அரசியலில் நுழைகிறாரா ராம மோகன ராவ்?
தமிழக தலைமைச் செயலாளராக இருந்து, தற்போது வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள ராம மோகன ராவ், ‘நடந்தது என்ன?’ என்ற அடிப்படையில் சென்னையில் நேற்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ‘‘நான் புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப் பட்டவன். ஜெயலலிதாவின் பாதச் சுவடுகளை பின்பற்றி நடப்பவன். ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற வன். ஒரு நாள் அல்ல, 1994-ல் செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த போதிலிருந்தே அவர் எனக்கு பயிற்சி அளித்துள்ளார். அவர் என்னை தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்த்தியுள்ளார். ஜெய லலிதா தற்போது இல்லாத நிலையில், கடந்த 32 ஆண்டுகளாக பணியில் இருந்த தலைமைச் செயலாளரான எனக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் என்ன ஆவார்கள். தமிழக மக்களுக்கு அவர் இல்லாத சூழலில் என்ன நடந்துள்ளது என்பது தெரியும்’ என தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ‘புரட்சித்தலைவி அம்மா’ என்று கூறுவதும் அதிமுக தொண்டர் களைப் பற்றி கவலைப்படுவதும் அவர் அரசியல் பக்கம் சாய்கி றாரோ என்ற சந்தேகத்தை ஏற் படுத்தியுள்ளது. ராம மோகன ராவ், அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார்.
அதிகாரியாக இருப்பவர் அரசி யலில் நுழைவது புதிதல்ல. ஏற்கெனவே, ஐஏஎஸ் அதிகாரி கள் மலைச்சாமி, வேலு, ஐபிஎஸ் அதிகாரி நடராஜ் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment