Sunday, February 26, 2017


ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’ #HealthTips
எல்லா விஷயத்திலும் அவசரப்படுகிறவர்களை `முந்திரிக்கொட்டை’ என்று சொல்வோம். யதார்த்தத்தில், ஆரோக்கியப் பலன்கள் பலவற்றை அள்ளித் தருவதில் முந்திரிக்கு முதல் வரிசையிலேயே இடம் உண்டு. நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாகவும் நோய் வருவதைத் தடுப்பதாகவும் அமைந்துவிடும். அவற்றில் ஒன்றுதான் முந்திரி. `கொழுப்பு நிறைந்தது... இதை ஒதுக்க வேண்டும்’ என்று நாம் நினைக்கும் சில உணவுப் பொருட்களில் இதுவும் அடங்கும். ஆனால், தரும் பலன்களோ ஏராளம். முந்திரிப்பழம் மற்றும் முந்திரிக்கொட்டை இரண்டிலுமே ஜின்க், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகம். சுவாசக்கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடியது.



முந்திரி தரும் முத்தான நன்மைகள்...

* `முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும்’ என்பார்கள். இது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம். 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன; செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம். முந்திரி, உடலின் வளர்சிதை மாற்றம் சீராக உதவுகிறது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

* முந்திரியில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். தசைப் பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, பதற்றம் மற்றும் மயக்கம் ஆகியவற்றையும் சரிசெய்யும். இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

* இரும்புச்சத்தை உடல் கிரகிக்க இது உதவுகிறது; வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கிறது; எலும்புகள் மற்றும் திசுக்கள் வளர்வதற்குத் துணைபுரிகிறது; சருமம் மற்றும் கூந்தலின் நிறத்துக்குத் துணைபுரியும் மெலனினை (Melanin) உற்பத்திசெய்கிறது .

* மனிதனின் மூளை, மூளை செல்களை உற்பத்தி செய்வதற்கு, பாலிஅன்சாச்சுரேட்டட் (Polyunsaturated) மற்றும் மோனோஅன்சேச்சுரேட்டட் (Monounsaturated) கொழுப்பு அமிலங்களை நம்பியிருக்கிறது. முந்திரி, மூளைக்குத் தேவையான ஆக்சிஜனை அனுப்பி, இவை சீராகச் சுரந்து மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

* பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும் முந்திரி உதவுகிறது. முந்திரியில் உள்ள ரசாயனம் பல்வலியைச் சரிசெய்யும்; அதோடு, காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

* வயோதிகத்தால் ஏற்படும் பார்வைக்கோளாறின் வீரியத்தைத் தள்ளிப்போடும். வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் தோல் சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கும்.

* டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. ஆனால் அளவுடன் சாப்பிடவேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. ரத்தநாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

* கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதால், இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.




பக்க விளைவுகள்...

* சிலருக்கு முந்திரி சாப்பிடுவதால் தோலில் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சிலருக்கு அடிவயிற்றில் வலி, தலைசுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் முந்திரியைச் சாப்பிடும்போது தோன்றினால் அதைத் தவிர்த்துவிட வேண்டும்.

* நம் உடல் கால்சியத்தை கிரகிப்பதை ஆக்சலேட் என்னும் ரசாயனக் கலவை தடுக்கிறது. இது முந்திரியில் அதிக அளவில் இருப்பதால், கிட்னி மற்றும் பித்தப்பைகளில் கல் இருப்பவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

* ஒரு நாளைக்கு 4-5 முந்திரிகளை சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக முந்திரியைச் சாப்பிட்டால், அதிலுள்ள டைராமைன் (tyramine) மற்றும் பினைலேதைலாமின் (phenylethylamine) போன்ற அமினோ அமிலங்கள் தலைவலியை உண்டாக்கும்.

குட்டித் தூக்கம்.. தியானம்.. டிவி பார்த்தல்.. பேப்பர் ரீடிங்.. சூப்பராக பொழுது போக்கும் சசிகலா!




பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தினமும் காலையில் தியானம் செய்வது, ஜெயலலிதா வைத்த துளசி மாடத்தை வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வப்போது குட்டித் தூக்கம் போடும் சசிகலா டிவி பார்த்து பொழுதை கழித்து வருகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 16 ஆம் தேதி அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளில் சலுகைகளை வழங்க மறுத்து கடுமையாக காட்டிக் கொண்ட சிறை நிர்வாகம் பின்னர் ஒவ்வொரு சலுகையாக அளித்து வருகிறது.

இதனிடையே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்கிறார் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: tamil.oneindia.com


நாள்தோறும் காலை 5 மணிக்கு சிறையில் எழுந்துகொள்ளும் சசிகலா, ஒரு மணிநேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார். பின்னர் 6.30 மணிக்கு வெந்நீரில் சசிகலா குளிப்பதாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து சிறைக்குள் இருக்கும் அம்மன் கோயிலுக்கு இளவரசியோடு சென்று சாமி கும்பிடுகிறார். அங்கு ஏற்கனவே ஜெயலலிதா வைத்த துளசி மாடத்தையும் சசிகலா சுற்றி வருகிறாராம்.


பின்னர் செய்தித்தாள்களை படிக்கும் சசிகலா காலை 8.30 மணிக்கு டிபன் சாப்பிடுகிறார். இதைத்தொடர்ந்து இளவரசியும் சசிகலா டிவி பார்க்கின்றனர்.


மதியம் 2 மணிக்கு மதிய சாப்பாட்டை சாப்பிடும் சசிகலாவும் இளவரசியும் பின்னர் ஒரு குட்டித் தூக்கம் போடுகின்றனராம். இதைத்தொடர்ந்து மீண்டும் டிவி பார்க்கும் இருவரும் 5 முதல் 6 மணி வரை தங்களின் உறவினர்களோடு பேசுகின்றனராம்.


இரவு 7.30 மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்து விடும் அவர்கள் 11 மணி வரை பேசிக்கொண்டு இருக்கின்றனராம். 11 மணிக்கு மேல் தான் இருவரும் தூங்கச் செல்கின்றனராம்.

கிலோ அரிசி ரூ.60... தக்காளி கிலோ ரூ.40 - காய்கறி விலை எவ்ளோ தெரியுமா?




சென்னை: பருவமழை பொய்த்துப்போனதால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அரிசி விலை கிடு கிடு என உயர்ந்து வருகிறது. நல்ல தரமான சாப்பாடு அரிசி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இட்லி அரிசி விலை ஒருகிலோ 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதன் எதிரொலியாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தே அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்படும். தற்போது வறட்சி பாதிப்பு அதிகமாக உள்ளதால்

சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வியாபாரிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: tamil.oneindia.com


வட மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் தமிழகத்திற்கு நெல் கொண்டு வரப்படுகிறது. ஒரு கிலோ நெல் விலை ரூ.20இல் இருந்து ரூ.25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நெல் மூட்டைகளை ஏற்றுவதற்கு ஒரே நேரத்தில் அதிக லாரிகள் தேவைப்படுதால் லாரி வாடகை கட்டணமும் உயர்ந்துள்ளதால் தரமான பொன்னி புழுங்கல் அரிசி விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் பருப்புகளின் விலை கடந்த ஆண்டு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு கூட விற்பனையானது. இந்த ஆண்டு துவரம் பருப்பு ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் உளுந்தப்பருப்பு கிலோ 105 ரூபாய்க்கும், கடலைப்பருப்பு கிலோ ரூ.110க்கும் விற்பனையாகிறது.


சென்னை கோயம்பேடு சந்தையில், அவரைக்காய் விலை ரூ.35 ஆகவும், புடலங்காய் விலை ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் முருங்கைக்காய் விலை ரூ.40லிருந்து ரூ.13 ஆகவும் குறைந்துள்ளது. வெண்டைக்காய் விலை 90 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அவரைக்காய், புடலங்காய்,டிஸ்கோ கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலைகள் கடந்த வாரத்தை விட இரு மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.


மழை இல்லாத காலங்களில் முருங்கைக்காய் உற்பத்தி அதிக மாக இருக்கும். அதனால் தற்போது வரத்தும் அதிகமாக உள்ளது. அதனால் விலையும் வீழ்ச்சி அடைந் துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய் விலை ரூ.100 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது என்றார்.


கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் ரூ.45 வரை விற்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரிக்கு முன்பு, 6 மாதங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து, கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.10க்கும் குறைவாக விற்கப் பட்டது.


வெயில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை சந்தைகளில் கிலோ ரூ.45க்கும் விற்கப்படுகிறது. வார்தா புயலின்போது, பல தக்காளி செடிகள் அழிந்ததன் காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்ததுடன், சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. அதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.


பல மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்ததால், அவரை மற்றும் புடலங்காய் விலை யும் உயர்ந்துள்ளது. அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு, காய்கறி விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.


கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் பருவமழையும் பொய்த்துப் போனதால் நெல் சாகுபடி குறைந்து அரிசி விலை அதிகரித்துள்ளது. அதே போல வறட்சியினால் காய்கறி விலைகளின் உயரும் உயர்ந்து வருகிறது.


Related Stories

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!





நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், இதை முன்னிட்டு சற்றுமுன் சென்னையில் இருந்து விமானநிலையத்தில் இருந்து, எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் அரசு அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், கோவை வந்த மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

சிக்கனில் மருத்துவக் குணம் உண்டா? கடக்நாத் கோழிகள் ஓர் அலசல்! #SundayChicken





ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால்தான் அந்த நாள் முழுமையடையும் சிலருக்கு... அப்படித்தான் ஒரு ஞாயிறு மதியம் உணவு நேரம் கடந்து நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 'கடக்நாத் சிக்கன் சாப்பிட்ருக்கீங்களா?' என்று நண்பர் கேட்டார். சிக்கன் 65 போல் ஏதோ ஒரு டிஷ் என்று நினைத்துக்கொண்டேன். "இல்லை" என்றேன். வாங்க சாப்பிடலாம் என்று வலுக்கட்டாயமாக தட்டின் முன் அமரவைத்தார். கன்னங்கறேல் என்ற மாமிசத் துண்டுகளைப் பார்த்துவிட்டு, "என்ன சார் ரொம்ப தீய விட்டுட்டீங்களா?" என்றேன். "இல்லைங்க இதுதான் கடக்நாத் சிக்கன்... இதுல ஏகப்பட்ட மெடிக்கல் பெனிஃபிட்ஸ் இருக்கு" என்றார்.
சாப்பிட்டுப் பார்த்தேன். ருசியாகத்தான் இருந்தது. அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.

கடக்நாத் சிக்கன்

மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை என்பதால், இதை 'காளி மாசி' (காளியின் தங்கை) என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.

இந்தக் கோழியைச் சாப்பிடுவதால், இதன் மெலனின்தன்மை காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன என்றும், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், மைசூரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையம், இதில் உள்ள கொழுப்பு தரமானது. எல்லா நாட்டுக்கோழிகளையும் போலவே இதன் ஒயிட் மீட் ஆரோக்கியமானது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது எனக் குறிப்பிட்டு உள்ளது.
மத்தியப்பிரதேஷத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.




முட்டைகள்

கடக்நாத் கோழியின் முட்டைகளும் கறுப்பு நிறத்தில் உள்ளன. எல்லா நாட்டுக்கோழிகளின் முட்டைகளைப் போலவே இதிலும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மற்ற முட்டைகளைவிடவும் இதில் அமினோ அமிலங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு வரும் தலைவலி, ஆஸ்துமா, சிறுநீரக வீக்கம் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாக இந்த முட்டைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சென்னையில் ஆரோல் ஃபார்ம்ஸ் என்ற கடக்நாத் சிக்கன் பண்ணையை நடத்திவரும் சார்லஸ் அவர்களிடம் பேசினோம். "இந்தக் கோழிகள் அதிக மருத்துவகுணம் வாய்ந்தவை. ஆண்மையைப் பெருக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது. எங்கள் பண்ணையில் முழுமையாக இயற்கையான முறையில் இந்தக் கோழிகளை வளர்த்துவருகிறோம். அதிகமான கறி வேண்டும் என்பதற்காக கோழிகளுக்கு செயற்கையான தீவனங்களோ, ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் ஊசிகளோ நாங்கள் போடுவது இல்லை. முழுக்க முழுக்க ஆரோக்கியமான, ஆர்கானிக் முறையில் இவற்றை நாங்கள் வளர்க்கிறோம்." என்கிறார்.

இந்தக் கோழிகளுக்கு நிஜமாகவே மருத்துவ குணங்கள் உண்டா? மற்ற கோழிகளைவிட கடக்நாத் கோழிகள் சிறந்தவையா? இதுகுறித்து சென்னை, கோழி இன ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஏ.வி.ஓம்பிராகாஷ் அவர்களிடம் கேட்டோம். "கடக்நாத் வகை சிக்கன்கள் மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழி வகையைச் சேர்ந்தவை. மெலனின் மிக அதிகமாக உள்ளதால், இதன் கறி, ரத்தம், முட்டை, சிறகு என அனைத்தும் கறுப்பு நிறத்தில் உள்ளன. இவற்றுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பி மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். இவை எந்த அளவுக்கு மற்ற நாட்டுக்கோழிகளைவிட சிறப்பான மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பதற்கு போதுமான நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனால், நாட்டுக்கோழி என்ற அளவில் இதன் ஒயிட் மீட் உடலுக்கு மிகவும் ஏற்ற ஒன்று. இதன் முட்டைகளையும் நாம் தாரளமாகப் பயன்படுத்தலாம். இதன் கறியின் நிறம் கறுப்பாக இருப்பதால், இதை வாங்குவதற்கு மக்களிடம் ஒரு தயக்கம் உள்ளது. ஆனால், இதுபோன்ற தயக்கங்கள் தேவை இல்லை. இந்தக் கோழிகள் உண்பதற்கு மிகவும் ஏற்றவை." என்கிறார்.

- இளங்கோ கிருஷ்ணன்

Dailyhunt





'பதவியில் இருந்தவரை ஜெ., மரணம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?' ஓ.பி.எஸ்க்கு ஸ்டாலின் கேள்வி
vikatan.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராத தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்தியாவின் நீதித்தலைமை அளித்துள்ள இந்தத்தீர்ப்பு நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் அமைந்திருப்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை எதிர்பார்க்கின்ற இளையதலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு சார்பில் அவர் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி விளம்பரங்கள் அளிக்கக்கூடாது என்றும், அவர் பெயரில் அமைந்துள்ள அரசு திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தி தலைமைச் செயலாளரிடம் கோரிக்கையையும் அளித்துள்ளேன்.

இதற்காக என் மீது விமர்சனக் கணை தொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். அவருக்கு நான் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், முதல்வராக அவர் பதவியிலிருந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஜெயலலிதாவின் இயல்பைப் பாராட்டிப் பேசியவன்தான் நான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அரசியல்ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களாயினும் அவர்களின் தனிப்பட்ட பண்புநலன்களைப் பாராட்டுவது என்பது எங்கள் தலைவர் கருணாநிதி எங்களுக்கு கற்றுத்தந்திருக்கும் முதிர்ச்சியான அரசியல் பண்பாடு. ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொள்வதே பெருங்குற்றம் என்கிற அரசியல் தீண்டாமையை கடைப்பிடிக்கிற இயக்கம் தி.மு.க அல்ல. அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் அம்மையார் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவேதா, அவருடைய படங்களைப் பயன்படுத்துவதோ அவர்களின் உரிமையைச் சார்ந்தது. அதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பவோ, விமர்சிக்கவோ இல்லை.

ஆனால், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு பணத்தில் ஊழல் செய்து, அதன் மூலம் குவித்த சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவே தன் இல்லத்தில் ஒரு குடும்பத்தைத் தங்க வைத்திருந்தார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டி, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதையும், அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தவர் என சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அதே அரசுப் பணத்தில் விளம்பரங்கள் தருவதும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களை அவர் பெயரில் நடைமுறைப் படுத்துவதும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்பதைத்தான் தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.

அரசின் சார்பில் அவரது பெயரும் படமும் இடம்பெறுவது சட்ட விரோதமானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேர் எதிரானதுமாகும். இது ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன், பதவியேற்பின்போது அவர்கள் ஏற்ற உறுதிமொழிக்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் சட்டவிதிமீறலுமாகும். இதனைச் சுட்டிக்காட்டினால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசியல் சுயநலத்திற்காக என் மீது கண்டனக்கணை தொடுக்கிறார்.

ஜெயலலிதா மீதான அவரது விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு நான்தானா கிடைத்தேன்? இப்போது ஜெயலலிதா மீது இத்தனை அக்கறை காட்டும் ஓ.பி.எஸ், அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் மனதில் உள்ள ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்த சந்தேகம் பற்றி எப்போது பேசினார்? போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்திருப்பவர்களின் தயவில் முதல்வராக பொறுப்பு ஏற்றிருந்த நாள்வரை பேசினாரா? பதவியைப் பறித்துக் கொண்டார்கள் என்றதும், ஜெயலலிதாவின் சமாதியில் ஊடக வெளிச்சத்துடன் தியானம் இருந்து, திடீர் ஞானோதயம் பெற்ற பிறகே, அதாவது ஜெயலலிதா மரணமடைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து, பதவி சுகத்தை அனுபவிக்க இயலாமல் போனபிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னவர் ஓ.பி.எஸ்.

முதல்வராக அவர் பொறுப்பேற்றிருந்த நாட்களில் ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அவர் செய்த ஏற்பாடுகள் என்ன? பதவி கிடைக்கும் என்றால் தனக்கு முதன்முதலாக பதவி வழங்கியவரையே மறந்துவிடுவதும், பதவி போனபிறகு அரசியல் நடத்த வேறெதுவும் கிடைக்காவிட்டால், மறந்து போன ஜெயலலிதாவின் படத்தையும் அவரது சமாதியையும் திடீரென பயன்படுத்துவதும் ஓ.பி.எஸ் போன்ற அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழக்கமாகிவிட்டது. தி.மு.க வலியுறுத்துவது சட்டரீதியான நடைமுறையைத்தான். ஆனால், தங்கள் கட்சித் தலைவரின் மரண மர்மங்களையே பதவி சுயநலத்திற்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசம் காட்டும் அ.தி.மு.க.வின் அரசியல் விநோதத்தை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்" என கூறியுள்ளார்.

மல்லையாவுக்கு மறைமுகமாக ஜெட்லி பதிலடி..



சில நாட்களுக்கு முன்பு இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, 'இங்கிலாந்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். என் மேல் இருக்கும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி அணுகுவேன்' என்று கூறி இருந்தார். இந்நிலையில், இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்தில் இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது மாற்றப்பட வேண்டும்.' என்று பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அப்போது, இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதைப் பற்றி அந்நாட்டு அரசிடம் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெட்லி, 'பலர் கடன் வாங்கிவிட்டால், அதற்கான உரிய பணத்தை செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். பிறகு அவர்கள் லண்டனில் வந்து தங்கிவிடலாம் என்றும் நினைக்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்.' என்று பேசியுள்ளார். விரைவில் இங்கிலாந்து சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஜெட்லி இப்படி பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





நெடுவாசலை விட அதிக ஹைட்ரோ கார்பன் இங்கே இருக்கிறது... அரசின் கவனத்துக்கு!
vikatan.com

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே....

இந்திய அரசு ஹைட்ரோ கார்பனை தேட வேண்டிய இடத்தை விட்டு விட்டு புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தேடுகிறார்கள். அது தான் பிரச்சினை.



தமிழகத்தில் மிஞ்சியிருக்கும் விவசாயத்தை அழிக்கும் மிகப்பெரிய அழிவுத்திட்டம். இந்த அழிவுத்திட்டத்தால் எப்படி நிலத்தடி நீர் பாதிக்கும், எப்படி விவசாய நிலங்கள் அழியும் என்பது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதால், அதைப்பற்றி விரிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இன்றைய தமிழக இளைஞன் மீத்தேன் வாயு எடுக்கும் விதத்தை பற்றி, அதனால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறான்.

இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் விஷன் 2025ன் படி, இந்தியாவில் இருக்கும் 29 படிகப்பாறை (Sedimentary Basin) யின் அளவு 3.14 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் தான் ஹைட்ரோ கார்பன் இருக்கிறது.

அதில் 1.39 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு நிலத்திலும்,

1.35 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு 3 ஆழ் கடல் பகுதிகளிலும் – அதாவது கிழக்கு கடற்கரை பகுதி, மேற்கு கடற்கரை பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் உள்ள ஆழ்கடல் பகுதி.

0.40 மில்லின் சதுர பரப்பளவு உள்ள கடல்ஒரம் உள்ள பகுதியிலும் காணப்படுகிறது.

இந்தியா ஹைட்ரோ கார்பன் உபயோகத்தில் 4 வது பெரிய நாடு, ஹைட்ரோ கார்பன் இறக்குமதியில் உலகில் 5 வது பெரிய நாடு. இதில் 75 சதவிகிதம் நாம் இறக்குமதி செய்கிறோம். நாம் எரிசக்தி பயன்பாட்டில் 45 சதவிகிதம் ஹைட்ரோ கார்பன் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் ஆழ்கடலில் இருக்கும் 3 பகுதிகளில் இருந்து மட்டும் 11 பில்லியன் டன் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்யலாம். இதில் 7 பில்லியன் டன் ஆயில், 4 பில்லியன் டன் வாயு, இதில் ஆயில் 1 பில்லியன் மற்றும் 3 பில்லியன் அளவு வாயு பிரித்து எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தினால், அதை இந்த அதிகாரிகள் கடலிலே கண்டரிய ஆழ்குழாய் கிணறு தோண்டினால், இந்தியாவின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஹைட்ரோ கார்பன் தேவையை நாள் ஒன்றுக்கு 410 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவில் எடுக்க முடியும்.

இது ஹைட்ரோ கார்பன் விஷன் 2025ல் சொல்லப்பட்ட இலக்கான ஒரு நாளைக்கு 550 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவை சுலபமாக எட்டும், அப்படியே குறைபாடு இருந்தாலும், அது மிகச் சிறு இடைவெளிதான், இதை 0.40 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவில் இருக்கும் ஆழமில்லா கடல்பகுதியிலும், பாலைவனப் பகுதியிலும், மற்ற வறண்ட நிலப்பரப்பிலும் உள்ள பகுதியில் எடுக்க வாய்ப்பு இருக்கும் போது, எதற்காக மத்திய அரசின் ONGC நிறுவனம் தமிழ்நாட்டில் எடுக்க வேண்டும்?. ஏன் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியை செய்ய வேண்டும்?. விவசாய நிலங்களை பாழ்படுத்த வேண்டும்?

எனவே, பாரத பிரதமர் அவர்களே, அதிகாரிகளின் தவறை அறிமுக நிலையில் கண்டறிந்து மக்களின் பிரதமராக செயல்படுங்கள்.

விஞ்ஞானிகளாலும், தொழில் நுட்பத்தாலும் ஹைட்ரோ கார்பன் எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியும். அதிகாரிகளால் அதை எடுக்க திட்டம் மட்டும் போட முடியும். ஆனால் மக்களால் மக்களுக்கான ஆட்சியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே, இந்த திட்டம் மக்களை பாதிக்கும் திட்டமா, இல்லை இதை செய்வதால் ஏற்படும் சாதக பாதகம் என்ன என்று சிந்திக்க முடியும்.



மக்களுக்கு பாதிப்பு என்றால், விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட்டாகவே மாற்றக்கூடாது என்று நீதிமன்றங்கள் கடுமை காட்டிக்கொண்டிருக்கும் போது, நன்றாக விளையும் விவசாய நிலங்களை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களாக மாற்றும் உரிமையை இந்த அதிகாரிகளுக்கு யார் கொடுத்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவதை உடனடியாக தடை செய்து அரசாணை வெளியிடுங்கள்.

புதுக்கோட்டை நெடுவாசலில், இராமநாதபுரத்தில் வெட்டியாக சுற்றித்திரியும் ONGC அதிகாரிகளை உடனடியாக ஆழ்கடலில் இருக்கும் 3 பகுதிகளுக்கு ஹைட்ரோகார்பனை கண்டறிய ஆழ்கடலுக்கு அனுப்புங்கள்.

விவசாய சுற்றுப்புற சூழல் சீரழிவிற்கு வித்திடும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் எடுப்பதை தடை செய்யுங்கள்.

இதை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைந்தது, இளம் தமிழனின் யுகப்புரட்சி ஜல்லிகட்டு, அமைதியின் சின்னமாக, கோரிக்கையின் வலிமையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தியது ஜல்லிகட்டு யுகப்புரட்சி. ஒவ்வொரு அநீதிக்கும் அவன் களத்தில் இறங்கினால் தான் நாங்கள் செயல்படுவோம் என்று நீங்கள் நினைத்தால், அது அவன் தவறல்ல அது உங்கள் தவறு.

அவனவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறான். அதை விடுத்து, அவனை களத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தாதீர்கள்.

இது போல ஒவ்வொன்றுக்கும் தமிழக இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்றால், இந்த அரசியல் சாக்கடைகளை அப்புறப்படுத்த அவன் களத்தில் இறங்குவான்.

மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக, அறிவார்ந்த நிலையை விட்டு, அராஜக ஆட்சி செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை தேர்தல் ஜனநாயகத்தில் கலந்து கொண்டு மாற்றத்தை கொண்டு வருவான் தமிழ் இளைஞன்.

எனவே பாரத பிரதமர் அவர்களுக்கு எங்களது வேண்டுகோள், மலை சார்ந்த வன சுற்றுப்புற சூழலுக்கும், விவசாயம் சார்ந்த நிலத்தடி நீர் சுற்றுப்புற சூழலுக்கும் எதிராக இருக்கும் இந்த திட்டங்களை நீங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிலத்தில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டாமல், ஆழ்கடலிலே செயல்படுத்தி ஹைட்ரோ கார்பன் விஷன் 2025 திட்டத்தை செயல்படுத்த வழி இருக்கும் போது உங்கள் பெட்ரோலியம் அமைச்சருக்கு அறிவுறுத்தி இந்தியாவின் நிலத்தில் தோண்டி ஹைட்ரோ கார்பன் கண்டறியும் திட்டத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டுவாருங்கள்.

இல்லையென்றால், மீண்டும் ஒரு யுக புரட்சியை விவசாயிகளோடு சேர்ந்து மாணவர்களும், இளைஞர்களும் கையெடுக்க நேரிடும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே மாற்றம் மேலிருந்து வந்தால் அரசாட்சி அது மக்களாட்சி, நல்லாட்சி, அதுவே கீழிருந்து மேலே சென்றால் புரட்சி.

எது வேண்டும் என்பது எங்களை ஆளும் உங்கள் கைகளில்.

-வெ. பொன்ராஜ்

ஸ்டாலின் புகார் எதிரொலி'!காங்.தலைவர் திருநாவுக்கரசர் மாற்றம்?





தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குறித்து வலுவான புகார் அளித்துள்ளார்.இதனால் அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சத்திய மூர்த்தி பவன் தரப்பினர் நம்மிடம் கூறுகையில்,"தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட நாள் முதலே அவரின் அ.தி.மு.க. சார்பு நிலை தெளிவாகத் தெரிந்தது.அப்போதே கட்சியின் முக்கிய தலைவர்கள் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமையிடம் தெரிவித்தார்கள்.ஆனால் அது எடுபடவில்லை.இந்த நிலையில்,ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியல் சூழல் குழப்பமான நிலையில் இருந்தது.அது இப்போதும் தொடருகிறது.இந்த நேரங்களில் தற்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவில்லை.

மாறாக முந்தைய தலைவர்கள் நியமித்த மாவட்ட தலைவர்களை மாற்றுவதிலும், அ.தி.மு.க.சார்பை அடிக்கடி வெளிப்படுத்துவதிலும் நோக்கமாக இருக்கிறார்.இந்த நிலையில்,கடந்த 3 நாட்களாக அவர் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.தலைவர் சோனியா காந்தியையும்,துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.ஆனால் அது கிடைக்கவில்லை.அதனையடுத்துத் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். ஆனால் எந்த முக்கிய முடிவும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் அறிவிக்க முடியும் என்று முகுல் வாஸ்னிக் அவரிடம் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.



அதே நேரத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,தலைவர் சோனியாவையும் துணைத் தலைவர் ராகுலையும் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழக காங்கிரஸ் நிலையை அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசர் அ.தி.மு.க. சார்பாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து எப்படி தேர்தல்களைச் சந்திப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.அதனை அவர்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும்,ஸ்டாலின் திருநாவுக்கரசர் அண்மைக்காலமாக வெளியிட்ட அறிக்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு புத்தக வடிவில்,டெல்லி தலைமையிடம் அளித்துள்ளார்.உ.பி. மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகக் காங்கிரஸ் தலைவராக,முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,தங்கபாலு உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பட்டியலில் உள்ளன என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

அப்துல் கலாம் படித்த கல்லூரியில் தமிழ் கலாசாரத் திருவிழா! #VikatanExclusive




வேட்டி சேலை, தாவணி என கலர்ஃபுல்லாக இருந்தது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) கல்லூரி வளாகம். ட்ரம்ஸ் இசைக்கருவிகள் அதிர பத்து மணி வரை எழுந்திருக்காமல் இரவு முழுவதும் படித்த மாணவர்களின் கனவினை கலைத்து எழுப்பியதோடு, பக்கத்தில் உள்ள குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ளவர்களையும், பேருந்து நிலையத்தில் உள்ளவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்துல் கலாம் படித்த மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) தமிழ் கலாசாரத் திருவிழா. இந்த விழாவில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உள்ளே சென்று விழாவில் கலந்துகொண்டோம்.

பறை, உரி, நாதஸ்வரம், தவில் மேளம் என்று தமிழிசை முழக்கமிட எல்லோரையும் விசிலடித்து உற்சாகமாக வரவேற்றார்கள் கல்லூரி மாணவர்கள். பட்டுப்புடவையுடன் வந்திருந்த கல்லூரி மாணவிகள் வெள்ளை வேட்டி சட்டையுடன் மிடுக்குடன் வந்த மாணவர்களைச் சிதற விட்டு நடனமாட வைத்தார்கள்.

விழாவின் தொடக்கத்தில் இசைக்கருவிகள் முழக்கங்களுடன் தமிழில் முக்கியமான வாசகங்களை முழங்கியபடி பேரணி நடத்தினார்கள். அதன் பின்பு 'தாமரை பொண்ணு....குங்குமப் பொட்டழகி, கொங்கு நாட்டுக் கனியே!’ என்று நாட்டுப்புறப் பாடல் பாட உற்சாகம் தொற்றிக்கொண்டது மாணவர் மாணவிகளுக்கு.



பாடல்களுக்குத் தகுந்தாற்போல் மாணவர்கள் லுங்கி நடனத்தை, வேட்டியுடன் ஆடிய காட்சி அசர வைத்தது. பாடலின் நடுவில் 'அடி சிறுக்கி, அமுதவல்லியே, ஏன் சிரித்தாய்?' என்ற குரலோசை கேட்டதும், பார்வையாளர்களாக கலந்துகொண்ட மாணவிகள் ஓரக்கண்ணில் மாணவர்களைப் பார்த்த போது கலகலப்பில் களைகட்ட ஆரம்பித்தது விழா.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என இசைக் கச்சேரி மாணவர்களுக்குத் தமிழ்க் கலாசாரத்தை நினைவில் கொண்டு வந்ததோடு உற்சாகத்தையும் கூட்டியது. இடையிடையே ஒவ்வொரு தமிழர்களின் கலாசாரப் பெருமைகள் குறித்தும், அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்கள், மருத்துவ முறைகள் என ஏகப்பட்ட விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள் சீனியர் மாணவர்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளரும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நான்காம் ஆண்டு படித்துவரும் மாணவியுமான கீர்த்தனாவிடம் பேசினோம்.

"ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கலாசார நிகழ்ச்சியினை நடத்துவோம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வினை ஒட்டி 'தமிழன்டா' என்று நிகழ்ச்சியினை மாற்றி 'தமிழ் கலாசாரத் திருவிழா' நடத்தி வருகிறோம். இன்றைக்கு பொறியியல் படித்து மாணவர்கள் தமிழ் கலாசாரத்தை மறக்காமல் இருக்கவும், வருங்காலத்தில் தமிழ் கலாசாரத்தைப் பாதுகாக்கவும் இந்த விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். இங்குத் தமிழில் பிரபலமாக சொற்றோடர்களை எல்லாம் தொகுத்து காட்சிப்படுத்தி இருக்கிறோம். கலைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அடுத்து மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வர கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, கதை, ஓவியம் எனப் பல போட்டிகள் நடத்துகிறோம். இதில் பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்குத் தயாரானார் கீர்த்தனா.

நாட்டுப்புறப்பாடல் நடன நிகழ்ச்சியில் 'தெற்கு தெருவிலே... தேரோடும் வீதியிலே வாராளே கண்ணாத்தா' என்ற பாடல் ஒலித்தபோது மாணவிகளிடம் குலவைச் சத்தம்! இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எஸ்எஸ்என் கல்லூரி மாணவிகளின் கரகாட்டம் சபாஷ் போட வைத்தது. சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள் இயற்கையினை மீட்டெடுத்தன. நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியில் சிறந்த நூல்கள், சிறந்த வார இதழ்கள், சிறந்த படைப்பாளிகள், சிறந்த பேச்சாளர்கள் என்று தமிழ் இலக்கியப் பரிசுக்கான ஓட்டெடுப்பு நடத்தினார்கள்.



''ஒவ்வொரு ஆண்டும் 'மிட்டாபெஸ்ட்' என்ற நிகழ்ச்சியினை நடத்துவோம். இந்த ஆண்டு தமிழர்களின் பெருமை பேசும் விதமாக 'தமிழன்டா' என்ற பெயரில் 'இனி ஒரு விதி செய்வோம் தமிழருக்கு' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்துகிறோம். தமிழர் பேரணி, கலை நிகழ்ச்சி, வீதி நாடகம், தமிழர் விருது, தமிழர் விளையாட்டு, என ‘வையத் தலைமைக்கொள்’ என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். இதன் மூலம் மாணவர்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை நினைவுபடுத்தி அடுத்த தலைமுறைக்கும் தமிழ் கலையினை எடுத்துச்செல்கிறோம். தமிழ்நாட்டில் முகம்தெரியாமல் ஏராளமானவர்கள் கல்விக்காகவும், தமிழர் மேம்பாட்டுக்காகவும் உதவி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம்" என்கிறார் மாணவ பேரவை தலைவர் மனோஜ்.

இந்தவிழாவில் பைக் ஸ்டண்ட் ரேஸை நடத்தினார்கள். இது பற்றி விசாரித்த போது, 'நகரத்தில் மாடும் இல்லை, மாட்டு வண்டியும் இல்லை. இருந்திருந்தால் ரேக்ளா ரேஸ் நடத்தி இருப்போம். இன்றைக்கு எல்லா இளைஞர்களிடமும் பைக் இருக்கிறது. அதனால் ஒரு புதுமையாக பைக் ஸ்டண்ட் ரேஸை நடத்துகிறோம்' என்றார்கள் இளைஞர்கள்.

கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்கள். நிரம்பி வழியும் கூட்டத்துக்கு இடையிலும், எந்த விதமான சலசலப்பும் சலனமும் இல்லாமல் கண்ணியத்துடன் நடந்தது கலாச்சார விழா. இது ஜல்லிக்கட்டு புரட்சியினை ஞாபகப்படுத்தியது. வெயில் வாட்டி எடுத்தாலும் களைப்படையாமல் இருந்தனர்.

மாணவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி விட்டோம் ஜூட்!

நடிகர் தவக்களை காலமானார்!



நடிகர் தவக்களை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 42. வடபழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமான தவக்களை ஆண்பாவம், கமலின் காக்கிச் சட்டை உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கு நாளை நடக்கிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு.  அவருக்கு குழந்தைகள் இல்லை.

வெள்ளியங்கிரி மலை.. இரவுப் பயண அனுபவம்!
vikatan.com


இது நடந்தது 2006-ல். கோவையில் நாளிதழ் ஒன்றில் பணி. பரபரப்பான நகர வாழ்க்கைக்கு இடையே ஒருமுறை வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான வாய்ப்பு கிட்டியது. கோவையில் இருந்து சிறுவாணி சாலையில் 20 கி.மீ தொலைவில், பூண்டி என்ற இடத்துக்கு தனிப்பாதை விலகிச் செல்லும். அந்தப் பாதையில்தான், ஈஷா யோக மையம் இருக்கிறது. ஈஷாவுக்கு முன்னர் இடதுபுறத்தில் சென்றால் வெள்ளியங்கிரி மலை. யானைகள் நடமாடும் பகுதி. மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் நம்மை வரவேற்கும்.



வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பெளர்ணமி அன்று, ஒரேநாள் இரவில் 3 லட்சம் பக்தர்கள் மலை ஏறுவார்கள். அந்தத் தருணத்தை புகைப்படமாகப் பதிவு செய்ய வேண்டுமென்பது ஆசை. சித்ரா பெளர்ணமியும் வந்தது. வெள்ளியங்கிரி என்பது கிட்டத்தட்ட 7 மலைகளைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரம் கொண்டது. ஒவ்வொரு மலையையும் தாண்டித்தாண்டி செல்ல வேண்டும். பகலில் செல்வது கடினமான விஷயம். காட்டைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.

கோவையைப் பொறுத்தவரை, அன்றைய தேதிவரை வெள்ளியங்கிரி மலையின் உச்சிக்கு எந்த பத்திரிகை புகைப்படக் கலைஞரும் சென்று போட்டோ எடுத்தது இல்லை. அதனால் சித்ரா பெளர்ணமி தினத்தில் மலையில் இரவில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல். மலைப் பயணத்துக்குத் தேவையான அனைத்தையும் முதுகில் சுமையாக ஏற்றிக் கொண்டோம். தோள்பை, தண்ணீர் கேன்கள், டார்ச் லைட் வயிற்றுக்கு பிரச்னை தராத உணவு வகைகள் சேர்த்தாகி விட்டது. கூடவே நமது உடன்பிறப்பும் ஒட்டிக் கொண்டது. அதுதான் கேமரா. அது இல்லாமல் ஒரு மலைப் பயணமா?

சித்ரா பெளர்ணமியில் கூட்டத்தோடு கூட்டமாக பயணிப்பது கொஞ்சம் ஆபத்தானதுதான் .சிங்கத்தைத் தவிர அத்தனை மிருகங்களும் வசிக்கும் அடர்ந்த வனம். முதல் மலையைத் தவிர மற்ற மலைப்பாதைகள் ஒற்றையடி பாதைதான். நெரிசல் ஏற்பட்டால் ஏராளமானோர் பலியாகி விட வாய்ப்பும் உண்டு. ஒருமுறை அதிக பனிப்பொழிவில் சிக்கி, சிலர் பலியானதாகத் தகவல்.

பொதுவாகவே மார்ச் முதல் மே வரை மலை ஏறலாம். ஆனால் சித்ரா பெளர்ணமியில் நிலவொளியில் நடந்து செல்வது நமக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அதனால், அன்றைய தினத்தில் லட்சக்கணக்கானோர் மலை ஏறுகின்றனர்.

இரவு 7 மணி முதல் மலையின் படிகளை பார்த்த போது பயம் தெரியவில்லை. கையில் 5 அடி மூங்கில் கம்பு வைத்துக் கொண்டு ஏறத் தொடங்கினோம். சரியாக 20 படிகள்தான் ஏறியிருப்போம். மூசசு வாங்கத் தொடங்கியது. 100 படிகள் ஏறியதும் உடல் முழுக்க வியர்வை கொட்டியது. 'ஏம்பா திரும்பி போயிடலாம்பா’ என்று மனசு சொன்னது. கண் முன்னால் அந்த எடிட்டர் முகம் வேறு வந்து போனது. 'இவ்ளோதான் உங்க சவடாலா?’ என்று மனசுக்குள் அவர் குரல் கேட்டது.

அந்தச் சமயத்தில் 60 வயது பாட்டி ஒருவர் மின்னல் வேகத்தில் எங்களை கடந்து போக வியப்பாகி விட்டது. வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பாட்டியிடம் நைசாகப் பேச்சுக் கொடுக்க ஓடினோம். 'என்ன பாட்டி இவ்ளோ வேகமா போறீங்களேனு' கேட்டால், 'தம்பிகளா 10 வருஷம் எக்ஸ்பிரியன்ஸ். மத்த நாள்னா ஒரே இரவிலேயே ஏறி இறங்கி விடுவேன்’-னு அசால்டாக பதில் வர, நாங்கள் விக்கித்துப் போனோம். 20 படிகள்ல அக்கடானு உட்கார்ந்த எங்களுக்கு, அந்தப் பாட்டியின் பதில் வியப்பூட்டியது. இந்தா வர்றோம் என்று நிமிர்ந்தால்... பாட்டியைக் காணோம். பல அடிகள் முன்னால போய்ட்டிருந்தாங்க.

பாட்டியைப் பார்த்தது, சற்று தெம்பு கொடுத்தது. முன் வச்ச கால பின்வைக்க வேண்டாம்னு மேலே போகத் தொடங்கினோம். கொஞ்ச தொலைவுல ஒரு பிள்ளையார் கோயில் வந்தது. அவர் வெள்ளை பிள்ளையார். அந்த இடத்துல கொஞ்ச நேரம் அமர்ந்தோம். ‘ஏம்பா.. இப்படி இருந்து இருந்து போனீங்கனா, நாளைக்கு காலைல 10 மணிக்குதான் போய்ச் சேருவீங்க. மள மளன்னு போய்ட்டு, வெயில் ஏர்றதுக்குள்ள திரும்புங்க’னு ஒரு பெரியவர்கிட்ட இருந்து அட்வைஸ். சொல்லிட்டு அவர் நடந்த வேகம்.. எங்களுக்கு அடுத்த பூஸ்ட். தொடர்ந்து நடக்கத் தொடங்கினோம். வெள்ளியங்கிரி மலையைப் பொறுத்தவரை, வெள்ளைப் பிள்ளையார் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, விபூதி மலை, ஒட்டன் சமாதி மற்றும் சுவாமி மலை போன்றவை முக்கியமானவை. இதில் 4வது மலையில் சிறிய கடை இருக்கிறது. அங்கு நமக்கு டீ, காபி கிடைக்கும். நொறுக்குத் தீனிகளும் கிடைக்கும்.ஆரஞ்சு மிட்டாய் போன்ற நாக்கை வறளாமல் வைத்துக்கொள்ள, சிறியரக மிட்டாய்களும் அங்கு கிடைக்கும்.



ஐந்தாவது மலை முழுவதும் சோலை மரங்கள் நிறைந்த சோலைக் காடுகள் உள்ளன. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், இங்குள்ள புற்களில் அமர்ந்து விடக் கூடாது. அட்டை ஒட்டிக் கொள்ளும். அதுபோல் சுனை நீரில் கால் வைக்கும் போதும் கவனம் தேவை. சில இடங்களில் செங்குத்தாகவும் ஏற வேண்டியது இருந்தது. ஏழாவது மலையில்தான் சுவாமி இருக்கிறது. இதனால், அதன் பெயர் சுவாமி மலை. ஏழாவது மலையை அடையவும் பளபளவென விடியவும் சரியாக இருக்கும். அதிகாலை சூரியன் உதிப்பதை பார்க்க கோடி கண்கள் வேண்டும்.

இரவு நேரத்தில் நாம் கடந்து வந்த பாதையின் ஆபத்தான பகுதிகள் தெரியாது. பகலில் இறங்கத் தொடங்கிய போதுதான் வெள்ளியங்கிரி மலையின் ஆபத்தும், அழகும் ஒருசேர வியக்க வைத்தது.

நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.. ஒருமுறை சென்று வாருங்களேன்!

-எம்.குமரேசன்

மதுரையில் தொடரும் பிரமாண்ட பிரியாணி திருவிழா!



மதுரையில் பிரமாண்டமான முறையில் பிரியாணி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோயிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக, பிரியாணி திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பிரமாண்டமான முறையில் பிரியாணி சமைத்து அனைவருக்கும் வழங்கி அந்த வட்டாரத்தையே மணக்கச் செய்தார்கள். இந்நிலையில், மதுரை தெற்குவாசல் பள்ளிவாசல் கந்தூரியை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட தேக்சாவில் பிரமாண்ட பிரியாணி தயாரிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காலை முதல், மட்டன் பிரியாணியும், தால்சால்னாவும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன.

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு உண்டா… இல்லையா? மாணவர்கள் என்ன செய்யவேண்டும்? #VikatanExclusive #MustRead

vikatan.com

மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்ட மாணவர்கள் மீண்டும் சோதனைக் களத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு `நீட்' தேர்வு (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) மூலமாகவே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான நாளையும் (மே-7) அறிவித்துவிட்ட நிலையில், +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் வகையில் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு. ஏற்கெனவே மனதளவில் தேர்வுக்கு தயாராகியிருந்த மாணவர்களை இப்போது மீண்டும் குழப்பம் சூழ்ந்திருக்கிறது.



தமிழகத்தில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) 3060 இடங்களும், முதுநிலைப் படிப்புகளில் 1331 இடங்களும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 192 இடங்களும் உள்ளன. இவை தவிர, 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3450 இளநிலை மருத்துவப் படிப்புகள் இருக்கின்றன. 1985-86களில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வியில் பின்தங்கியிருப்பதால், அங்குள்ள மாணவர்களுக்கு வாய்ப்புத் தரும் வகையில் ‘மத்தியத் தொகுப்பு’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. அதன்படி இந்தியாவில் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் இளநிலைப் படிப்புகளில் 15 சதவீத இடத்தை மத்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக AIPMT என்ற அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தி வந்தது. மீதமிருக்கும் இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 65 சதவீத இடங்களுக்கும் மாநில அரசே +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும்.

முதுநிலைப் படிப்புகளைப் பொறுத்தவரை, 50 சதவீத இடங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட்டு மத்திய அரசு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. மீதமிருக்கும் 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் பிற மருத்துவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. இதற்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்குக் கொடுத்தது போத மீதமிருக்கும் இடத்தை தாங்களாகவே நிரப்பிக் கொண்டன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தாங்களே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்த்தன.

தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடு நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், 2010 டிசம்பரில் ‘NEET’ என்ற தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்தது இந்திய மருத்துவக் கவுன்சில். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் இந்தத் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில். 2016 மே மாதம் NEET தேர்வை கட்டாயமாக்கியது உச்சநீதிமன்றம். உடனடியாக தேர்வுக்கான நாட்களும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, எதிர்க்கும் மாநிலங்களில் மட்டும் தேர்வை ஓராண்டுக்கு தள்ளிப்போடுவதற்கான சட்டம் ஒன்றை இயற்றியது மத்திய அரசு. அதன்படி கடந்தாண்டு வழக்கம் போலவே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.



இதற்கிடையில், எல்லா இடங்களிலும் புற்றீசல் போல NEET பயிற்சி மையங்கள் முளைக்கத் தொடங்கின. நிறைய மாணவர்கள் இந்த மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணங்கள் கறக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தேர்வுக்கான தேதியையும் அறிவித்து விட்டது மத்திய கல்வி வாரியம். மீண்டும் NEET தேர்வுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் இரண்டு சட்ட மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதை உறுதி செய்யும் சட்டம்; முதுநிலை மருத்துவ படிப்புகளில் மத்தியத் தொகுப்புக்கு கொடுத்தது போக மீதிமிருக்கும் 50 சதவீத இடத்திற்கு மாநில அரசே மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதி செய்யும் சட்டம்...

இச்சூழலில் மே 7ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? தேவையில்லையா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இச்சூழலில், NEET தேர்வு குறித்து கல்வியாளர்கள் மத்தியிலேயே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தகுந்தது. ”இந்தத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்; பெரும் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற இடஒதுக்கீட்டு உரிமையை குலைத்து விடும்; மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு ஒற்றைப்பாடத்தின் வழியாக, ஒற்றையாட்சி முறைக்கு இந்தியாவை நகர்த்திச் சென்றுவிடும் என்று ஒரு தரப்பு எதிர்க்க, மற்றொரு தரப்பினர், ”எதிர்க்க வேண்டியது தமிழகத்தின் கல்வி முறையைத் தான்; நீட் தேர்வை அல்ல” என்கிறார்கள்.

“NEET தேர்வு விவகாரத்தை சில கல்வியாளர்கள் உணர்வு சார்ந்த விஷயமாக அணுகுகிறார்கள். அறிவு சார்ந்தும் அணுக வேண்டும். இந்தத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையானது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதைப் போலவும் இனிமேல் அந்த வாய்ப்புகள் கிடைக்காது என்பது போலவும் பேசுகிறார்கள். 2014-15 கல்வியாண்டில் +2 மதிப்பெண் அடிப்படையில் அரசு நிரப்பிய 2975 இடங்களில் வெறும் 37 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 3 பேர் மட்டும் தான் மருத்துவப் படிப்புக்குப் போனார்கள்.

2015-16ல் மொத்தமிருந்த 2,253 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்த 24 மாணவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது. மீத இடங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்தவர்கள் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் தான். 2009-10 கல்வியாண்டில் தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 425 இடங்களில் வெறும் 9 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. ஆக, கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. நாம் எதிர்க்க வேண்டியது NEET தேர்வை அல்ல. தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தான்...” என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதுகிறார்கள். இவர்களில் 70 சதவீதம் பேர், அரசுப்பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவர்கள். 70 சதவீதம் பேருக்கு 4 சதவீதம். 30 சதவீதம் மட்டுமேயான தனியார் பள்ளி மாணவர்களுக்கு 96 சதவீதம். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு பாடங்களையும் 11ம் வகுப்பு பாடங்களையும் முழுமையாக நடத்துவதில்லை. பெயருக்கு கொஞ்சம் நடத்தி விட்டு 10, +2 பாடங்களையே இரண்டாண்டுகளிலும் நடத்துகிறார்கள். படிப்பு, தேர்வு என்று, வேறு சிந்தனையே எழாதவாறு மாணவர்களை வதைத்து மதிப்பெண்களை வாங்க வைக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் அப்படியெல்லாம் நடத்த முடியாது. இங்கு படிக்கும் மாணவர்கள், ஏழைகள். பலர் பகுதிநேரமாக பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இவர்கள், இரண்டாண்டுகள் +2 படித்துவிட்டு தேர்வுக்கு வருகிற தனியார் பள்ளி மாணவனோடு போட்டி போட வேண்டிய நிலை. வெகு எளிதாக முதன்மையான கல்லூரிகளையும், படிப்புகளையும் தனியார் பள்ளி மாணவர்கள் அள்ளிக் கொள்கிறார்கள்.

முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் இந்தக் கருத்தையே வழிமொழிகிறார்.

“இந்தியாவில் இருக்கும் அத்தனை தேர்வு முறைகளும் வடிகட்டும் முறைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது அரசுப்பள்ளியில் படிக்கிற, தாய்மொழி வழியில் படிக்கிற கிராமப்புற மாணவர்கள் தான். ”நீங்களெல்லாம் இங்கே வர தகுதியுடையவர்கள் இல்லை” என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். NEET தேர்வில் ஒரு முக்கிய அம்சத்தை கவனிக்க வேண்டும். மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகளில், தங்கள் மாநில மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் வேறுமாநில மாணவர்கள் யாரும் நம் கல்லூரிகளுக்கு வரப்போவதில்லை. வழக்கம் போலவே தனியார் பள்ளி மாணவர்கள் தான் அங்கே வரப்போகிறார்கள். இந்தத் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் என்கிறார்கள். உண்மையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. கற்பித்தலிலும், தேர்வுமுறையிலும் தான் பிரச்னை இருக்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டம், சுயமாக யோசிக்கும் விதத்தில், சுய மொழியில் எழுதும் வகையில் இருக்கும். இங்கு, பாடப்புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மனப்பாடம் செய்து எழுத வேண்டியிருக்கிறது. சிந்தனைக்கே வேலையில்லை. புத்தகத்தைத் தாண்டி கேள்வி கேட்டால், அவுட் ஆப் செலபஸ் என்று சொல்லி கூடுதல் மதிப்பெண்
கேட்பார்கள்.

அரசுப்பள்ளிகளில் நடக்கும் இன்னொரு அபத்தம் ஆங்கில வழிக் கல்வி. தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அவற்றைப் பார்த்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. நேற்று வரை தமிழ் வழியில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆங்கில வழியில் எப்படி பாடம் நடத்துவார்கள்? அவர்களுக்கே போதிய திறன் இல்லாதபோது, மாணவர்களின் சிந்தனையை அவர்கள் எப்படித் தூண்ட முடியும்? அரசுப்பள்ளிகள் என்றில்லை... புறநகரங்கள், கிராமப்புறங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குக் கூட ஆங்கிலத்தில் போதிய திறன் இல்லை என்பதே உண்மை. கல்வியில் நாம் இமாலயத் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பது தான் உண்மை. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் NEET தேர்வை எதிர்ப்பது தேவையற்றது. இந்தத் தேர்வால் பாதிப்பே இல்லை என்று சொல்லவில்லை. எந்த சூழலிலும் மத்திய அரசு மாநில உரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி மாநில அரசின் கையில் தான் இருக்க வேண்டும். ஆனால், நாம் உடனடியாக செய்ய வேண்டியது, NEET தேர்வை எதிர்ப்பதல்ல. கல்வித்திட்டத்தை, பாடத்திட்டத்தை மாற்றுவது. கல்வியை அரசு முழுப்பொறுப்பில் எடுத்துக் கொள்வது, தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயப்படுத்துவது...” என்கிறார் வசந்திதேவி.



NEET தேர்வு மட்டுமல்ல... அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட அனைத்து நுழைவுத்தேர்வுகளிலுமே தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள். அதற்குக் காரணம், இங்கே மாணவர்களை தயாரிக்கும் முறை. 1978ல் 11 ஆண்டு பள்ளிப்படிப்பு, ஒரு ஆண்டு ப்ரி யுனிவர்சிடி படிப்பு, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு என்று இருந்ததை 10+2+3 என்று மாற்றினார்கள். 10ம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு. +1, +2 என்பது கோர்ஸ். +1-ல் பாதிப் பாடங்கள் இருந்தால், +2-ல் பாதிப்பாடங்கள் இருக்கும். இரண்டையும் படித்தால் தான் மாணவர்களுக்கு தெளிவான புரிதல் கிடைக்கும். அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும் +1-ல் இருந்து பாதி கேள்விகளும் +2வில் பாதி கேள்வுகளும் தான் கேட்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் +1 நடத்தாமல் இரண்டு ஆண்டுகளிலும் +2 நடத்துவதால் பதில் எழுதமுடியாமல் தோல்வி அடைகிறார்கள்.

ஆந்திரா இந்த விதத்தில் நமக்குப் பாடம் நடத்துகிறது. +1, +2 படிப்புகளை ஜூனியர் காலேஜ் என்ற பெயரில் நடத்துவதோடு, இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தி இரண்டு மதிப்பெண்களையும் பகுத்து இறுதி கிரேடை முடிவு செய்கிறார்கள். அதனால் தான் அத்தனை மத்திய நிறுவனங்களிலும் ஆந்திர மாணவர்கள் நிறைந்திருக்கிறார்கள். 2008ல் ஐஐடி நுழைவுத்தேர்வில் ஆந்திராவில் இருந்து 1697 பேர் தேர்ச்சி பெற்றார்கள். தமிழகத்தில் இருந்து 202 பேர் மட்டுமே சேர முடிந்தது. 2016ல் சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திரப் பாடத்திட்டத்தில் இருந்து 158 பேரும், தெலுங்கானா பாடத்திட்டத்தில் இருந்து 155 பேரும் தேர்வானார்கள். தமிழக பாடத்திட்டத்தில் இருந்து தேர்வானது வெறும் 13 மாணவர்கள்.



“பாடத்திட்டத்தில் பிரச்னை இருக்கிறது; அதை சரி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இப்போதைய பிரச்னை வேறு. மாநில அரசின் மொத்த உரிமையையும் பறிக்கிற முயற்சி இது. கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் அளவுக்கு மத்திய அரசின் நிதிநிலை இல்லை என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருந்த காலக்கட்டங்களில் 3 கி.மீக்கு ஒரு தொடக்கப்பள்ளியும், 5.கி.மீக்கு ஒரு உயர்நிலைப்பள்ளியையும் தொடங்கி நம் பிள்ளைகளுக்கு வெளிச்சம் கொடுத்தார் காமராஜர். பள்ளியோடு நம் பிள்ளைகள் நின்று விடக்கூடாது என்று தஞ்சாவூரிலும், செங்கற்பட்டிலும், சென்னையிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை ஆண்ட அத்தனை முதல்வர்களும் அவர்கள் பங்குக்கு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார்கள். நமது முதலீட்டில், நம் பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தும் உரிமையை பறிப்பது என்ன நியாயம்?

இதை மேம்போக்காக, ஒரு தேர்வு என்ற அடிப்படையில் பார்ப்பது விபரீதம். 1980ல் உலக வங்கியிடம் அப்போதைய பிரதமர் இந்திரா கடன் வாங்கியதில் இருந்து தொடங்குகிறது இதன் வேர். அரசின் கடமைகளாக இருந்த கல்வியையும் மருத்துவத்தையும் வணிகமாக்கி வர்த்தகர்கள் கையில் தருவதற்கான முனைப்புகள் அப்போதிருந்து தொடங்குகின்றன. மாணவர்களை மடைமாற்றுவதற்காக தொழிற்கல்விகள் கொண்டு வரப்பட்டன. கல்விக்கொள்கைகள் அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டன. நீதிமன்றங்கள் அவற்றை வழிமொழிந்தன. கல்வியில் யாரும் முதலீடு செய்யலாம். கல்வி வர்த்தகத்தில் யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது. சட்டங்கள், அமைப்புகளை அவற்றுக்கு ஏற்றவாறு திருத்துவது; இதற்கெல்லாம் அடிப்படையாக ஒரே நிர்வாக அமைப்பைக் கொண்டு வருவது. இந்த நீண்ட செயல்திட்டத்தின் ஒரு அங்கம் தான் NEET மாதிரியான தேர்வுகள். மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் மத்திய பாடத்திட்டத்தில் தான் படிக்க வேண்டும். பிறகு எப்படி மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பார்கள்?

படிப்படியாக அதை காலி செய்து விட்டு நாடு முழுவதும் ஒற்றைக் கல்விமுறையைக் கொண்டு வருவது தான் இதன் பின்னுள்ள திட்டம். தனிப்பயிற்சிக்கும், தேர்வுக்கான பயிற்சிக்கும் செல்லும் நகர்ப்புற மாணவனோடு, பால், பேப்பர் போட்டு, வயற்காட்டு வேலைக்குச் சென்று பொருளீட்டிக் குடும்பத்தை காப்பாற்றும் கடமையையும் சுமந்து கொண்டு படிக்கும் ஒரு கிராமப்புற மாணவன் எப்படி போட்டி போட முடியும்? அவன் மருத்துவராக நினைப்பது தவறா? தேர்வில் வெற்றி பெற்றால் தான் இட ஒதுக்கீடு என்றால், தேர்வையே எழுத முடியாத அடித்தட்டு குழந்தைகள் மருத்துவராக வரவே கூடாதா?

NEET தேர்வு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. வடக்கு, வடகிழக்கு மாநிலங்களுக்காக பிற மாநிலங்களின் மருத்துவ இடங்களை பெறும் மத்திய அரசு, 35 வருடங்களாக அந்த மாநிலங்களில் இதுவரை எத்தனை மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளது.? நாம் ஏன் நம் வாய்ப்புகளை இழக்க வேண்டும்? அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வரும் மத்திய அரசு, அதன் நிர்வாகத்தில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்துவது ஏன்? விரைவில் நடக்கவிருக்கிற உலக வர்த்தக மாநாட்டில் நாங்கள் மருத்துவக் கல்வியில் இருந்த அத்தனை இடையூறுகளையும் அகற்றி விட்டோம் என்று வர்த்தகர்களுக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட் வாசிப்பதற்காகத் தான் இந்த தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். கல்வித்திட்டத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த தேர்வை ஆதரிப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள
வேண்டும்...” என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.




NEET தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு சட்டம் நடைமுறைக்கு வருமா? வராதா என்ற குழப்பம் சூழ்ந்துள்ளது... மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

“நிச்சயம் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்த சட்டம் உள்பட எதிலும் மாணவர்கள் கவனம் செலுத்தத் தேவையில்லை...” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

“NEET தேர்வு வெறும் மருத்துவத்திற்கானது மட்டுமல்ல. அடுத்த ஆண்டு முதல் பொறியியலுக்கும், அதற்கு அடுத்த ஆண்டில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் கொண்டு வரப்பட உள்ளது. அதனால் இதை விழிபோடு அணுக வேண்டும். இப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் மத்திய சுகாதாரத்துறை, சட்டத்துறையின் பரிசீலனைக்குப் பிறகு ஜனாதிபதிக்குச் செல்லும். அவர் கையெழுத்திட்டால் நிரந்தரமாக தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இருக்காது. ஆனால், இதில் இன்னொரு பிரச்னை இருக்கிறது. இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மட்டுமே இப்போது சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், உயர் சிறப்புப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களும் இப்போது மத்திய அரசுக்குத் தான் செல்கிறது. பிற மாநில மருத்துவர்களே பெரும்பான்மையாக அதைப் பெறுகிறார்கள். அதற்கும் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்.

1985ல் கொண்டு மத்திய தொகுப்பு கொண்டு வரப்பட்டபோது ஆந்திரமும், ஜம்மு காஷ்மீரும் மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பில் எங்களுக்கு இடமும் வேண்டாம்; நாங்களும் உங்களுக்கு இடம் தரமாட்டோம் என்று வலுவான சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். அதைப்போல, மொத்த இடத்தையும் மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழகத்திலும் வலுவான சட்டம் கொண்டு வரவேண்டும். நாம் மத்தியத் தொகுப்புத் தரும் 450 இடங்களில் கால் பங்கைக்கூட நம் மாணவர்கள் பிறமாநிலக் கல்லூரிகளில் பெறுவதில்லை. NEET தேர்வை தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தி, மத்திய அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். எல்லாவற்றிலும் டிஜிட்டல் பேசுகிற மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணத்தையும் டிஜிட்டலாக்க வேண்டும். தமிழக அரசு ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். நீதிமன்றத்துக்கு சென்றால் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்து எதிர்கொள்ள வேண்டும். ..” என்கிறார் ரவீந்திரநாத்.

தமிழக அரசின் சட்டம் இன்னும் நிறைய தூரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் யாரும் தடை கோரலாம். அப்படி ஒரு சூழல் வந்தால்..?

”மாணவர்கள் வீதிக்கு வரவேண்டும். தங்கள் பண்பாட்டு உரிமைக்காக வந்தார்கள் அல்லவா? அதைப்போல, தங்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டும். அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும். மத்திய அரசு மிரள வேண்டும். தமிழகத்திற்கு போதிய அரிசி தராததைக் கண்டித்து முதல்வராக இருந்த எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தார். 2 மணி நேரத்தில் மத்திய அரசு பணிந்தது. காவிரிப் பிரச்னைக்காக முதல்வராக இருந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததார். மத்திய அரசு பணிந்தது. ஒருவேளை சட்டம் நிராகரிக்கப்பட்டால், இப்போதைய முதல்வர் மெரினாவில் வந்து போராட வேண்டும். மாநிலமே அவர் பின்னால் நிற்கும். வரலாற்றில் அழியாத இடமும் கிடைக்கும்..” என்கிறார் பிரின்ஸ்

கஜேந்திரபாபு.

மருத்துவக் கனவை நனவாக்க இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு! #NEET
vikatan.com



மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) படிக்க திட்டமிட்டு இருக்கும் மாணவர்கள் வழக்கம் போல கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு கல்லூரியில் சேர்ந்து விடலாம் அல்லது கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்ந்து விடலாம் என்று திட்டமிட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வினையும் எழுதி இருந்தால் மட்டுமே மெடிக்கல் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 தேதியே கடைசி. அதன் பின்பு விண்ணப்பிக்கவும் முடியாது, மருத்துவ சேர்க்கையிலும் பங்குபெற முடியாது என்பதால் மறக்காமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து விடவும். விண்ணப்பம் வாங்க எங்கும் போகத்தேவையில்லை. இணையத்தளத்திலேயே விண்ணப்பித்தால் போதுமானது. இதற்கான இணையத்தளம் www.cbseneet.nic.in

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உங்களுடைய ஆதார் எண் அவசியம் என்பதால், ஏற்கெனவே ஆதார் கார்டு வாங்கி வைத்திருந்தால் அதனைத் தேடி வைத்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் போது உதவியாக இருக்கும். ஆதார் அட்டையில் உங்களுடைய பெயர், பிறந்த நாள் போன்றவற்றை எப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அதைப்போலத்தான் உங்களுடைய விண்ணப்பத்திலும் குறிப்பிட வேண்டும். வெளிநாட்டு இந்தியர்களாக இருந்தால் பாஸ்போர்ட் எண்ணைக் குறிப்பிட வேண்டும். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 17 வயதை அடைந்திருக்க வேண்டும். 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டு வரை வயது வரம்பு விலக்கு உள்ளது.

நீட் தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்ணைப் பெற வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது (General) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு ரூ. 1400 ரூபாயும், தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடியினத்தவர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PH) ரூ. 750 ரூபாய் கட்டணம். தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் (BC மற்றும் MBC) பிரிவைச் சார்ந்தவர்கள் OBC பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், மொபைல் வேலட்டுகளின் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முன்னர், உங்களுடைய புகைப்படத்தை ஸ்கேன் செய்து இணையத்தில் வைத்திருக்கவும். அதைப்போலவே போஸ்ட் கார்டு அளவுள்ள உங்களது புகைப்படம், உங்களுடைய கையெழுத்து, வலது கைரேகை போன்றவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். நீட் விண்ணப்பத்தில் மாணவருடைய மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி அல்லது பெற்றோருடைய மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட வேண்டும். ஏதேனும் தகவல் அல்லது மாற்றங்கள் இருந்தால் நீட் தேர்வினை நடத்துபவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு குறுந்தகவலோ அல்லது மின்னஞ்சலோ அனுப்புவார்கள். அதனால் விண்ணப்பத்தில் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் தவறுதல் இல்லாமல் கொடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பித்தவுடன், அந்த விண்ணப்பப் படிவத்தினை மூன்று பிரிண்ட் செய்து எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பக்கட்டணத்திற்கான ஆதாரத்தைக் கையில் வைத்திருங்கள்.

நீட் தேர்வின் மூலம் இந்திய முழுவதும் உள்ள மத்திய அரசின் கோட்டாவில் சேர முடியும். மாநில அரசின் கோட்டாவிலும் சேரலாம். தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலும், மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசுக்கான ஒதுக்கீட்டிலும் சேரலாம்.

மே 7 தேதி நீட் தேர்வு நடக்க இருக்கிறது. மார்ச் மாதம் முழுவதும் பொதுத்தேர்வில் கவனம் செலுத்தவும். அதன் பின்பு ஏப்ரல் மாதம் முழுவதும் நீட் தேர்வில் கவனம் செலுத்தி நீட்டாக மதிப்பெண் பெறலாம். இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) பாடங்களில் இருந்து 180 கேள்விகள் சரியான விடையினை தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் கேட்கப்படும். மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும். கேள்விகள் பதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது பாடங்களில் இருந்து கேட்கப்படும். தமிழ் மொழியிலும் கேள்வித்தாள்கள் இருக்கும் என்பதால் தமிழ் மீடியம் படித்தவர்கள் கவலைகொள்ள தேவையில்லை. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள். தவறாகப் பதிலளித்தால் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. உங்களுக்கு எந்த நகரம் அருகிலும், பேருந்து, ரயில் போக்குவரத்து எளியதாக இருக்கிறது என்று பார்த்து தேர்ந்தெடுக்கவும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வினை விலக்களிக்கக்கோரி சட்ட மன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவிற்கு மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை ஒப்புதல் அளித்தபின்பு குடியரசு தலைவர் கையெழுத்திட வேண்டும். இந்த மசோதா குறித்து தமிழக முதலமைச்சரும் 27-ம் தேதி பிரதமரை சந்தித்துப் பேச இருக்கிறார். ஆனால் இது எல்லாம் சாத்தியம் ஆவதற்கு முன்னால் விண்ணப்பத்தேதி நெருங்கி வருவதால் விண்ணப்பித்து இருப்பது மிகவும் நல்லது. இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் அலுவலத்தில் பேசிய போது "குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்த தீர்ப்பு நமக்குச் சாதகமாகவும் வரலாம், எதிராகவும் வரலாம் என்பதால் மாணவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது" என்று சொன்னார்கள்.

மருத்துவம் படிக்க விரும்பவர்கள் காலம் தாழ்த்தாமல் எந்த முடிவினையும் எதிர்பார்க்காமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும். ஆல் த பெஸ்ட்!

Saturday, February 25, 2017

சின்னம்மா என அழைக்கப் பிடிக்கவில்லை: ஓபிஎஸ் அணிக்கு மாறிய பிரபலம் விளக்கம்




சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகை பாத்திமா பாபு தனது ஆதரவை தெரிவித்தார்.
அதிமுகவில் சசிகலா அணி, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து மௌனம் காத்து வந்த பாத்திமா பாபு நேற்று தனது மௌனத்தைக் கலைத்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான பாத்திமா பாபு சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.
இது குறித்து தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பதில் அளித்த பாத்திமா பாபு, இப்போதும் மக்கள் முதல்வராக பன்னீர்செல்வம்தான் இருக்கிறார். காபந்து முதல்வராக எப்போதுமே ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை மட்டுமே தேர்வு செய்தார்.
ஆனால், தற்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத, அவரால் எந்த அவை நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது என்று கூறியவர்கள்தான் முக்கியப் பொறுப்புகளுக்கு வர போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் வளர்த்த கட்சியை, தனது குடும்பத்தாருக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதோடு, செய்தித் தொலைக்காட்சியில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயரோடு, அம்மா என்றோ, புரட்சித் தலைவி என்றோ அழைத்ததில்லை. ஜெயலலிதா என்று தான் செய்திகளில் குறிப்பிடுவோம். ஆனால், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதும், அவரை செய்திகளில் கூட சின்னம்மா என்று அழைக்க வலியுறுத்தினர். இது நெருடலை ஏற்படுத்தியது.
அதனால், மக்கள் விரும்பும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்தேன் என பாத்திமா பாபு கூறியுள்ளார்.
Dailyhunt
பாகிஸ்தான் டு சவுதி அரேபியா: விமானத்தில் நின்று கொண்டே பயணித்த பயணிகள்!


கராச்சி: கடந்த மாதம் பாகிஸ்தானில் இருந்து சவூதி அரேபியாவின் மதீனாவுக்கு பயணித்த பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில பயணிகள் நின்று கொண்டே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் கராச்சியில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானம் ஒன்று சென்றது.அந்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பயணிகலால் நிரம்பி விட்டது.

ஆனால் அதன் பிறகு ஏழு பயணிகள் விமானத்தின் இருக்கைகளுக்கு நடுவே இருக்கக் கூடிய நடக்கும் வழியில் உள்ள இடத்தில் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று பிஐஏவின் செய்தி தொடர்பாளர் அதன் பிறகு பிரபல செய்தி நிறுவனமான பிபிசியிடம் தெரிவித்து இருந்தார்.

முதலில் இது தொடர்பான விவரங்களை முதலில் பாகிஸ்தானிய செய்தித்தாளான டான்(Dawn) வெளியிட்டது. அந்த செய்தித்தாளில் குறிப்பிட்ட ஏழு பயணிகளுக்கும் கையால் எழுதப்பட்ட பயண அனுமதிச் சீட்டைவிமான ஊழியர்கள் கொடுத்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் தங்களது விமானத்தில் எப்படி ஏழு பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருவதாக பிஐஏ தெரிவித்துள்ளது.
Dailyhunt

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off  To utilise the workforce efficiently, pre-clinical and para-clinical...