகாரிகளுடன்..
பேட்டியில், வருமான வரித் துறை, மத்திய மற்றும் தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டு களை கூறினார். மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பியதும் ராம மோகன ராவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றே வருமான வரித்துறை அதிகாரி கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதற்கு மாறாக பத்திரிகை யாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியது வருமான வரித்துறை அதிகாரி களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
இதனைத் தொடர்ந்து ராம மோகன ராவ் விவகாரத்தில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம் என்று டெல்லி அதிகாரிகளு டன் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சட்டத்தின்படியே சோதனை
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் பேசிய போது, "வருமான வரிச் சட்டம் 132-ன் படி, வருமான வரித்துறை இயக்குநராக இருப்பவர் எந்த ஒரு இடத்திலும் புகுந்து சோதனை நடத்தும் அதிகாரம் படைத்தவர். அதன்படியே தலைமை செயல கத்தில் புகுந்து சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரிச் சட்டம் 132(2)-ன் படி, சோதனை நடத்தும் அதிகாரி களே தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அது மாநில போலீ ஸாகவோ, மத்திய பாதுகாப்பு படையாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்கலாம்.
வருமான வரித்துறை சோத னையில், ராம மோகன ராவின் மகன் விவேக், அவரது வழக்கறிஞர் அமலநாதன், உறவினர்கள் ராஜ கோபாலன், முன்னாள் வன அதிகாரி கல்யாணசுந்தரம் ஆகியோ ரின் வீடுகளில் ஏராளமான ஆவணங் களும், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி விவேக் உட்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை 4 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
விவேக்கின் மனைவி ஹர்ஷினி கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். இதை காரணம் காட்டி விவேக் நேரில் ஆஜராகாமல் இருக் கிறார். இதேபோல ஒவ்வொரு வரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர். இவர்கள் நேரில் ஆஜராகாமல் இருப்பதால் அடுத் தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றனர்.
No comments:
Post a Comment