Tuesday, March 13, 2018

நலம் தரும் நான்கெழுத்து 25: தோஷங்களில் கொடியது எது?

Published : 10 Mar 2018 12:24 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



பழக்கம் என்னும் சங்கிலி நம் காலைப் பிணைத்திருப்பதை உணரவே முடியாத அளவுக்கு லேசாக இருக்கும். அந்தச் சங்கிலி உடைக்கவே முடியாத அளவுக்கு வலிமையானதாக ஆகிவிடும்போதுதான், அது இருப்பதையே நாம் உணர்வோம்.

– வாரன் பஃபே

பரம ஏழை ஒருவர் கடவுளிடம் தனது வறுமையைப் போக்குமாறு மனமுருகி வேண்டினார். கடவுளும் இரங்கி, இறங்கி வந்து அவனிடம் கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு கூழாங்கல் குவியலைக் காட்டி ‘இந்தக் குவியலில் ஒரே ஒரு வைரக்கல் இருக்கிறது. அதை நீயே எடுத்துக்கொள்’ எனச் சொல்லிவிட்டு அடுத்த பக்தரைச் சோதிக்கச் சென்றுவிட்டார். அந்த ஏழையும் ஒவ்வொரு கூழாங்கல்லாகப் பார்த்துப் பார்த்து அது வைரம் இல்லை என்றதும் கடலுக்குள் வீசி எறிந்தார். மணிக்கணக்காக இதையே செய்து அவருக்குப் பழக்கமாகவே ஆகிவிட்டது. கடைசியாக உண்மையிலேயே வைரக்கல்லை எடுத்துப் பார்த்தவுடன் பழக்கதோஷத்தில் அதையும் கடலுக்குள் எறிந்து விட்டாராம். ஆக, தோஷங்களில் கொடியது பழக்கதோஷம்.

கடந்த வாரக் கட்டுரையில் பழக்கம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்த்தோம். தொடர்ந்து ஒரு செயலைச் செய்துகொண்டே இருக்கும்போது நமது முழுக் கவனமும் தேவைப்படாமல் தன்னியல்பாகச் செய்துமுடிக்கக் கூடியதாக மாறுவதே பழக்கம். அப்படி நமது முழுக் கவனமும் இல்லாமல் நம்மையறியாமல் செய்வதே, சில நேரம் எதிர்மறையான விளைவை உண்டாக்கிவிடும்.

கோபம், பயம் போன்ற எதிர்மறை உணர்வுகள் இதுபோல் நமக்குப் பழக்கமாகி விடுகின்றன. கோபத்தை எடுத்துக்கொண்டால் நமக்குப் பிடிக்காத ஒரு செயல் நடக்கும்போது கோபப்பட்டுப் பழகிவிடுகிறோம். அதன்பின் எப்போது அந்தச் செயல் நடைபெற்றாலும் ஏன் கோபப்படுக்கிறோம் என்பதை உணரக்கூட இயலாத அளவில் அனிச்சையாகக் கோபப்பட்டுப் பழகிவிடுகிறோம். உதாரணமாக, ஒரு பொருள் நாம் நினைத்த இடத்தில் இல்லை, அல்லது வாகனம் ஓட்டும்போது குறுக்கே யாராவது வந்தால் உடனே ஆங்கிலத்தில் ‘ ரிஃப்ளெக்ஸ்’ எனச் சொல்லப்படுவதுபோல் அனிச்சையாகக் கோபப்பட்டு எரிந்துவிழுகிறோம். ஒரு கணம் ‘இதற்கு ஏன் கோபப்பட வேண்டும்?’ என யோசித்தால் கோபப்படாமல் இருந்து பழகலாம்.

பழக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

அதுபோன்றே அச்சமும். புது மனிதர்களிடம் பழகுவது, மேலதிகாரிகளிடம் பேசுவது, மேடையிலே பேசுவது போன்ற பல விஷயங்களுக்கும் அச்சப்பட்டு அச்சப்பட்டு அதுவே பழக்கமாகி விடுகிறது. ‘மனிதன் பழக்கத்துக்கு அடிமை’ என்று சொல்வதுபோல் பழகிப் பழகி நான் இப்படித்தான் எல்லாவற்றுக்கும் கோபப்படுவேன், பயப்படுவேன் எனத் தன்னைப் பற்றியே ஒரு முன்முடிவுக்கு வந்துவிடுகிறோம். பின்னர், அதை மாற்ற முயல்வதே இல்லை.

புகை, மது போன்ற போதைப் பழக்கங்களும் இப்படித்தான் பழக்கமாகின்றன. மணியடித்தால் சோறு என்று பழகிய பாவ்லோவின் நாய்க்கு மணியடித்தாலே எச்சில் சுரப்பதைப் போல், ‘ஒரு மணியடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ எனக் காலை எழுந்தவுடனேயே நிதம் ஒரு தம் பற்றவைத்து நிதானம் அடைபவர்கள், மாலை மங்கத் தொடங்கியதும் மாலை நேரத்து மயக்கத்தை மதுவில் தேடுபவர்கள் எனப் பலரும் பழக்கத்தின் அடிமைகளே. இன்னும் சிலர் துரித உணவு போன்றவற்றுக்கும் இதுபோன்றே மூளையைப் பயன்படுத்தாமல் பழகிவிடுகிறார்கள்.

இதுபோன்ற பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனிச்சையாகப் பழக்கமான செயல்களைச் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதாவது எந்தெந்தச் சூழல்களில் எல்லாம் நாம் விரும்பாத செயல்ளைச் செய்கிறோமோ, அந்தச் சூழ்நிலைகளில் மிகவும் முயன்று விழிப்புணர்வுடன் அச்செயலைச் செய்யாமல் இருந்து பழக வேண்டும். இல்லையென்றால் ‘பழகத் தெரிந்த உயிரே !உனக்கு விலகத் தெரியாதா?’ எனப் புலம்ப வேண்டியதுதான்.

பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே

தொடர்ச்சியாகச் செக்குமாடுபோல் ஒரே விஷயத்தைச் செய்துகொண்டே இருக்கும்போது திடீரெனப் புதிதாக ஒரு சவால் தோன்றினாலோ சூழ்நிலை மாறினாலோ அதை உணரவோ சமாளிக்கவோ முடியாமல் போய்விடும். பல வருடங்களாக ‘ராமனின் மனைவி சீதை’ என்று படித்து வந்தவரிடம் ஒரு நாள் ‘சீதையின் கணவர் யார்?’ என மாற்றிக் கேட்டால் குழம்பிவிடுவார். புதுமை விரும்புதல் என்ற பண்பைப் பற்றி முன்பே பார்த்தோம்.

முன்னேற்றத்துக்குப் பயிற்சியும் பழக்கமும் முக்கியக் காரணமாக அமைவதைப் போன்றே, பழக்கமே பல முறை முன்னேற்றத்துக்குத் தடையாகவும் அமைந்துவிடலாம். புதிதாக ஒரு வாய்ப்பு வரும்போது பலரும் அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பார்கள். பழகிய சூழல் தரும் பாதுகாப்பை இழக்க விரும்பாமல் கூட்டுப் புழுவாக இருக்கவே விரும்புவார்கள். ஆனால், கூட்டுக்குள்ளேயே இருக்கும் பறவைக் குஞ்சுக்கு வானம் வசப்படாதே! அந்தப் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வருவதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வழி.

பழக்கமும் பயிற்சியும் நாம் செல்லும் பாதையில் வெற்றியை நோக்கிச் செலுத்தும். அதேநேரம் பழக்கத்தை மீறிச் செல்வதுதான் புதுப்புதுப் பாதைகளில் நாம் செல்ல உதவும். இந்த இரண்டுக்குமான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
டிஜிட்டல் போதை 25: அறிவு வளர்ச்சிக்கு எது அவசியம்?

Published : 10 Mar 2018 12:25 IST

வினோத் ஆறுமுகம்




‘வெளியே எங்கும் சுத்தாதே. இந்தா வீடியோ கேம், வீட்டிலேயே விளையாடு!’ என்று தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் பொத்திப் பொத்தி வளர்ப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

குழந்தைக் கடத்தல், சிறார் பாலியல் சீண்டல்கள் எனத் தினமும் கேள்விப்படும் செய்திகள், குழந்தைகளைவிடவும் பெற்றோர்களை அதிகமாகப் பயமுறுத்தி வருகின்றன. இந்தச் செய்திகள் பெற்றோர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால்தான் குழந்தைகள் வெளியில் சென்று ஆபத்தைச் சம்பாதிப்பதைவிட வீட்டினுள் கிடந்து மூளை மழுங்கினால்கூடப் பரவாயில்லை என்று பெரும்பான்மையான பெற்றோர் நினைக்கிறார்கள்.

‘விளையாடும்’ சாதி

இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. இந்தியச் சமூகம் சாதியச் சமுகம். வெளியில் செல்லும் தங்கள் குழந்தைகள் எந்தச் சாதிக் குழந்தைகளுடன் சேர்கிறார்கள் என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கு உண்டு. தங்கள் குழந்தைகள் வேறு சாதிக் குழந்தைகளுடன் பழகிவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் பலர் உறுதியாக உள்ளனர். நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெற்றோருக்கும் இந்த எண்ணம் உள்ளது.

‘என் பிள்ளை கொஞ்சம் துறுதுறு. யாரையாவது அடித்துவிட்டால் என்ன செய்வது? எதற்குத் தேவையில்லாத வம்பு?’. இப்படி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் குழந்தைகளுடன் தகராறு ஏற்பட்டு, அதனால் பெற்றோர்களிடையே சண்டை வந்துவிடுமோ எனப் பயந்து, தங்கள் குழந்தைகளுக்கு ‘144’ தடைச் சட்டம் போடும் பெற்றோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பின்தங்கிவிடாமல் இருக்க…

எங்கே தன் குழந்தை தொழில்நுட்ப விஷயங்களில் பின்தங்கி விடுமோ எனக் கவலைப்பட்டு, குழந்தைகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்காக அவர்களுக்குப் பல டிஜிட்டல் கருவிகளைப் பெற்றோர் பலர் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். அந்தக் கருவிகளுடன் எவ்வளவு நேரம் செலவழித்தாலும், கண்டுகொள்வதில்லை. மாறாக, இதையெல்லாம் அக்கம்பக்கத்துப் பெற்றோரிடம் சொல்லி, பெருமை அடித்துக்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

குழந்தைகளோ பள்ளியைவிட்டு வந்ததும் அவர்களின் கைகள் ‘ஸ்நாக்ஸை’ தேடுவதைவிடவும், கேம் விளையாடுவதற்குப் பெற்றோரின் ‘ஸ்மார்ட்போனை’யே தேடுகின்றன. பள்ளியில் வாங்கும் மதிப்பெண் குறைந்தால் ஒழிய, பெற்றோர்களுக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லை.

திருத்திக்கொள்வோமா?

நாம் அனைவருமே சமூக விலங்குகள். உண்மையில் சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழ்ந்தால், அது மனச்சோர்வை அதிகரிக்கும். குழந்தைகளின் மனநிலையும் இதே போன்றதுதான். சமூகத்திடமிருந்துதான் குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கு அனுமதிக்க வேண்டும். அப்படிக் கற்பதுதான் அவர்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை தரும்.

இயல்பாக ஒத்த வயதுக் குழந்தைகளுடன் அவர்கள் சேர்ந்து விளையாடி, சண்டையிட்டுக்கொண்டு, அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள். இதன்மூலம் அவர்கள் கற்கும் விஷயங்களையும் அதனால் அவர்கள் மனம் பெறும் உற்சாகத்தையும் எந்தத் தொழில்நுட்பமும் கொடுத்துவிடாது.

சிறப்பான மூளையை உருவாக்க…

உங்கள் சுற்றத்தார் புரிந்துகொள்ளவில்லை, ஒத்த வயதுக் குழந்தைகள் இல்லை, விளையாட மைதானம் இல்லை என்பது போன்ற காரணங்களுக்காக வீடியோ கேம்களைக் கொடுக்க வேண்டாம். மாறாக ஓவியம், யோகா, நடனம், இசை போன்ற துறைகளில் உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதில் அவர்களைச் சேர்க்கலாம்.

இவற்றால், தொழில்நுட்பத்தில் உங்கள் குழந்தை ஒன்றும் பின்தங்கி விடாது. தேவையில்லாமல் பயப்படாதீர்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம், சிறப்பான மூளையை உருவாக்க உதவுவதுதான். எந்தச் சூழலிலும் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வத்தை உருவாக்கினாலே போதும். அந்தச் சிறந்த மூளை, தன் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைக் கற்றுக்கொள்ளும். அந்த மூளையை நிச்சயம் வீடியோ கேம்களாலோ ஸ்மார்ட் வகுப்புகளினாலோ உருவாக்க முடியாது. அத்தகைய மூளைக்கு நல்ல உடல் அவசியம். நிம்மதியான உறக்கம் அவசியம். நிதானமான வாழ்க்கையும் அவசியம்.

(அடுத்த வாரம்: டிஜிட்டல் சுகாதாரம் கற்கலாமா?)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com

மக்கள் சேமிப்பையெல்லாம் வங்கிகளுக்குள் கொண்டுவந்துவிட்டு தனியார்மயத்தைப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்!

Published : 12 Mar 2018 10:08 IST

சமஸ் 
 
THE HINDU TAMIL





நீரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். மேலாளராக நண்பர் இருக்கும் ஒரு வங்கியில், “ஒரு மணி நேரம் இங்கு உட்கார்ந்திருந்தால், சூழலை நீங்களே புரிந்துகொள்ளலாம்” என்றார். கொஞ்சம் அந்தக் காலத்து மனிதர் என்பதோடு, பெரிய கூட்டம் நெருக்கியடிக்கும் வங்கிக் கிளையும் அல்ல அதுவென்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட உறவு உண்டு. அந்த ஓரிரு மணி நேரத்தில், கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர் அவரிடம் வந்து பேசிவிட்டு போனார்கள். பெரும்பாலானோர் கேட்டது, “ஏன் சார், நம்ம பேங்காவது பாதுகாப்பா இருக்கா? பேசாம பணத்தையெல்லாம் எடுத்து வேற எதுலேயாவது முதலீடு பண்ணிறலாமான்னு தோணுது!”

அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த ஒரு பெண், தன்னுடைய வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முடிவோடு வந்திருந்தார். அவரைச் சமாளித்து, திருப்பியனுப்ப மட்டும் நண்பருக்கு அரை மணி நேரம் ஆனது. நண்பர் அசந்துபோனார். “இதுரைக்கும் இல்லாத அச்சம், என் வாழ்நாள்ல பார்க்காதது மக்கள்கிடட்ட இப்போ உருவாகியிருக்கு!”

அங்கிருந்து திரும்பிய பின் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் வைப்புத்தொகையில் பெருத்த சேதாரத்தைச் சந்திக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் பலர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றுவருவதாகவும் அங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் மிகப் பெரிய வங்கி ஊழல் இது. ஊழல் என்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வக் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் எழுதிக்கொண்டிருக்கிறபடி இது வெறும் ரூ.12,600 கோடி இழப்புடன் முடியப்போவதில்லை. வங்கிகளை இந்திரா காந்தி நாட்டுடமையாக்கிய பின்னரான, இந்த அரை நூற்றாண்டில் பொதுத்துறை வங்கிகள் சேர்த்திருக்கும் பெரும் சொத்தான நம்பகத்தன்மையை இந்த ஊழல் சூறையாடிக்கொண்டிருக்கிறது. கொடுமை, எந்த அரசாங்கம் இந்த நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டுமோ, அதுவே பொதுத்துறை வங்கிகளை மானபங்கப்படுத்திவருகிறது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முதலியோரெல்லாம், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம்” என்று பேசிவருவது பொறுப்பின்மையின் உச்சம்.

நமக்கு ஒரு கடை இருக்கிறது. நீண்ட காலம் நல்ல வருமானம் தந்த கடை. காலத்துக்கும் உறுதுணையாக இருக்கவல்ல கடை. கொஞ்ச காலமாக நஷ்டம் காட்டுகிறது. “நிர்வாகம் சரியில்லை அதுதான் காரணம்” என்கிறார் ஒருவர். “சரியப்பா, இனி நீங்கள்தான் நிர்வாகி. மேம்படுத்திக்காட்டுங்கள்” என்று அவரையே கல்லாவில் உட்கார வைத்துவிடுகிறோம். ஒரு நல்ல நிர்வாகி என்ன செய்ய வேண்டும்? நிர்வாகத்தைச் செம்மையாக்கி, லாபத்தை நோக்கி கடையைத் திருப்ப வேண்டும். அது நடக்கவில்லை. “கடையை விற்று காசாக்கித் தின்றுவிடலாம்” என்கிறார் புரிய நிர்வாகி. “இதுதான் சீர்திருத்தம். இந்த முடிவெடுக்க ஒரு நிர்வாகிக்குத் துணிச்சல் வேண்டும்!” என்று கூடவே ஜல்லியடிக்கிறது ஒரு கும்பல். உடைமையாளர்கள் நாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குகிறதா? விற்றுவிடு! பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கிறதா? விற்றுவிடு! கோல் இந்தியா லாபத்தில் போகிறதா? அதன் பங்குகளையும் விற்றுவிடு! கேட்கவே நாராசமாய் இருக்கிறது. இன்றைக்குக் காலையில் கேள்விப்பட்ட இரு செய்திகள் இவை. கதர் கிராம வாரியத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் 7 லட்சம் பேர் கடந்த ஆண்டில் வேலையை இழந்திருக்கிறார்கள். ரயில்வே துறை புதிதாகக் கொண்டுவரும் ஏற்பாட்டின்படி, இருப்புப் பாதைப் பராமரிப்புப் பணிக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்படவிருந்த 65,000 வேலைகள் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. புதிதாக ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூடக் கட்டியெழுப்ப முடியாதவர்கள், நேரடியாக அரசுத் துறையிலிருந்து ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைக்கூட உருவாக்க முடியாதவர்கள், தேசத்தின் நவநிர்மாண வளர்ச்சிக்காக அப்படி கட்டியெழுப்பப்பட்ட ஒவ்வொன்றையும் கை மாற்றிவிடத் துடிக்கிறார்கள்; இருக்கிற வேலைவாய்ப்புகளைக் குறைத்திட நினைக்கிறார்கள் என்றால், இவர்கள் யார் நலனுக்காக இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்? இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

ஊழலைத் துளியும் சகித்துக்கொள்ள முடியாத அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த மோடி அரசின் ஆட்சியில்தான், இந்த மாபெரும் ஊழலின் ஒட்டுமொத்த பலிகடாக்களாகவும் கீழ்நிலை ஊழியர்களை உருமாற்றும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கீழ்நிலை வங்கி ஊழியர்களைப் பணிமாற்றம் செய்வதால் என்ன பெரிய மாற்றங்கள் நடந்துவிடும்? இந்த ஊழலுக்கான மையக் காரணம் வங்கிகளின் உரிமையாளர் அரசா அல்லது தனியாரா என்பதில் இல்லை; ரிசர்வ் வங்கியின் தவறான கொள்கைகளிலும் அரசின் கண்காணிப்பின்மையிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும், பெருமுதலாளிகள் - ஆட்சியாளர்கள் இடையிலான கள்ள உறவிலும் இருக்கிறது. இந்தியன் வங்கி சரிவைச் சந்தித்தபோது கசிந்த கதைகளையும் ஊழலில் அடிபட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையும் இன்னமும் நாடு மறந்துவிடவில்லை. இவ்வளவு பெரிய தொகை உயர்நிலை நிர்வாகத்துக்குத் தெரியாமல், தணிக்கையாளர்கள் கண்களில் படாமல் எப்படித் தொடர்ந்து நடந்திருக்க முடியும் என்னும் எளிய கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை.

ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதி அமைச்சர், பிரதமர் ஒருவரும் இதுபற்றிப் பேசவில்லை. எல்லாவற்றையும்விடக் கொடுமை இவைபற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், காட்டிவரும் மென்போக்கும், குற்றவாளிகளை வரலாற்றிலிருந்து தேட முற்படும் அறிவுஜீவிகளின் முனைப்பும்! எனக்கு மோடிகள், அருண் ஜேட்லிகளைக் காட்டிலும், “இன்னும் ஏன் பொதுத்துறை நிறுவனங்களை அரசு கையில் வைத்திருக்கிறது? விற்றிடு! விற்றிடு!” என்று கூப்பாடு போடும் சேகர் குப்தாக்கள், அர்னப் கோஸ்வாமிகள் அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

அமைப்புக்கு கொடி பிடித்து, அமைப்பின் குற்றங்களை எப்படியாவது நியாயப்படுத்தி தன்னைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திக்கொள்ளும் கேவலம் அறிவுத்தளத்தில் எல்லா காலங்களிலும் நடப்பது. நம் காலத்தின் அடுத்தகட்ட இழிநிலை, அமைப்பின் அயோக்கியத்தனத்துக்கான முன்கூட்டிய ஒப்புதலை, அதற்கு உகந்த சூழலை மக்களிடம் உற்பத்தி செய்யும் வேலையை அறிவுஜீவிகள் தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பது. ஒருநாள் இப்படியும்கூட எழுதுவார்கள், “எடையைக் குறைக்க வேண்டும் என்றால், தலையை வெட்டிக்கொள்வது நல்லது. தங்கள் எடையைச் சுமக்க முடியாமல் மக்கள் அல்லலுறுகிறார்கள்; நோய்க்கு ஆளாகிறர்கள். தேச நலன் கருதி அவர்களுடைய தலையை அரசாங்கம் வெட்டி உதவ வேண்டும்! ஒரு துணிச்சலான ஆட்சியாளரால்தான் இதைச் செய்ய முடியும்!”

இந்திராவுக்கு இந்திய மக்கள் மனதில் இன்னமும் ஈரமான ஒரு இடமும் இருக்கிறது என்றால், அது ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வைக் குறைக்க அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கானதாகவே இருக்கும். நிறைய செய்ய நினைத்தார். மாற்றுக்குரல்களைக் கவனத்தில் கொள்ள முடியாத அவருடைய இயல்பின் காரணமாக, உருப்படியான யோசனைகளுக்குக் காது கொடுக்காமலேயே தோற்றுப்போனார். எப்படிப் பார்த்தாலும் வங்கிகளை தேசியமயமாக்க 1969-ல் இந்திரா எடுத்த நடவடிக்கை அசலான துணிச்சல். பொதுத்துறை வங்கிகளில் இன்று நடந்துகொண்டிருக்கும் மோசடிகளுக்கு இந்திராவின் நாட்டுடமையாக்க நடவடிக்கையை காரணமாகப் பேசுவது, மடத்தனம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த வரலாற்றுப் புரட்டுமாகும்.

இந்திரா ஏன் வங்கிகளை நாட்டுடமையாக்கினார்? 1. அதுவரையில் இந்நாட்டின் வங்கிகள் பெருமளவில் மேல்தட்டு - மேல்சாதிக்காரர்களுக்கானவையாகவே இருந்தன. 2. சென்ட்ரல் வங்கி என்றால் டாடா குழுமம், யூகோ வங்கி என்றால் பிர்லா குழுமம், கனரா வங்கி என்றால் பை குழுமம் என்று ஒவ்வொரு வங்கியையும் ஒவ்வொரு தொழில் குழுமங்கள் தம் கையில் வைத்துக்கொண்டு ஆடின. 3. இந்நாட்டின் உற்பத்தியில், அன்றைய தேதியில் 44% பங்களிப்பைக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு, வங்கிகள் அளிக்கும் மொத்தக் கடன்களில் 2% கடன்கூட போய்ச்சேரவில்லை. 4. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, வங்கிகள் எந்நேரமும் திவாலாகலாம் என்றிருந்த பாதுகாப்பற்ற சூழல். சுதந்திர இந்தியாவில் வங்கிகள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படும் வரையிலான காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 35 வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தன. வங்கிகளை இந்திரா நாட்டுடைமையாக்கிய பின்னரே, மக்களின் முதலீடுகளுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு கிடைத்தது. வங்கிகள் அளிக்கும் மொத்த கடன்களில் குறைந்தபட்சம் 18% விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. சாமானிய மக்கள் வங்கிகளுக்குள் நுழைய முடிந்தது.

பணமதிப்புநீக்கம் போன்ற ஒரு பகாசுர நடவடிக்கைக்குப் பின், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் வங்கிச் செயல்பாட்டோடு பொருத்தும் வேலைகளை முடுக்கி, மக்களின் எல்லா சேமிப்புகளையும் சுரண்டி வங்கிகளில் போட வைக்கும் நிர்பந்தங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கி, கடைசியில் அவர்களுடைய கடைசி நம்பிக்கையாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பேசுவது திட்டமிட்ட கொள்ளைக்கான அறைகூவலேயன்றி வேறு அல்ல. கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணைந்த அவர்களது சேமிப்பை, அவர்களுடைய உழைப்பிலிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த ரத்தத்தை பொதுத்துறை வசமிடமிருந்து தனியார் கைக்கு மடை மாற்றுவதற்குப் பெயர்தான் திறமையான நிர்வாகம், அந்த முடிவை எடுப்பதற்குப் பெயர்தான் நிர்வாகத் துணிச்சல் என்று எவரேனும் சொல்வார்கள் என்றால், மனம் கொதிக்கும் மக்களில் ஒருவனாக எழுதுகிறேன்: அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமானம்!

- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

அழகேசன்கள் மட்டுமா குற்றவாளிகள்?

Published : 12 Mar 2018 09:57 IST

அ. குமரேசன்    THE HINDU TAMIL




சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட மறுநாள் சென்னையில் கல்லூரி வாசலிலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் அஸ்வினி. அவருடன் அவரது கனவும் கொலை செய்யப்பட்டுவிட்டது. அஸ்வினிக்கு இரங்கல்களும், கொலைசெய்த அழகேசனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கடும் ஆவேசமும் மக்களிடமிருந்து எழுகின்றன. ஒரு மனித உயிரை அழித்துவிட்ட குரூரச் செயலுக்கு அப்படிப்பட்ட தண்டனை தேவைதான். இதே இரங்கல்களும் கண்டனங்களும் கோடிட்ட காலியிடங்களோடு காத்திருக்கின்றன. வரும் நாட்களில் அந்தக் காலியிடங்களை யாருடைய பெயர்கள் நிரப்பப்போகின்றனவோ? அஸ்வினி, அழகேசன் பெயர்களும் ஏற்கெனவே அப்படிக் கோடிட்ட இடங்களில் நிரப்பப்பட்டவைதானே?

அழகேசன்கள் தங்கள் ஒருதலைக் காதலை ஏற்க மறுக்கும் பெண்களைக் குத்துகிறார்கள், வெட்டுகிறார்கள், அமிலம் ஊற்றுகிறார்கள், தீ வைக்கிறார்கள். அந்த வெறியின் வேராக இருப்பது வெறும் ஏமாற்ற உணர்வு மட்டுமல்ல, தங்களது உடைமைப் பொருள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற ஆத்திரமும்தான். தங்களுக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்ற குதர்க்கமான மனப்பான்மையும்தான். எலும்பும் சதையும் ரத்தமும் உணர்வும் உள்ள மனிதப்பிறவி என்பதற்கு மாறாக, கையகப்படுத்த வேண்டிய உடைமைப் பொருளாகப் பெண்ணைக் கருதுகிற புத்தி ஆணுக்கு எங்கிருந்து வந்தது?

உடைமைப் பொருளா பெண்?

வரலாற்றில் உடைமைச் சமுதாயம் உருவானதைத் தொடர்ந்துதான் தற்போதைய அதிகாரத்தளம் சார்ந்த குடும்ப அமைப்பு உருவானது. மனைவி என்பவள் ஆணின் உடைமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டாள். ஆணின் ரத்த உறவு வாரிசைப் பெற்றுத்தருகிற உற்பத்திக் கருவியாகவும் பெண் பராமரிக்கப்பட்டாள். பாசம், நேசம், இணைபிரியா நெருக்கம் என்ற உணர்வுபூர்வமான உறவு உண்மையாக வளர்கிறது என்றாலும், அடிவாரத்தில் இந்த உடைமை ஏற்பாடு இருக்கிறது. திருமணச் சடங்கில் கன்னியாதானம் என்று ஆணிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.

பெண்ணின் சொத்துரிமையும் வாரிசுரிமையும் நிலைநாட்டப்பட்டுவிட்ட இக்காலத்தில் இந்தச் சடங்கின் அவசியம் குறித்த கேள்விகள், விமர்சனங்கள் ஏற்கப்படுவதில்லை. அது ஏன் தேவை என்று விளக்குவதற்கு மாறாக, “மதச் சடங்குகளைக் கேள்வி கேட்பதா?” எனும் எதிர்வினைகளைப் பார்க்க முடிகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் உள்ளிட்ட எந்த மதமும் ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருதவில்லை. ஆகப் பெரும்பான்மை மதங்களில் மதகுருக்கள் பெண்கள் இல்லை.

சமயங்கள் இப்படியென்றால் சாதிகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சாதிகளுக்கென்று போதனை நூல்கள் கிடையாது என்றாலும், நடைமுறைப் போதனையாக, எல்லாச் சாதிகளிலும் ஆணின் பின்னால் நிற்க வேண்டியவளே பெண் எனும் நிலையை சாதிக் கட்டமைப்புகள் உருவாக்கிவிட்டன. ஆணின் பெயருக்குப் பின்னால்தான் சாதிப் பெயர் ஒட்டப்படுமேயன்றி பெண்ணின் பெயருக்குப் பின்னால் தகப்பன் அல்லது கணவனின் பெயர்தான். தனக்கு அடங்காத அல்லது தனக்கு இணங்காத பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை ஆணிடம் வளர்ப்பதில் இவையெல்லாம் மௌனமாக ஆனால் வலிமையாகப் பங்களிக்கின்றன.

திரைப்படங்கள், ஊடகங்களின் தாக்கம்

பண்பாட்டுத் தளத்தில் விரிந்த செல்வாக்குச் செலுத்தும் திரைப்படங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டிருக்கும் திரைப்படங்கள், பரந்த அளவில் அறிவியல் கண்ணோட்டத்தைக் கையாளவில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

விதிவிலக்காக வரும் படங்களைத் தவிர்த்து, பெரும்பாலான படங்கள் பெண்ணை அழகுப் பதுமையாகத்தான் சித்தரிக்கின்றன. சாகசக் கதாநாயனோடு இரண்டு காட்சிகளில் ஆடிப்பாடவும், அவன் வில்லன்களிடம் அடிபடுகிறபோது பதறித் துடிக்கவுமே கதாநாயகி. மற்றபடி கதையில் பெண்ணுக்கு நாயகப் பங்களிப்பு எதுவும் கிடையாது. இயல்பாகப் பார்க்கப்பட வேண்டிய பெண்ணை, உடல்சார்ந்த மட்டமான பார்வையுடன் திரையில் சித்தரிப்பது இன்னமும் கொடுமை.

‘கள்ளக்காதல்’, ‘விபரீத உறவு’, ‘ஓரினச் சேர்க்கை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, பெண்ணின் உறவுத் தேர்வுகளையும் வாழ்க்கை நிர்ப்பந்தங்களையும் இயற்கை நிலைமைகளையும் கொச்சைப்படுத்துவதில் ஊடகங்களுக்கும் பங்குண்டு.

பெண்ணின் ஆடைத் தேர்வு உரிமை பற்றிய விவாதம் அல்லது பேட்டித் தொகுப்பு என்றால், அதை ஆதரிப்போர் நான்கு பேர், எதிர்ப்போர் நான்கு பேர் என்று ‘சமநிலை’ பேணப்படும்! குறிப்பிட்ட பத்திரிகை அல்லது தொலைக்காட்சி ஊடக நிறுவனம் இந்த விவாதத்தில், தாங்கள் எந்தப் பக்கம் என்று வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

சட்டங்கள் என்ன சாதித்தன?

உலகளாவிய நெடும் போராட்டங்களின் நற்பலனாகப் பெண்ணுக்குப் பாதுகாப்பாகவும், சமத்துவத்தை நிலைநாட்ட உதவியாகவும் பல சட்டங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் ‘ஈவ் டீசிங்’ தடுப்புச் சட்டம் -1998, இந்திய அளவில் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் -1961 குழந்தை மணம் தடுப்புச் சட்டம்-2006, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் -2005, பெண்ணை இழிவுபடுத்தும் பரப்புரைத் தடுப்புச் சட்டம் -1986, பணியிட பாலியல் அத்துமீறல் தடுப்புச் சட்டம் -2013 என பல சட்டங்கள் பெருமைக்குரியவை. ஆனால் அவை வெறும் பெருமைக்குரிய ஏற்பாடுகளாக இருக்கின்றனவேயன்றி நடைமுறை வாழ்வியலோடு இன்னும் கலக்கவில்லை. அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் போதிய அளவு எடுக்கப்படுவதில்லை. பெட்ரோல் நிலையங்களில் பெரிய அளவில் பிரதமர் படங்களோடு அரசுத் திட்டங்கள் பற்றி விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன; ஆனால், பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் பற்றிய பொது ஞானத்தைப் பரப்புவதற்கான விளம்பரங்கள் வைக்கப்படுவதில்லையே!

பேருந்துகளில் மகளிருக்கான இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் ஆண்கள், நின்றபடி பயணிக்கும் பெண்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதை அன்றாடம் பார்க்க முடிகிறது. “லேடீஸ் மட்டும் ஆம்பளைங்க சீட்டுல உட்காருறாங்களே” என்று கொஞ்சம்கூட புரிதல் இல்லாமல் கேட்பவர்கள் பலர். பெண்களுக்கான சட்டங்கள் மக்களிடம் முறையாகக் கொண்டுசெல்லப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் பெண் ஒரு உடைமைப்பொருளல்ல என்ற அறிவையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் விரிவாகவும் வலுவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு எந்திரங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகள், வெகுமக்கள் அமைப்புகள், சமூக அக்கறை நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து சக்திகளும் இதைக் கடமை உணர்வோடு முன்னெடுக்க வேண்டும். பெண்ணின் உரிமைகள் குறித்த இந்த விழிப்புணர்வில்தான், “அழகேசன்களை அஸ்வினிகள் எதற்காகக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு பிறகு மறுக்க வேண்டும்” என்பதான குதர்க்க வாதங்களும், கொலை செய்யவும் துணியும் கொடூர நியாயங்களும் முற்றுப்பெறும்!

- அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: kumaresanasak@gmail.com
ஆறிலிருந்து அறுபது வரை... பெண்ணே கவனம்!

2018-03-09@ 15:40:39   DINAKARAN


பெண் என்பவள் உயிர் வளர்க்கும் பெரும் சக்தி. சின்னஞ்சிறு உயிர்கள் முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரையும் உருவாக்கும் பெரும் பொறுப்பை இயற்கை பெண் பால் உயிர்களிடமே பெரும்பாலும் கொடுத்துள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பார்கள். உண்மையில் ஆணுக்குப் பெண் சமமும் அல்ல; இருவரில் எவரும் உயர்ந்தோரும் அல்ல; தாழ்ந்தோரும் அல்ல. ஆண், பெண் இருவருமே தனித்துவமான அற்புதப் படைப்புகள்.

பூ ஒன்று முகையாய் அரும்பி மொட்டாகி, பூவாகி, காய்த்து, கனிந்து விதையாக உயிர் பெருக்குவது போல் பெண் உடல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றத்தை சந்தித்துக்கொண்டே இருப்பது. நம் முன்னோர்கள் பெண் வாழ்வை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஏழு பருவங்களாகப் பிரித்தது அதனால்தான். உடல் மட்டும் அல்ல உடலோடு சேர்ந்து மனமும் காலத்துக்குத் தகுந்தது போல் கோலம் கொள்ளும் இயல்புடையதுதான்.

ஆறு முதல் அறுபது வரை நீளும் இந்த பல்வேறு உடல் மற்றும் மனம்சார் மாற்றங்களுக்கு இடையே பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள், சவால்கள் என்னென்ன? அதை எப்படி எதிர்கொள்வது? வாங்க பார்க்கலாம்.

0 - 5 வயது

ஆண் என்றும் பெண் என்றும் பேதம் பெரிதாய் உருவாகியிராத அற்புதமான காலகட்டம் இது. இந்தப் பருவத்தில் ஆணோ பெண்ணோ எந்தக் குழந்தையாய் இருந்தாலும் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுவிட வேண்டும். பெண் குழந்தைகளைக் குளிப்பாட்டும்போதும், மலம் கழித்த பிறகு சுத்தம் செய்யும்போதும் முன்புறம் கழுவிவிட்ட பிறகு பின்புறம் கழுவிவிட வேண்டும். இதனால், மலக்குடலில் உள்ள கிருமிகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தாய்ப் பால் தருவதில் பாகுபாடு வேண்டாம். குறைந்தது இரண்டு வயது வரை கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவு
களைக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். கார்ப்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்து ஆகிய அனைத்தும் நிறைந்த சமவிகித உணவுகளையே கொடுக்க வேண்டும்.

ஒரு பெண் பின்னாட்களில் இன்னொரு உயிரை உருவாக்கும் ஜீவன் என்பதால் அவளுக்குத் தேவையான சத்துள்ள உணவுகளை குழந்தைப் பருவத்திலிருந்தே கொடுக்க வேண்டும். சிறுவயதிலேயே ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாகுவது பின்னாட்களில் ரத்தசோகை, எலும்புத் தேய்மானம் உட்பட பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதற்கு உதவும்.

ஜங்க் ஃபுட்ஸ், கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது. இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இளம் வயதிலேயே சொத்தைப் பல், கண்ணாடி அணிதல் போன்ற குறைபாடுகள் உண்டாகும். குழந்தையின் தன்னம்பிக்கை குறைந்துபோகும்.இந்த வயதில் குழந்தையை நன்றாக விளையாடவிட வேண்டும். குழந்தைக்கு உடற்பயிற்சி என்பது விளையாட்டுதான். எனவே தினசரி குறிப்பிட்ட நேரம் ஓடியாடி விளையாட அனுமதிப்பது நல்லது. இதனால் உடல் வலுவாகும், குழுவாகச் செயல்படுதல், முடிவு எடுத்தல் போன்ற திறன்களும் மேம்படும்.

6 - 12 வயது

குழந்தைக்கு தான் ஒரு பெண் என்பது நன்றாகப் புரியும் காலகட்டம் இது. இந்த காலகட்டத்தில் அவள் ஒரு பெண் என்பதை திரும்ப திரும்ப குறையாகச் சொல்லி குழந்தையை மனதால் ஒடுக்கக் கூடாது. மாறாக, பெண் பால் என்பதன் பெருமிதத்தை உணரச் செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் போன்றவை மெல்ல சுரக்கத் தொடங்கும் காலம் இது என்பதால் அவளின் உடல் குறித்த இயல்பை புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

பத்து வயதைக் கடக்கும்போதே பூப்பெய்துதல் குறித்து தெளிவாகவும் அன்பாகவும் புரியும்படியும் பெண் குழந்தைகளிடம் சொல்லிவிடுவது நல்லது. இதனால், பள்ளியிலோ வேறு எங்காவது வெளியிலோ பூப்பெய்தினால் அதைப் பதற்றமின்றி எதிர்கொள்ள முடியும்.பெண் குழந்தைகளுக்கு இந்தப் பருவத்தில் குட் டச் மற்றும் பேட் டச் (Good touch & Bad touch) பற்றி சொல்லித் தர வேண்டியது அவசியம். கையைப் பிடிப்பது, தலையை வருடுவது குட் டச். இதைத் தவிர முகத்தை வருடுவது, கிள்ளுவது, தோளை இறுகப் பிடிப்பது, முதுகில் வருடுவது, மார்பு, தொடையைத் தொடுவது போன்ற செயல்கல் எல்லாம் பேட் டச். இதை எல்லாம் யார் செய்தாலும் உடனடியாக அங்கிருந்து விலகி வந்து பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதைக் கற்றுத் தர வேண்டும்.

பெண் குழந்தைகளை இந்தப் பருவத்தில் பரதம், பாலே, ஜூம்பா நடனம் போன்ற நடன வகுப்புகளிலும் கராத்தே, குங்ஃபூ, சிலம்பம் போன்ற மார்ஷியல் ஆர்ட் வகுப்புகளிலும் சேர்த்துவிடுவது நல்லது. பொதுவாக, இந்த வயதில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் தொடங்கும் என்பதால் உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலின் சமநிலைகூடும். இதனால், உடல் வலுவாகும், மனக்குவிப்புத்திறன் மேம்படும். எந்த விஷயத்தையும் பதற்றமின்றி எதிர்கொள்ளும் பக்குவம் மேம்படும்.பெண்களைத் தாக்கும் நோய்களில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் மோசமானது. சுமார் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வரும் இந்த நோய், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற நுண் கிருமியால் உண்டாகிறது. இதைத் தடுக்க பெண் குழந்தைகளுக்கு பத்து முதல் பனிரெண்டு வயதுக்குள்ளாக தடுப்பூசி உள்ளது. இதைத் தவறாமல் போட்டுக்கொள்வது நல்லது.

13 - 19 வயது

டீன் ஏஜ் எனும் தேவதைப் பருவம் இது. பெண் உடலில் ஈஸ்ட்ரோஜன் முதல் பாலியல் ஹார்மோன்கள் வரை அனைத்தும் உச்சத்தில் இருக்கும் காலம். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக
இருப்பார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலை வந்திருக்கும்.
சில சமயங்களில் தான் புறக்கணிக்கப்படுகிறோம். தன் கருத்துகள் மதிக்கப்படுவதில்லை என்பதைப் போன்ற உணர்வுகள் அலைகழிக்கும். இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். போதுமான அன்பு, போதுமான அக்கறை, பாதுகாப்பு அனைத்தும் மிகவும் அவசியம். அறிவை மீறி உணர்வுகள் இயங்கும் காலகட்டம் என்பதால் பக்குவமாக அவர்களை வழிநடத்த வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்க வேண்டும்.

ஆடை, ஆபரணத் தேர்வு போன்ற சிறிய விஷயங்களில் அவர்களின் விருப்பத்தை மதிக்கலாம். மேற்படிப்பு, உறவுச் சிக்கல்கள், காதல் போன்ற பெரிய விஷயங்களில் அவர்கள் முடிவு தவறு என்று தோன்றினால் அவர்களுக்குப் புரியும்படி அன்பாக எடுத்துரைக்க வேண்டும்.பெண்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை வேளை தவறாமல் சாப்பிட வேண்டும். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பெண் குழந்தைகளுக்கே அதிகமாக உள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரத்தசோகை போன்ற நோய்கள் ஏழைப் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் வசதியான பெண்களுக்கும் இருக்கின்றன என்கிறது அந்தத் தகவல். டயட் என்று சின்னஞ்சிறிய டிபன் பாக்ஸில் வெறும் அரிசி சோற்றை மட்டும் உண்பது. ஃபேஷன் என்று பீஸா, பர்கர், ஜங்க் ஃபுட்ஸ், கோலா ஆகியவற்றை மட்டும் அதிகம் உண்பது போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்தான் இந்த ரத்தசோகைக்குக் காரணம். எனவே, சமச்சீரான ஆரோக்கியமான டயட்டை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

20 - 30 வயது

சென்ற பருவத்தின் ஹார்மோன் மாற்றங்கள் யாவும் ஓரளவு நிதானமடைந்து உடலும் அவற்றுக்குக் கொஞ்சம் பழக்கமாகி இருக்கும் காலகட்டம் இது. மனதில் ஓரளவு தெளிவு இருக்கும். எதையும் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்திருக்கும். இந்தப் பருவத்தின் முதல் பாதி வரையிலும் சுயமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. படிப்பு முடிந்து வேலை, திருமணம் என்று வாழ்வின் அடுத்தடுத்த முக்கியமான கட்டங்களுக்குள் நகரும் பருவமாகவும் இதுதான் உள்ளது. குழந்தைப் பிறப்புக்கு ஏற்ற காலகட்டமும் இதுதான்.

குழந்தை பிறப்பு என்பது ஒரு தவம். ஒரு குழந்தை பிறக்கும்போது தன் அன்னையின் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அன்னையின் உடலை சக்கையாக்கிவிட்டுத்தான் இந்த பூமிக்கு வருகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் இந்தப் பருவத்தில் உடலை வலுவாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவு, தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், தினசரி ஒரு மணி நேர உடற்பயிற்சி என ஹெல்த்தி லைஃப் ஸ்டைலுக்கு இங்கேயே அஸ்திவாரமிடுங்கள்.

31 - 40 வயது

பெண் வாழ்வின் வசந்த காலம் என்றே இந்தப் பருவத்தைச் சொல்ல வேண்டும். உடலில் இளமையும் இருக்கும். மனதில் முதிர்ச்சியும் இருக்கும். திருமணத்துக்கு முன்பு ஒல்லியாக இருந்த பெண்கள்கூட ஓரளவு உடல்தேறி ஆரோக்கியமாக இருக்கும் காலகட்டம் இதுதான். பெரும்பாலான பெண்கள் தாயாகி இருப்பார்கள். பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் மாற்றங்களுக்கு உடல் பதில் சொல்லும் பருவம் இது. உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதால் சிலருக்கு உடல் பருமன் அதிகரித்திருக்கும்.

பிரசவ கால சர்க்கரை நோய், பிரசவ கால வெரிகோஸ் வெய்ன், பிரசவ கால மூலப் பிரச்சனை போன்ற சிக்கல்கள் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பிரச்சனைகள் இருந்தால் பிரசவத்துக்குப் பிறகு உடனடியாக ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலுக்குத் திரும்புங்கள். இல்லாவிடில் எதிர்காலத்தில் இவை மீண்டும் வரக்கூடும். நாற்பதுக்குப் பிறகு இவற்றை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்.

உடல் உழைப்பு என்பது கட்டாயம் தேவை. தினசரி ஒரு மணி நேரமாவது ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். நடைப்பயிற்சி, ஜாகிங், நீச்சல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ வொர்க்அவுட்ஸ்களில் ஏதேனும் ஒன்றை தினசரி அரை மணி நேரமாவது செய்ய வேண்டும். அன்றன்று சாப்பிடும் உணவின் கலோரியை அன்றன்றே எரிக்கும்படியான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள். இதனால் உடல் பருமன், தொப்பையைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்கலாம்.

41 - 50 வயது

இந்த பருவத்தை இரண்டாவது இளமை என்று சொல்லலாம். வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் புது உத்வேகம் ஏற்படும். முதல் இளமையில் வேகம் இருந்தது என்றால் இப்போது விவேகம் இருக்கும். குடும்பம், வேலை, காதல், உறவுகள் என அனைத்திலும் ஒரு மறுமலர்ச்சிக்கு மனம் ஏங்கும். இந்த காலகட்டத்தில் உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்வீர்கள். இது எல்லாம் மனம் சார்ந்த மாற்றங்கள். மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடல் தடுமாறும் காலம் இது. ஃபிட்டான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள், போதுமான ஓய்வு இவைதான் உடலையும் மனதையும் ஒரே கோட்டில் பயணிக்கச் செய்ய சுலபமான வழிமுறைகள்.

தினசரி யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். உணவின் மீதும் மற்ற விஷயங்கள் மீதும் மனக் கட்டுப்பாடு தேவைப்படும் காலகட்டம் இது. உடலின் வளர்சிதை மாற்றங்கள் வேகமாக மாற்றத்துக்கு உள்ளாகும் காலம். ஹார்மோன்களும் தன் செயல்பாட்டை நிதானமாக்கியிருக்கும். சிலருக்கு இந்த காலகட்டத்தின் பிற்பகுதியில் மெனோபாஸ் எனும் மாதவிலக்கு முடிவுக்கு வருதல் நிகழத் தொடங்கியிருக்கும். இதனால், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் தடுமாறுவார்கள். வருடத்துக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்வது என்ற பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால், உங்கள் உடலின் அப்போதைக்கு அப்போதைய நிலவரம் துல்லியமாகத் தெரியவரும்.

51 - 60 வயது

முதுமையின் தலைவாசல் இது. மனமும் உடலும் முதிர்ந்திருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பருவத்தில் மெனோபாஸ்தான் முக்கியமான உடலியல் மாற்றம். இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு கடுமையான மனஅழுத்தம் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சேர்ந்துகொள்ளும். இதனால் எப்போதும் டென்ஷனாக இருப்பார்கள். எதற்கு எடுத்தாலும் எரிந்துவிழுவார்கள். எல்லாவற்றின் மீதும் இனம்புரியாத எரிச்சலும் கோபமும் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் இணக்கமாக இருக்க வேண்டும். உடலும் மனமும் ஓய்வுக்கு ஏங்கும் காலம் இது என்பதால் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் ஓய்வெடுங்கள். டயட், உடற்பயிற்சி, ஓய்வு மூன்றையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க சுற்றுலாக்கள் செல்லலாம். புண்ணியஸ்தலங்கள், குளிர் பிரதேசங்கள் என உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். அறுபது வயதுக்குப் பிறகு உடல் இதற்கு எல்லாம் ஒத்துழைக்குமா என்று தெரியாது. இப்போது அவற்றை எல்லாம் அனுபவித்துவிடுங்கள். இதனால் மனம் உற்சாகமாக இருக்கும். உடல் பயிற்சி, மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்பன போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை உதாசீனப்படுத்தாதீர்கள்.

60 வயதுக்கு மேல்…

முதுமை எனும் கனிவின் காலகட்டம் இது. முதுமை என்பது இன்னொரு பால்யம். உடல் மனம் இரண்டாலும் குழந்தையாக மாறியிருக்கும் காலம். இந்தக் காலகட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு சற்று குறையும். முதுமையை ’நோய்களின் வேட்டை நிலம்’ என்பார்கள். எவ்வளவுதான் அக்கறையாக நாம் உடலைப் பராமரித்தாலும் முதுமைக்கே உரிய சில குறைபாடுகள், பிரச்சனைகள் இருக்கவே இருக்கும். எனவே, இதனால் மனம் தளர வேண்டாம்.

இந்தக் காலகட்டத்தில் உண்ணும் உணவை ஆறு வேளையாகப் பிரித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால், செரிமானம் எனும் செயல்பாடு எளிதாகும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வது, அடிக்கடி ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்வது ஆகியவற்றை மறக்காதீர்கள். தினசரி அரை மணி நேரமாவது காலார நடப்பது என்பதைக் கைவிடாதீர்கள். உங்களால் முடிந்த அளவு கைகளுக்கும் கால்களுக்கும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் கொடுக்கத் தவறாதீர்கள்.‘முதுமை அல்ல முடங்குதல்தான் நோய்’ என்பதை மறவாதீர்கள்.மறதி, சிறுநீர் அடக்கவியலாமை, மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கை கால் வலி போன்றவை முதுமையின் நோய்களாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையால் இந்தப் பிரச்சனைகளை எளிதாகக் கடக்க இயலும். எனவே, மனம் சோர்ந்துவிடாதீர்கள்.

- இளங்கோ
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
அன்பார்ந்த முதியோரே...

2018-03-12@ 16:47:16


நன்றி குங்குமம் டாக்டர்

வணக்கம் சீனியர்

‘‘மழை, பனி போன்ற குளிர்காலங்கள் முதியவர்களுக்குக் கொஞ்சம் சவாலானவை. இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்னைகளிலிருந்து ஏற்கெனவே இருக்கும் ஆஸ்துமா போன்ற வேறு உடல்நலக் கோளாறுகளும் தீவிரமாகும் காலம் இது. எனவே, உடல்நலனில் போதுமான அக்கறை செலுத்துவது அவசியம்’’ என்கிற முதியோர் நலன் மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ் முதியோர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் பற்றி நினைவுபடுத்துகிறார்.

*மழை மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகள், முதியவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான நோய்கள் தொற்றுமூலமாகத்தான் பரவுகின்றன. இவற்றில் வைரல் இன்ஃபெக்‌ஷன், நீர் வழியாக பரவும் தொற்று முக்கியமானவை.

*குளிர்காலங்களில் Adult vaccination போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் H1N1 இன்ஃபெக்‌ஷனைத் தடுக்க முடியும். இதன்மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சர்க்கரை அளவு இருப்பவர்கள் வாக்ஸின் போட்டுக் கொள்வது நல்லது.

*ஈரப்பதம் அதிகமாக உள்ள இந்த காலக்கட்டத்தில், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள், இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் தொற்றுகளால் அதிகளவில் பாதிப்புக்கு ஆளானவர்கள். இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுற்றுப்புறத்தையும், தங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது அவசியம். குடிக்கும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.

*வயோதிகக் காலத்தில் பலர் விடியற்காலையில் நடைப்பயிற்சி போவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். மழை மற்றும் குளிர்காலத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை வாக்கிங் செல்வதைத் தவிர்க்க முடியாவிட்டால், மப்ளரால் காதுகளை நன்றாக மூடியும், உல்லன் ஸ்வெட்டர் அணிந்தும் செல்வது நல்லது.

*மழை, குளிர்காலங்களில் நிறைய பசியெடுக்கும். அதற்காக, ஒரே நேரத்தில் தேவையைவிட, கூடுதலாக சாப்பிட்டுவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவ்வப்போது கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடலாம். தண்ணீர் அடிக்கடி குடிப்பதும் அதிக பசியைக் குறைக்கும்.

*பொதுவாக, முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தொற்று மூலம் பரவக்கூடிய நோய்கள்(Communicable Diseases), தொற்றா நோய்கள்(Non Communicable Diseases) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், தொற்றா நோய்களின் பாதிப்புகளால்தான் வயதானவர்கள் சமீபகாலமாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

*இன்ஃபெக்‌ஷன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளும், அதனால் ஏற்படுகிற விளைவுகளும் தொற்று நோய்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், வயோதிகம் காரணமாக ஏற்படுகிற கை, கால் மூட்டுகளில் உண்டாகிற வலி, ஞாபக மறதி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தொற்றாநோய்கள் ஆகும். இவற்றின் தாக்கம் முதுமை பருவத்தில் அதிகமாக காணப்படும்.

*எதிர்கால முதியவர்களாகப் போகும் இன்றைய இளைஞர்களுக்கான அறிவுரை இது. வயோதிகக் காலத்தில் ஏற்படுகிற ஆரோக்கிய சவால்களை எளிதாகத் தடுக்க இளவயது முதலே முறையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

*உடற்பயிற்சிகள் செய்தல், சத்தான உணவுவகைகள் சாப்பிடுதல், தீய பழக்கங்களைக் கைவிடுதல் போன்ற நெறியான வாழ்க்கைமுறையைக் கொண்டு இருந்தால், முதுமைப்பருவம் இனிமையாகும்.

*60 வயது வரையிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், சமீபகாலமாக சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஞாபக மறதி போன்றவை வந்துவிட்டால் அவை ஆரம்ப நிலையில்தான் இருக்கும். எனவே, சரியான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி வெற்றி காணலாம்.

*60 வயதைக் கடந்தவர்கள், ‘எனக்கு எந்த நோயும் இல்லை; இனியும் எந்த பாதிப்பும் வராது’ என்று நினைப்பதைவிட, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம் உங்களுடைய அடிப்படை உடல்தகுதி என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

மேலும், மருத்துவருக்கும் உங்கள் உடல்நலனைப் பற்றி ஒரு தெளிவான பார்வை கிடைத்துவிடும். அதன்பின்னர், ஏதேனும் உடல்நலக் குறைபாடு காரணமாக நீங்கள் மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால், தகுந்த சிகிச்சை அளிக்க அவருக்கும் எளிதாக இருக்கும்.

*மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சுவையுணர்வு குறையத் தொடங்கும். இதை சரி செய்ய, தேநீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடிக்கலாம். உணவுக்கு முன்பு தக்காளி சூப் எடுத்துக் கொள்ளலாம். மேலும், புளிசாதம், எலுமிச்சை சாதம் சாப்பிட்டு வருவதும் பசியைத் தூண்டி சுவையுணர்வை அதிகரிக்கும்.

*3 மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புத் தேய்மானம் என ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகள் இருந்தால், அடிக்கடி மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்
ஏர்செல்லில் பிரச்னை ஏற்பட்ட பிறகு 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வோடபோனில் இணைந்துள்ளனர்: வர்த்தக பிரிவு தலைவர் பேட்டி

2018-03-13@ 00:19:52



சென்னை: வோடபோன் நிறுவனத்தில் புதிதாக 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக வோடபோன் தமிழ்நாடு வர்த்தக பிரிவு தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இது குறித்து வோடபோன் நிறுவனத்தின் தமிழ்நாடு வர்த்தக பிரிவு தலைவர் முரளி ெசன்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வோடபோன் நிறுவனத்தில் 27 சதவீதம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு வருவாய் 21.8 சதவீதமாக உள்ளது. மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சென்னையில் ரூ.150 கோடி உட்பட தமிழகம் முழுவதும் ரூ.450 கோடி முதலீடு செய்துள்ளோம். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் வருகைக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

4ஜி டவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி மக்களின் சிறப்பான சேவைகள் கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கு எம்என்பி எண் கட்டாயம். எனவே, எம்என்பி கிடைக்காதவர்கள் அதனை பெறுவதற்கு எங்களால் முடிந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். ஏர்செல் சேவையில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு, 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வோடபோனில் இணைந்துள்ளனர் என்றார்.
சென்னை சின்னமலை முதல் டி.எம்.எஸ் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

2018-03-12@ 19:41:40 


சென்னை: சென்னை சின்னமலை முதல் டி.எம்.எஸ் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 4 கிமீ தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது.
குரங்கணி விபத்தில் புது மாப்பிள்ளை பலி

Added : மார் 13, 2018 01:04






கோபி: குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த, திருமணமாகி, மூன்று மாதங்களே ஆன, 'சாப்ட்வேர்' இன்ஜினியர் பலியானார்.

தேனி மாவட்டம், கொழுக்கு மலைக்கு சுற்றுலா மற்றும் மலையேறும் பயிற்சிக்கு சென்றவர்கள், நேற்று முன்தினம் காட்டு தீயில் சிக்கினர். இவர்களில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, எட்டு பேர் அடங்குவர். இவர்களில், கவுந்தப்பாடியைச் சேர்ந்த நான்கு பேர், விபத்தில் சிக்கினர். பொம்மன்பட்டி, மகாத்மா புரத்தைச் சேர்ந்தவர் விவேக், 28; சாப்ட்வேர் இன்ஜினியர்; மனைவி திவ்யா, 25; இவர் கோபி, பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரியில் பணிபுரிகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது. அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 24; இவர், டி.எம்.இ., முடித்து, சென்னையில் பணிபுரிந்தார். கவுந்தப்பாடி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 26. இவர்கள் நால்வரும் பலத்த காயமடைந்தனர். இதில், விவேக், தமிழ்செல்வன் இறந்து விட்டனர். திவ்யா, கவலைக்கிடமாக உள்ளார். இறந்தவர்களில், சென்னை, டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியாற்றிய, கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண் அகிலாவும், 24, ஒருவர். இதையறிந்த, இவரது பெற்றோர் கிருஷ்ண மூர்த்தி, 70, சாந்தி, 60, ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அகிலாவின் உடலை பெற்று வர, அவரது உறவினர்கள் தேனி சென்றுள்ளனர்.

தப்பிய மனைவி : கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 27; பி.டெக்., - ஐ.டி., படித்துள்ளார். கல்லுாரி காலத்தில் இருந்து, திவ்யா அடிக்கடி மலையேற்றத்துக்கு சென்று வந்தார். இதேபோல், கன்னியா குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விபின், 31, பி.டெக்., - ஐ.டி., படித்து, சென்னையில் உள்ள, ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வந்தார்.அங்குள்ள நண்பர்களுடன் அடிக்கடி மலையேற்றம் சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது, விபின், திவ்யா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்கு பின், ஐ.டி., வேலையை விட்டு, கிணத்துக்கடவில் உள்ள திவ்யாவின் பெற்றோர் வீட்டில் தங்கி, அவர்களின் குடும்பத்துக்கு சொந்தமான மர மில் நிர்வாகத்தை விபின் கவனித்தார். ஆயினும், தம்பதி, ஆண்டுதோறும் மலையேற்றம் செல்வதை கைவிடவில்லை. நேற்று முன்தினம், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி, விபின் உயிர் இழந்தார். தீ காயங்களுடன் தப்பிய திவ்யா, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.பலியான விபின், திருமணத்துக்கு முன், தேனி, கம்பம் பகுதியிலுள்ள நண்பர்களுடன், 'புல்லட்' வாகனத்தில் குரூப்பாக, 'பாரஸ்ட் ரெய்டு' செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். விபினை நண்பர்கள், 'வனக்காதலன்' என பட்டப்பெயர் சூட்டி அழைத்துள்ளனர்.

புதுமண பெண் பலி : ஸ்ரீபெரும்புதுாரை, சேர்ந்தவர் பாலாஜி, 30. தனியார் தொழிற்சாலை அதிகாரி.இவருக்கு புனிதா, 26, என்பவருடன், இந்த ஆண்டு ஜனவரி, 28ல் திருமணம் நடந்தது. ஐ.டி., நிறுவனத்தில் புனிதா பணியாற்றி வந்தார். தோழிகளுடன், குரங்கணி மலைக்கு மலையேற்றத்திற்கு புனிதா சென்றார்.அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் உடல் கருகி பலியானார்.
அ.தி.மு.க., பிரமுகர் மகள் : கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகர, ஜெ., பேரவை செயலராக இருப்பவர் செல்வராஜ். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இரண்டாவது மகள் சுபா, 28, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில், நண்பர்களுடன் மலையேற்றத்திற்குச் சென்றவர், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று இரவு, 7:00 மணிக்கு, சுபாவின் உடல், திட்டக்குடி வந்தது; உறவினர்கள் கதறி அழுதனர். உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

உடல் தகனம் : குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களில் அருண் பிரபாகரன், 37, என்பவரும் அடக்கம். இவர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரகுராமன் நிலக்கிழார். அருண், சென்னை மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக இருந்தார். மலையேறுவதில் ஆர்வமுடைய இவர், பல்வேறு மலைகளுக்கு சென்று பயிற்சி பெற்றார். குரங்கணி மலை காட்டுத் தீயில் சிக்கி பலியானார். அவரது உடல், நேற்று, சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

தகவல் தெரிவித்தவர் : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டியைச் சேர்ந்தவர், நிஷா, 27; பி.டெக்., படித்துள்ளார். சென்னை, வேளச்சேரி, அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தார். மணப்பாக்கத்தில் உள்ள, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.'சென்னை டிெரக்கிங் கிளப்' சார்பில், மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றோரை, ஒருங்கிணைத்தவர்களில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சிக்கி தவித்த போது, மொபைல் போனில், '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிஷா, நேற்று மாலை உயிரிழந்தார்.
ஒரே மகள் : ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வட்டக்கல்வலசையைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 46; விவசாயியான இவரின் ஒரே மகள் திவ்யா, 26; முதுநிலை பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். குரங்கணி காட்டு தீயில் சிக்கி பலியானார். நேற்று மாலை அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

பாதைமாறிய மீட்பு குழு : விபத்தில் காயம் அடைந்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர் கூறியதாவது: இரவில் மீட்புப் பணிகளை கவனிப்பது சவாலாக இருந்தது. எனினும் '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடந்தே சென்று அந்த இடத்தை அடைந்தனர். 'டோலி' மூலம் அந்த ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த மலையேற்றக்குழுவினர் 27 பேர் தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர், என்றார்.

ஆண் உடல் மீட்பு : காலை 8:30 மணிக்கு ஒரு ஆண் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். அது தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, நெல்லையை சேர்ந்த மீட்புக்குழுவினர் மற்றும் தேனி சிறப்பு காவல் படையை சேர்ந்த 28 பேர் சிறப்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாதை மாறினர் : திருநெல்வேலி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி மற்றும் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட மீட்புக் குழுவினர், தீப்பிடித்த மலைப்பகுதியை விட்டு வேறு திசையில் சென்றுவிட்டனர். பின், திரும்பி குரங்கணிக்கு வந்து மீண்டும் சரியான பகுதிக்கு சென்றனர்.
ராஜிவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு

Added : மார் 13, 2018 02:14

புதுடில்லி: 'முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கை, மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க முடியாது' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், ராஜிவ், 1991ல், தமிழகத்தின், ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை, 1999ல் உறுதி செய்தது.இந்நிலையில், ராஜிவ் கொலைக்கான சதித் திட்டம் குறித்து, பல்வேறு துறைகள் அடங்கிய, சி.பி.ஐ., நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, எம்.டி.எம்.ஏ., எனப்படும், பல்துறை கண்காணிப்பு குழு விசாரிக்கிறது.இது தொடர்பான விசாரணையின் போது, முன்னாள், சி.பி.ஐ., அதிகாரி, தியாகராஜன் அளித்த அறிக்கையில், 'ராஜிவை கொலை செய்வதற்கான வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான, 'பேட்டரி' களை, பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார். 'ஆனால், எதற்காக அந்த பேட்டரியை வாங்கித் தந்தோம் என்பது, தனக்கு தெரியாது என, அவர் கூறியுள்ளார். அது குறித்து, விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, 'ராஜிவ் கொலை வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம், 1999ல் அளித்த தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும்' என, பேரறிவாளன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இதற்கு பதிலளித்து, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள மனு:ராஜிவ் கொலை வழக்கில் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, பேரறி வாளன் தாக்கல் செய்த மனு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.ராஜிவ் கொலை வழக்கை, முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என, பேரறிவாளன் மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அதற்கு சாத்தியமில்லை. அதனால், வழக்கை திசை திருப்பும் வகையில் உள்ள இந்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இறந்த பெண் கர்ப்பிணி இல்லை

Added : மார் 13, 2018 02:50

திருச்சி: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உதைத்ததில், இறந்த பெண், கர்ப்பிணி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.தஞ்சை மாவட்டம், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 38. இவரது மனைவி உஷா, 34. திருமணமாகி, ஐந்துஆண்டுகளாக குழந்தை இல்லை. 7ம் தேதி இருவரும் பைக்கில் சென்ற போது, நிறுத்தாமல் சென்றதால், ஆத்திரமடைந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், அவர்களை துரத்தி சென்று, பைக்கை எட்டி உதைத்தார். இதில், கீழே விழுந்த உஷா இறந்தார். இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர். உஷா, மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார் என, அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.தற்போது, உஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கர்ப்பிணி இல்லை எனவும், அவர் வயிற்றில் நீர்க்கட்டி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி, எஸ்.பி., கல்யாண் கூறுகையில், ''பிரேத பரிசோதனையில், உஷா கர்ப்பிணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது,'' என்றார்.
பிளஸ் 2 கணிதத்தில் கடின வினாக்களால் 'சென்டம்' வாய்ப்பு குறைவு : மாணவர்கள் கருத்து

Added : மார் 13, 2018 02:36


தேனி : 'பிளஸ் 2 கணிதத்தில் சில கடின வினாக்களால்' சென்டம்' எடுக்கும் வாய்ப்பு குறைவு,'என மாணவர்கள் தெரிவித்தனர்.
மதிப்பெண் குறையும் : ப.வடிவேல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி: கணித தேர்வில் எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டுள்ளது. ஆறு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததால், 'சென்டம்' பெறுவது கடினம். மொத்த மதிப்பெண் குறையும் வாய்ப்பு அதிகம். ஒரு மதிப்பெண், 10 மதிப்பெண் கேள்விகள் எளிமை. புத்தகத்தின் பின் பகுதியில் இருந்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண் வினாக்களில் சில பாடத்தில் இருந்து வந்தாலும், கடினமாக இருந்தது. முதல் தொகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு உதவியாக இருந்தாலும், இரண்டாம் தொகுதி வினாக்கள் கடினமாக இருந்ததால், 'கட் ஆப்' மதிப்பெண் குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

'சென்டம்' கடினம்   வி. நந்தினி, என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: ஒரு மதிப்பெண்ணில் 10 வினாக்கள் புத்தகத்தில் இருந்து கேட்கப்படாமல் கிரியேட்டிவ் ஆக இருந்தது. எனினும் முந்தைய ஆண்டுகளில் உள்ள வினாத்தாள்களின் வினாக்களாகவே இருந்தன. ஆறு மதிப்பெண் வினாக்கள் சிறிது கடினமானதாக இருந்தாலும், யோசித்து எழுதக்கூடிய வகையிலேயே இருந்தது. 10 மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாகவே இருந்தது. கேள்வித்தாள் எளிமை என்றாலும் ஒரு மதிப்பெண் வினாவில் கேட்கப்பட்ட சில வினாக்களால் 'சென்டம்' எடுக்கும் வாய்ப்பு குறைவு. கட்டாய வினாக்கள் அனைத்தும் மிக எளிமையே.பதிலளிக்க தாமதம்சண்முகக்கனி, முதுகலை கணித ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்: வகைக்கெழுவின் பயன்பாடுகள்' என்ற பாடத்தில் இருந்து வினா கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இதற்கு திறன் மிகுந்த மாணவர்கள் கூட நன்றாக யோசித்து பதிலளிக்க காலதாமதம் ஏற்படும்.

பாடத்தை கவனித்து படித்தவர்கள் விடையளித்து விடலாம். தேர்வு வாரியம் மாணவர்களின் நுண் திறன்களை அறிய கணித கோட்பாடுகளை மிக நுண்ணிய அளவில் பயன்படுத்தி வினாக்களை கேட்பது கடந்தாண்டில் இருந்து துவங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், எளிமையான திறன்கள் மூலமே மாணவர்கள் பதிலளிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்படுவது அவசியம். அதனால் இத் தேர்வில்' சென்டம்' எடுப்பவர்கள் வெகுவாக குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டுள்ளன. பாடநுாலின் பின் பகுதியில் வெளியிடப்பட்டுள்ள 'குறிக்கோள் வினாக்கள்' பகுதியில் இருந்து அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன.
நீட்' தேர்வுக்கு பதிவு முடிந்தது

Added : மார் 13, 2018 02:15

சென்னை: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு முதல், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும், இந்திய மருத்துவம் படிக்கவும், நீட் தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது.அதன்படி, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, பிப்., 9ல் துவங்கியது. மார்ச், 9ல் முடிவதாக இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால், மார்ச், 12 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது; நேற்றுடன் பதிவு முடிந்தது. தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தும் அவகாசம், இன்று இரவு, 11:30 மணிக்கு முடிகிறது.
துணைவேந்தர் தேர்வுக்கு தேடல் குழு

Added : மார் 13, 2018 02:08

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கான துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.தேடல் குழு தலைவராக, ஆந்திர உயர் நீதிமன்ற, முன்னாள் நீதிபதி, ராமுலு நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் உறுப்பினர்களாக, பல்கலை பேரவை சார்பில், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர், தங்கமுத்து, தமிழக அரசு சார்பில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.தேடல் குழு, காலியிடத்திற்கான அறிக்கையை, செய்தித்தாள் மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிட்டு, அதிகப்படியான நபர்கள் விண்ணப்பிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.விண்ணப்பங்களை பரிசீலித்து, மூன்று பேர் பட்டியலை, உரிய விளக்கங்களுடன்,கவர்னருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கலங்கடித்தது பிளஸ் 2 கணிதம்; மனப்பாட மாணவர்களுக்கு, 'செக்'

Updated : மார் 13, 2018 00:28 | Added : மார் 12, 2018 23:12



பிளஸ் 2வுக்கு, நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய கணித தேர்வின் வினாத்தாள், சராசரி மாணவர்களால், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத வகையில் அமைந்து உள்ளது. மொத்தம், 200 மதிப்பெண்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண்ணில், 40 கேள்விகள்; ஆறு மதிப்பெண்களில், 10 கேள்விகள் மற்றும், 10 மதிப்பெண்களில், 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அவற்றில், 10 மதிப்பெண் கேள்விகள் மட்டும், மாணவர்களுக்கு எளிதாக அமைந்திருந்தன. மற்ற கேள்விகளுக்கு விடை எழுத, மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டது.அதாவது, 40 ஒரு மதிப்பெண் கேள்விகளில், 30 கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்வி பட்டியலில் இருந்தும்; 10 கேள்விகள், 'கம் புக்' எனப்படும், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன.

அவற்றில், அனைத்து கேள்விகளுக்கான விடைக்குறிப்புகளும், புத்தகத்தில் இருப்பதை போல இல்லாமல், வினாத்தாளில் வரிசை மாற்றி கேட்கப்பட்டிருந்தன. அதனால், மனப்பாடமாக விடைகளை படித்திருந்த மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்ய திணறினர்.

அதேபோல, ஆறு மதிப்பெண்களுக்கான பிரிவில், ஒரு கேள்விக்கு, கட்டாயமாக பதில் எழுத வேண்டும். இந்த பிரிவில், 'சாய்ஸ்' அடிப்படையில், 15 கேள்விகளில், ஒன்பது கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். அவற்றில், ஐந்து கேள்விகள் மட்டுமே, மாணவர்கள் விடை எழுதுவதற்கு எளிதாக இருந்தன.

இது குறித்து, சென்னை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், ராஜ் கூறியதாவது: ஏற்கனவே அமலில் உள்ள, 'ப்ளூ பிரின்டில்' இருந்து மாறாமல், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண்களில், தலா, ஒரு கேள்வி, மாணவர்களின், 'சென்டம்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் வகையில், புதிய கேள்வியாக இடம்பெற்றன.

பெரும்பாலான கேள்விகள், இதுவரை, பொதுத் தேர்வுகளில் கேட்கப்படாதவையாக இருந்தன.மாணவர்களின் மனப்பாட கல்வியை மாற்றும் வகையில், ஒரு மதிப்பெண் கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகளின், விடைக்குறிப்புகளில் தவறு இல்லை.

ஆனால், புத்தகத்தில் உள்ளது போன்று இல்லாமல், வரிசை முறை மட்டும் மாறியிருந்தன. வினாத்தாளை பொறுத்தவரை, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், தரமாக இருந்தது. பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள், 'சென்டம்' பெறுவதில் சிரமம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

விலங்கியலும் கடினம்!

பிளஸ் 2 விலங்கியல் தேர்விலும், சில கடினமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.பிளஸ் 2 தேர்வில், நேற்று விலங்கியல் பாட தேர்வும் நடந்தது. விலங்கியல் வினாத்தாளில், பல கேள்விகள் சிந்தனை திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில், 6, 7, 23 ஆகிய கேள்விகளுக்கு, விடைகளை கண்டுபிடிக்க, மாணவர்கள் சிரமப்பட்டனர். ஐந்து மதிப்பெண்களில், 'கார்போஹைட்ரேட்ஸ்' வகைகள் குறித்த கேள்வி இடம்பெற்றது. இதற்கு, நீண்ட பதிலை எழுத வேண்டியிருந்ததால், மாணவர்களுக்கு நேர பற்றாக்குறை ஏற்பட்டது.

இது குறித்து, சென்னை, எம்.சி.டி.எம்.முத்தையா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விலங்கியல் ஆசிரியர், சவுந்தரபாண்டியன் கூறுகையில், ''பெரும்பாலான கேள்விகள், பல முறை கேட்கப்பட்டவை. அதனால், வினா வங்கியை படித்தவர்களும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றியவர்களும், அதிக மதிப்பெண் பெற முடியும். 10 மதிப்பெண்களுக்கான பிரிவில், 65 மற்றும், 70ம் எண் கேள்விகள், மாணவர்களை சிந்தித்து, பதில் எழுத வைப்பதாக இருந்தன,'' என்றார்.

23 பேர், 'காப்பி'

நேற்றைய தேர்வில், 23 மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டனர். அவர்களில், 18 பேர் கணித தேர்விலும், ஐந்து பேர் விலங்கியல் தேர்விலும் சிக்கினர். அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், எட்டு மாணவர்களும், ஏழு தனித்தேர்வர்களும் பிடிபட்டனர். திருச்சியில், ஏழு பேர், சேலத்தில் ஒருவர் சிக்கியதாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -
சசிகலாவுக்கு தினக்கூலி 30 ரூபாய்

Added : மார் 13, 2018 02:32

பெங்களூரு: பெங்களூரு சிறையில், காளான் விளைவிக்கும் சசிகலாவுக்கும், தர்பூசணி பயிரிடும் இளவரசிக்கும், தினமும், 30 ரூபாய், கூலி வழங்கப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, சசிகலா, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர், சிறையில், கன்னடம், கணினி பயிற்சி பெற்று வருகிறார். சசிகலாவை விட, இளவரசி, நன்றாக கன்னடம் பேசுகிறார்.பெண்கள் சிறை அமைந்துள்ள பகுதியில், பழங்கள், காய்கறிகள் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பச்சை மிளகாய், பப்பாளி, கத்திரிக்காய், காளான், தர்பூசணி என, பல காய்கறிகளும், பழங்களும் விளைவிக்கப்படுகின்றன.இதில், காளான், தர்பூசணி பழங்கள் விளைவிக்கும் வேலையை, முறையே, சசிகலாவும், இளவரசியும் செய்து வருகின்றனர். இதற்கு கூலியாக, அவர்களுக்கு, நாளொன்றுக்கு, 30 ரூபாய் வழங்கப்படுகிறது. தோட்ட வேலை, கன்னடம், கணினி பயற்சி முடித்த பின், பொழுது போக்குவதற்காக, வளையல் செய்வது, மணிகள் கோர்ப்பது போன்ற, அழகு கலை பொருட்கள் செய்யும்பணியையும், சசிகலா ஆர்வத்துடன் செய்து வருகிறார்.சமீபத்தில் சிறைக்கு வந்த, தேசிய மகளிர் ஆணைய தலைவர், ரேகா சர்மாவுக்கு, தான் செய்த வளையல்களை, சசிகலா பரிசாக வழங்கியுள்ளார்.'இதற்கு, எவ்வளவு பணம்' என, ரேகா கேட்டு, கைப்பையில் பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, 'பணம் வேண்டாம்; என் பரிசாக வைத்து கொள்ளுங்கள்' என, சசிகலா கூறியுள்ளார்.சிறையின் மற்றொரு பகுதியில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவின் உறவினர், சுதாகரன், எப்போது பார்த்தாலும், வாசனை திரவியம் அடித்து கொள்வதும், தன்னை அழகு படுத்தி கொள்வதிலுமே காலத்தை கழித்துவருகிறார்.ஏதாவது பணி ஒதுக்கினாலும், சரியாக செய்வதில்லை என, சிறைத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை

Added : மார் 12, 2018 23:34 | 



ஐதராபாத் : ஐதராபாத் நகரில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், 69 பேருக்கு, சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனவரியில் நடந்த சாலை விபத்தில், சிறுவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 'வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற, 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்' என, சட்டம் உள்ளது.

இந்நிலையில், வாகனங்கள் ஓட்டும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐதராபாத் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். ஒரு மாதத்தில் மட்டும், கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டிய, 69 சிறுவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தந்தையரை, நீதிமன்றம் வரவழைத்தனர்.

சிறுவர்களுக்கு அபராதம் விதிக்காமல், சட்ட விரோதமாக அவர்கள் வாகனம் ஓட்ட காரணமாக இருந்த, அவர்களது தந்தையருக்கு, மூன்று நாட்கள் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்
பயங்கரம்!நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி 50 பேர் பலி
தரையிறங்கும் போது மோதி தீப்பற்றி எரிந்தது


13.03.2018

தாகா : அண்டை நாடான, வங்க தேசத்தில், தாகா நகரிலிருந்து, நேபாளத்தின், காத்மாண்டு நகருக்கு, 71 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில், 50 பேர் பலியானதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.




ஆசிய நாடான, வங்கதேச தலைநகர், தாகாவில் இருந்து, நேபாளத்தின் தலைநகர், காத்மாண்டுக்கு, நேற்று, 67 பயணியருடன், 'யு.எஸ்., - பங்ளா' ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில், பைலட் உட்பட, விமான நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் இருந்தனர்.

இந்த விமானம், காத்மண்டில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, எதிர்பாராதவிதமாக தரையில் மோதி விபத்துக்கு உள்ளானது.

ஒன்பது பேர்

இதில்,50 பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து,41 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:விமானம் தரையிறங்கும் போது, தரையில் மோதி, அதே வேகத்தில் ஓடுபாதையிலிருந்து விலகி, அருகில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து, ஆம்புலன்ஸ் வண்டிகளும், தீயணைப்பு வாகனங்களும், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தன.

பலி அதிகரிக்கும்

விபத்தில் சிக்கி இறந்த,41 பேரின் உடல்கள், கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில், ஒன்பது பேர் இறந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.விமான பயணியரில், 27 பேர் பெண்களும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்;மற்றவர்கள், ஆண்கள். பயணியரில், 33 பேர், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேபாளத்தின், சிவில் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர், சஞ்சீவ் கவுதம் கூறியதாவது:விபத்துக்கு உள்ளான விமானம், விமான நிலையத்தின், தெற்கு பகுதியில் உள்ள ஓடுபாதையில் இறங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், வடக்கு பகுதியில் அமைந்த ஓடுபாதையில், அந்த விமானம் தரையிறங்கியது.

இறங்கும் போதே, ஸ்திரமின்றி, தள்ளாட்டத்துடன் இறங்கியதை பார்க்க முடிந்தது. தொழில்நுட்பக் கோளாறால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், விபத்துக்கான காரணம் பற்றிய ஆய்வு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நேபாளத்தில் முந்தைய விபத்துகள்

● ஆக., 22, 2002: நேபாளத்தின் ஜோம்சோம் விமான நிலையத்தில் இருந்து, பொக்காரா விமான நிலையம் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது; இதில், 18 பேர் இறந்தனர்
● ஜூன், 21, 2006: ஜும்லா விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், ஒன்பது பேர் இறந்தனர்
● அக்., 8, 2008: வடக்கு நேபாளத்தின் லுக்லா மாவட்டத்தில், சுற்றுலா பயணியரின் சிறிய ரக விமானம், மோசமான வானிலையால் விழுந்து நெறுங்கியது; இதில், 18 பேர் பலியாயினர்
● செப்., 25, 2011: எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப் பார்க்கச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலி

● மே, 14, 2012: வடக்கு நேபாளத்தின் ஜோம்சோம் விமான நிலையத்தில், தரையிரங்கிய சுற்றுலா விமானம் விபத்தானதில் 14 பேர் இறந்தனர்
● பிப்., 24, 2016: மேற்கு காத்மாண்டில் ஏற்பட்ட விமான விபத்தில், 23 பேர் பலி.


துருக்கி விமான விபத்து 10 பெண்கள் பலி

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, ஷார்ஜாவில் இருந்து, மத்திய கிழக்கு நாடான, துருக்கியில் உள்ள, இஸ்தான்புல் நோக்கி, தனியார் விமானம், நேற்று பறந்து கொண்டிருந்தது. இதில், துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள், தன் தோழியர் ஏழு பேருடன் பயணித்தார். விமானத்தில், இரு பெண் பைலட்கள் மற்றும் ஓர் ஊழியர் இருந்தனர்.ஈரானின், ஜாக்ரோ மலைப் பகுதியை கடக்கும் போது, விமானம் விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணம் செய்த, 11 பேரும் உயிரிழந்தனர். அதில், 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ஹெலிகாப்டர் விபத்து

அமெரிக்காவில் உள்ள, நியூயார்க் நகரில், ஹெலிகாப்டர் பயன்பாடு மிக அதிகம். சுற்றுலா பயணியர், தொழிலதிபர்கள், போலீஸ், ஆம்புலன்ஸ், போக்குவரத்து நிலவரம் குறித்த செய்திகள் வழங்கும் நிருபர்கள் என, பலரும், ஹெலிகாப்டர் பயணத்தைத் தான் பயன்படுத்துவர். இந்நிலையில், புகைப்படங்கள் எடுப்பதற்காக, சிலர், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தனர். இவர்கள், நியூயார்க் நகரின் மேலே பறந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நியூயார்க் நகரில் உள்ள ஓர் ஏரிக்கு அருகே, மிக தாழ்வாக பறந்த போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. தண்ணீருக்குள், அந்த ஹெலிகாப்டர் மூழ்கியது. ஹெலிகாப்டரின் பைலட் மட்டும், தண்ணீரில் நீந்தி தப்பித்தார். ஹெலிகாப்டரில் பயணம் செய்த, மேலும் ஐந்து பேர், ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
தலையங்கம்

வனப்பகுதியில் நடந்த துயர சம்பவம்





தேனி மாவட்டத்தில் குரங்கணி அருகே, நடந்த தீவிபத்து 9 பேரை பலிவாங்கி, எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

மார்ச் 13 2018, 03:15 AM

வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளால் காடுகள் பெருமளவில் சேதம் அடைந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் தேனி மாவட்டத்தில் குரங்கணி அருகே, கொழுக்குமலை பகுதியில் நடந்த தீவிபத்து வெறும் விபத்தாக மட்டுமல்லாமல், 9 பேரை பலிவாங்கி, 17 பேரை கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாக்கியது எல்லோருடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. மலை ஏறும் பயிற்சிக்காக, சென்னையில் இருந்தும், கோவை, ஈரோடு பகுதிகளிலிருந்தும் 39 பேர் கொழுக்குமலை பகுதிக்கு சென்றிருந்திருக்கிறார்கள். இரவில் கூடாரம் அமைத்து தங்கியவர்கள், காலையில் திரும்புவதற்காக மலையிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். 3 பேர் மலையிலிருந்து இறங்கமுடியாது என்று ஜீப்பில் திரும்பிவிட்டனர். 36 பேர் மட்டும் மலைப்பாதையில் நடந்து வந்திருக்கிறார்கள். இதில், பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.


அந்தநேரத்தில், திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியதால் உயிர் பிழைக்க ஆங்காங்கு ஓடிச் சென்றிருக்கிறார்கள். இதில் 9 பேர் பயத்தில் ஒரு பெரியபள்ளத்தில் விழுந்து உயிர் இழந்துவிட்டார்கள். மீதமுள்ள 27 பேர் இப்போது மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீட்கப்பட்டவர்களில் 10 பேருக்கு காயம் எதுவும் இல்லை. 17 பேர் பலத்த தீக்காயங்களோடு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். உயிர் இழந்தவர்களில் சென்னையை சேர்ந்த 4 பெண்களும், கோவையை சேர்ந்த 2 ஆண்களும், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 2 பெண்களும், ஒரு ஆணும் ஆவார்கள். மீட்புப்பணியில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மிகத்தீவிரமாக ஈடுபட்டு உடனடியாக ஹெலிகாப்டர்களையும், கமாண்டோ படையினரையும் அனுப்பி வைத்தார். தமிழக அரசின் சார்பில் மிகத்தீவிரமாக மீட்புபணிகள் நடந்தது. துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் அங்கேயே இருந்து பணிகளை முடுக்கி விட்டனர். முதல்–அமைச்சர் நேற்று மாலையில் மதுரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை பார்த்தார்.

பொதுவாக மலை ஏறும் பயிற்சிக்கு செல்பவர்கள் இதுபோன்ற காலக்கட்டத்தில் செல்லக்கூடாது. மழை பெய்து முடிந்தவுடன் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் எல்லா இடங்களும் பச்சைப்பசேல் என்று ஈரப்பதத்தோடு இருக்கும் நிலையில்தான் செல்லவேண்டும். அப்போது தீக்குச்சியை கொழுத்திபோட்டாலும் தீப்பற்றாது, பரவாது. இதுமட்டுமல்லாமல், வனத்துறையினரிடம் முறையான அனுமதியை பெற்றுச் சென்றிருந்தால் துணைக்கு அந்தப்பகுதியைப்பற்றி நன்றாக தெரிந்த வனத்துறை அலுவலர் மற்றும் காட்டுக்குள் வசிக்கும் மலைவாசி போன்றவர்களை அனுப்புவார்கள் என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கணேசன். இதுமட்டுமல்லாமல், இவ்வளவு பேர் ஒரு குழுவாக மலைப்பகுதிக்குள் அனுமதியில்லாமல் நடமாடி இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்து அவர்களை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். கோடைநேரத்தில் இதுபோன்ற காட்டுத்தீ பரவாமல் இருக்க ஆங்காங்கு தீ தடுப்பு கோடு (பயர்லைன்) என்று கூறப்படும் வகையில், 5 மீட்டர் அகலத்தில் எல்லாப்பகுதிகளிலும் ஆங்காங்கு புல் பூண்டுகளைவெட்டி வெறும்தரையாக அமைப்பது வழக்கம். அப்படி அமைத்திருந்தால் அந்த தீ தடுப்புகோட்டை தாண்டி தீபரவாமல் இருக்கும். மொத்தத்தில், இதுபோன்ற காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கவும், அப்படியே தீவிபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கவும், மலை ஏறும் பயிற்சிக்காக யாரும் அனுமதியில்லாமல் செல்வதை தடுக்கவும் தீவிரமான நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.

Sunday, March 11, 2018

Denial Of Pension For Lack Of Aadhaar Linkage: CIC Seeks Explanations From Department Of Posts [Read Order] | Live Law

Denial Of Pension For Lack Of Aadhaar Linkage: CIC Seeks Explanations From Department Of Posts [Read Order] | Live Law: Reacting strongly to the denial of information relating to pension by the postal authority, the Central Information Commissioner (CIC) passed an order asking explanation from the respondent authority under what legal authority they had directed the post offices to link their employer’s pension payments with Aadhaar. The order was passed by CIC Sridhar Acharyalu in …

10-Year-Old Boy Gives ‘Thank You Note’ to SC Bench Which Dissolved His Parent’s Marriage [Read Judgment] | Live Law

10-Year-Old Boy Gives ‘Thank You Note’ to SC Bench Which Dissolved His Parent’s Marriage [Read Judgment] | Live Law: A ten-year-old boy recently rushed towards the Supreme Court bench of Justice Kurian Joseph and Justice Mohan M Shantanagoudar while they were disposing of an appeal related to a matrimonial dispute. The boy was one of the children of the couple who were on the two sides of matrimonial litigation. As the mediation attempts failed, …

Delhi gynaecologist gets life imprisonment for killing her minor twins with anaesthesia overdose

Delhi gynaecologist gets life imprisonment for killing her minor twins with anaesthesia overdose

Dental Council of India for 3 year BDS to MBBS bridge course

Dental Council of India for 3 year BDS to MBBS bridge course

MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE

PRESS INFORMATION BUREAU
 
Authorisation to Sign Pathology Report

As per clause (c) of sub-section (2) of Section 15 of IMC Act, 1956, no person other than a doctor having qualification recognized by MCI and registered with MCI/State Medical Council(s) is allowed to practice modern system of medicine or sign or authenticate a medical or fitness certificate or any other certificate required by any law to be signed. Further, Hon’ble Supreme Court of India vide order dated 12.12.2017 in the Special Leave to Appeal (Civil) No. 28529/2010 in the matter of North Gujarat Unit of Association of Self Employed Owners (Paramedical) of Private Pathology Laboratories of Gujarat Vs. North Gujarat Pathologists Association & Ors held that the stand of the Medical Council of India that Laboratory Report can be counter signed only by a registered medical practitioner with a post graduate qualification in pathology is correct”.

The Minister of State (Health and Family Welfare), ShAshwini Kumar Choubey stated this in a written reply in the RajyaSabha here today.

*****


MV/LK


(Release ID :176252)
ஆதரவற்ற பெண் மனநோயாளிகளுக்கு அரசுக் காப்பகம் ! -” நாட்டிலேயே இது முதல் முறை! ” 

இரா.தமிழ்க்கனல்



மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் பெண் மனநோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தமிழக அரசும் இணைந்து இந்த மையங்களை அமைக்கிறது.

மன அழுத்தம் போன்ற சாதாரண மனநலச் சிக்கல்களால் அவதிப்படுவோருக்கு தமிழக அளவில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரண சிக்கல் உடையவர்கள், தங்களின் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்வதில் பெரிய பிரச்னை இருப்பதில்லை. ஆனால் மனச்சிதைவு போன்ற தீவிர மனநோய் உடையவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அசைக்கமுடியாத சந்தேகமும் அமானுஷ்யமான குரல்கள் கேட்பதாகவும் கருப்பு உருவங்கள் பக்கத்தில் இருப்பதாகவும் உணரும் இவர்கள், அவற்றால் தங்களுக்கு ஆபத்து என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு உள்ளேயே பாதுகாப்பு இல்லை என வீட்டைவிட்டு வெளியேறி, நெடுந்தொலைவுக்கு நடந்தேசென்றுவிடவும் வாய்ப்பு உண்டு. இப்படியான நலச்சிக்கல் அடைந்தவர்கள், வீட்டார் மற்றும் உறவினர்களின் ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித்திரியத் தொடங்குவார்கள். தங்களின் உடை, தோற்றம் குறித்த அக்கறையின்றி காணப்படும் இவர்கள், தேவைப்படும் நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வார்கள்.

இரு பாலருக்கும் இந்த நோய் ஏற்படும் என்றாலும் இதனால் பாதிக்கப்படும் பெண்கள், கூடுதலான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பாலினரீதியில் இவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளைக்கூட இவர்களால் உணர்ந்துகொள்ளக்கூட முடியாது என்பது பெரும் கொடுமை! சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இப்படியான பெண் மனநோயாளிகளுக்கு, எய்ட்ஸ் போன்ற உயிர்குடிக்கும் நோய்களும் தொற்றவைக்கப்படுகின்றன. இந்த அவலத்திலிருந்து பாதுகாக்க பல இடங்களில் அரசுக் காப்பகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் மிக குறைந்த அளவே உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பெண் மனநோயாளிகளுக்கான பராமரிப்பு மையங்களைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன. இந்தவகை மையங்கள் நாட்டிலேயே முதலில் தொடங்கப்படுபவையாக இருக்கும் என்று தேசிய சுகாதாரத் திட்டத்தின் உயர் அதிகாரி நம்மிடம் கூறினார்.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திலும் மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களித்துவருகின்றன. இந்தத் திட்டமும் அதில் ஒன்று என்றாலும், தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இது செயல்படுத்தப்படும்.

அவசரப் பராமரிப்பு மற்றும் மீட்பு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில், மூன்று எம்பிபிஎஸ் மருத்துவர்கள், ஒரு உளவியல் ஆலோசகர், 5 மனநல சமூகப்பணியாளர், ஒரு தகவல் பதிவாளர், 15 மனநல சிகிச்சை செவிலியர்கள், 2 பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், ஒரு மருந்தாளுநர், 2 பாதுகாவலர்கள் என 30 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் இது செயல்படுத்தப்படும்.

இந்த ஐந்து மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பழைய மாவட்ட மருத்துவமனை கட்டடங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது; இதற்காக புதிய கட்டுமானங்களைச் செய்யவேண்டிய தேவை இல்லை என்பதால் விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

முதலில், ஆதரவற்று சுற்றித்திரியும் பெண் மனநோயாளிகளை மீட்புக்குழுவினர் கண்டறிவார்கள். மனநலச் சட்டப்படி நீதித்துறை நடுவரின் முன்னிலையில் நிறுத்தி, அவரின் உத்தரவைப் பெற்ற பின்னரே பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படவேண்டும். எனவே, அதன்படி கொண்டுவரப்படும் பெண் நோயாளிகளுக்கு மனநலச் சிகிச்சைக் குழுவினர் சிகிச்சை அளிப்பார்கள். மையங்களில் வைத்து பராமரிக்கப்படும் இவர்களுக்கு சிகிச்சையைத் தொடர்ந்து சராசரி வாழ்க்கை வாழ்வதற்கான தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும். சிகிச்சைப் பிந்தைய பராமரிப்பு எனப்படும் கட்டத்தில் நோயாளிகளை அவர்களின் குடும்பத்தினருடனோ சமூகத்தினருடன் கலந்துவாழவுமோ வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

வெறும் 55 டாலருக்காக கடத்தப்படும் குரங்குகள்... அவற்றை என்ன செய்கிறார்கள்? #AnimalTrafficking அத்தியாயம் 14

ஜார்ஜ் அந்தோணி
vikatan  

குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கிற ஒரு மனிதனைப் பிடித்து உடலிலுள்ள ஏதோ ஓர் உறுப்பை வெட்டிவிட்டு காட்டில் இருக்கிற ஒரு மிருகத்திடம் ஒப்படைத்தால் என்ன ஆவான் எனக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காமெடியாக தெரியலாம், நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாத விஷயம். ஆனால் இதுதான் விலங்குகளுக்கு நிஜமாக நடந்து கொண்டிருக்கிறது. காடுகளிலிருந்து கடத்தப்படும் ஒவ்வொரு குரங்குகளும் பற்கள் பிடுங்கப்பட்டு வீடுகளில் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றன. குரங்குகளைக் கடத்தி என்ன செய்கிறார்கள்? குரங்குகளின் சர்வதேச விலை என்ன? இந்த அத்தியாயம் குரங்குகள் பற்றியது…



2007 ஆண்டு லாஸ் ஏஞ்சல் விமான நிலையம். வழக்கம் போல சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 53 வயது மதிக்கத்தக்க ஒருவரைச் சோதனை செய்கின்றனர். அவர் கொண்டு வந்த சூட்கேசில் 10 பறவைகள் மற்றும் 50 ஆர்ச்சிட் தாவர வகையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அனைத்தையும் பறிமுதல் செய்து விட்டு, "வேறு எதுவும் இருக்கிறதா?" என விசாரிக்கிறார்கள். அதற்குக் கடத்தியவர் சொன்ன பதில் “என் பாக்கெட்ல குரங்கு குட்டி இருக்கு!”. இரண்டு மக்காக்கோ வகை குரங்கு குட்டிகளை அவருடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார். தாய்லாந்திலிருந்து கடத்தி வந்ததை உறுதி செய்த சுங்க அதிகாரிகள் சம்மந்தப்பட்டவரை கைது செய்தனர். 2012 செப்டம்பர் மாதம் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் துபாய் பயணம் செய்ய இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரிக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் உள்ளாடையில் குரங்கு குட்டியைக் கடத்தியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அரை மணி நேரம் கழித்து விமான நிலைய குப்பை தொட்டியில் அனாதையாக ஒரு குரங்கு குட்டிக் கண்டெடுக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அந்தக் குரங்கும் இவர்கள் கடத்தி வந்தது என்பது தெரிய வந்தது.

விமானத்தில் குரங்குகளை கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்ததின் அடிப்படையில் 2008-ம் வருடம் டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு வந்த விமானத்தை வன விலங்கு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானத்தின் பயணிகள் புகைப்படங்களையும் அமெரிக்கா வந்திருந்த பயணிகள் புகைப்படங்களையும் ஆராய்கிறார்கள். ஒரு பெண் அணிந்திருந்த உடையில் இரண்டு விதமான புகைப்படங்களிலும் சில மாறுதல்கள் தெரிகின்றன. குறிப்பிட்ட பெண் பயணியைச் சோதனை செய்ததில் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் அரண்டு போனார்கள். குரங்கிற்கு மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியில் கடத்திவந்திருந்தார். பார்க்கிறவர்களுக்கு அந்தப் பெண் கர்ப்பிணி போல தெரிவார். ஒரு புகைப்படத்தில் பெண்ணின் உடை பெரிதாகவும், இன்னொரு படத்தில் சிறிதாகவும் இருக்கவே பொறிதட்டியதில் அந்தக் கடத்தலை போலீசார் கண்டுபிடித்தனர்.



மலேசியா, சுமத்ரா தீவுகளில் இருக்கிற காடுகளிலிருந்து கடத்தப்படுகிற குரங்குகளை ஊசிகள் மூலம் 20 மணி நேரத்துக்கு மேலாக மயக்க நிலைக்குக் கொண்டுபோகிறார்கள். மயக்க நிலையில் இருக்கிற குரங்கு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டுகளிலும், சூட்கேஸ்களிலும், உடலிலும் வைத்துக் கடத்தி விடுகிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் உடல்கூறு ஆராய்ச்சிக்காகவும், உணவிற்காகவும் கடத்தப்படுகின்றன. கடத்தலுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் முதலில் அதன் பற்களை பிடுங்கி விடுகிறார்கள். பற்கள் பிடுங்கப்பட்ட குரங்குகளைப் பல ஆயிரம் டாலர்களில் ஐரோப்பாவிலும், சீனாவிலும் விற்று விடுகிறார்கள். பல நாடுகளிலும் பற்கள் பிடுங்கப்பட்ட குரங்குகள் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன என்பதுதான் இப்போதைய நிலவரம். தாய்லாந்து மார்க்கெட்டில் போலிஷ், மற்றும் இதர சட்ட சிக்கல்களுக்கான எல்லாம் சேர்த்து ஒரு குரங்கின் விலை 55 அமெரிக்க டாலர்கள். தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் செயல்படும் சேட்சக் விலங்குகள் மார்க்கெட்டில் குரங்குகளுக்கென்று தனியான வர்த்தக கடைகள் செயல்படுகின்றன. வளர்ப்பு குரங்குகள், இறைச்சிக்கான குரங்குகள் என தனி தனி கடைகள் செயல்படுகின்றன. சில குரங்குகள் டாலர்களில், சில குரங்குகள் யூரோக்களிலும் விற்கப்படுகின்றன. குரங்குகளின் இறைச்சி பல நாடுகளுக்கும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றது. கோழி மற்றும் பன்றி இறைச்சி என்கிற பெயர்களில் சரக்கு விமானத்திலும், கப்பலிலும் ஏற்றப்படுகிற பெட்டிகளில் 40 சதவிகிதம் இருப்பது குரங்குகளின் இறைச்சி என்கிறார்கள் தாய்லாந்தின் சுங்க அதிகாரிகள்.

உலகில் அதிகம் கடத்தப்படும் குரங்கில் மிக முக்கியமானது நீண்ட வால் குரங்கு (Long Tailed Macaque). இந்தக் குரங்குகளின் கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருப்பது மருத்துவம். மருத்துவ உலகில் பலகட்ட பரிசோதனைகளுக்கும் இந்த வகை குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் நாடுகளில் அதிகம் காணப்படுகிற இவ்வகை குரங்குகளுக்கு உலகம் முழுமைக்கும் டிமாண்ட் இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு மக்காக்கோ குரங்கின் விலை 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். மருத்துவப் பரிசோதனை தவிர்த்து உணவிற்காகவும் இவ்வகை குரங்குகள் கடத்தப்படுகின்றன.



சர்வதேச சந்தையில் குரங்குகளின் நிலை இப்படி இருக்க இங்கிருக்கிற நம்மூர் குரங்குகளின் நிலையோ பரிதாபத்தில் இருக்கிறது. அதன் இடம், உணவு, பாரம்பரியம் என எல்லாவற்றையும் அபகரித்துவிட்டு, அவற்றை உணவிற்காகக் கையேந்துகிற நிலைக்குக் கொண்டு வந்துவிட்டோம். ஊட்டி, கொடைக்கானலுக்குப் போகிற சாலைகளில் இருபுறமும் ஆயிரம் குரங்குகளை பார்க்க முடிகிறது. தனியாக, கூட்டமாக எனச் சாலையின் இரு பக்கங்களிலும் கையேந்தி நிற்கிற குரங்குகளின் பாரம்பரிய வாழ்விடங்கள் எங்கே போனது? எதற்காக அவை மனிதர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்றெல்லாம் என்றாவது யோசித்திருக்கிறோமா? எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனும் அவனது பிச்சையிடுகிற மனநிலையும்தான். விலங்குகளைப் பொழுது போக்கிற்காக உபயோகப்படுத்திய மனிதன் அதற்குப் பலனாக பழங்களையும், சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அவற்றிற்குப் பிச்சை போட ஆரம்பித்தான். அதன் விளைவுதான் அவை சாலைக்கு வந்ததும், அடிபட்டுச் சாவது. எல்லா விலங்குகளையும் கடத்தி உணவிற்காகவும், மருந்திற்காகவும் கொன்றுவிட்டு மனித இனம் யாரோடு வாழப்போகிறது.
கருணைக்கொலை... அதென்ன, ஆக்டிவ் எத்னேஸியா, பாஸிவ் எத்னேஸியா? #Euthanasia

இரா.செந்தில் குமார்

VIKATAN  

தீராத நோய் அல்லது முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர், தொடர் சிகிச்சைக்குப் பிறகும் குணமடையாமல் கடுமையான துன்பங்களை அனுபவித்தார் என்றால் அவர் படும் துயரிலிரிந்து விடுவிப்பதற்காக செய்யப்படுவதே கருணைக்கொலை (Euthanasia). கருணைக்கொலை தொடர்பாக இந்தியாவில் நெடுங்காலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. தீராத நோய்வாய்ப்பட்டு கடும் வலியை அனுபவித்து ஒருவரை கருணைக்கொலை செய்வது விடுதலையே என்று ஒரு தரப்பும், ஒரு உயிரை எடுக்க எவருக்கும் உரிமையில்லை... கருணைக்கொலை என்ற பெயரில் அப்படிச் செய்வது கொலைக்குச் சமமானது என்று இன்னொரு தரப்பும் குரல் கொடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



'தன்மானத்துடன் இறப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை, கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும். தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். அதே நேரத்தில் கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுக்க வேண்டும். கருணைக்கொலையை நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர் பிரிய வைப்பதன் மூலம் செய்யலாம் என்கிறது அந்தத் தீர்ப்பு.

தமிழகத்தில் முற்காலங்களில் கருணைக்கொலைகள் நடந்ததாக தகவல்கள் உண்டு. முதியவர்கள் வெகு நாள்களாக நோய்வாய்ப்பட்டு அவதியுற்றால், அதிகாலையில் அவர்களை எழுப்பி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, இளநீர் போன்ற குளிர்ந்த பானங்களைக் கொடுத்து மரணிக்கச் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் இருந்துள்ளது. இவை பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்ததில்லை.

முதன்முதலில் கருணைக்கொலையை அங்கீகரித்த நாடு நெதர்லாந்து. பெல்ஜியம், கொலம்பியா, அமெரிக்கா, பின்லாந்து ஆகிய நாடுகளிலும் கருணைக் கொலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் கடுமையாக மறுக்கப்பட்டு வந்த கருணைக்கொலைக்கு தற்போது நீதிபதிகள் அனுமதியளித்திருக்கிறார்கள். 2005 -ம் ஆண்டு 'காமன் காஸ்' என்ற தொண்டு நிறுவனம் கருணைக் கொலையை அனுமதிக்கக் கோரி உச்சந்தீமன்றத்தில் மனு செய்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மனு, 2014 -ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.



மீண்டும் சில ஆண்டுகள் மரணித்துக் கிடந்த இந்த மனு, 2017 - ம் ஆண்டு அக்டோபர் 10 -ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சட்ட அமர்வு முன்பாக உயிர்பெற்றது.

"கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், ஒருவருக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையை முடித்துக்கொள்ளவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. மருத்துவ வாரியம் தான் தீர்மானிக்கவேண்டும் " என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதிட்டார். தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் நேற்று இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

"இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது" என்கிறார் முதியோர் நல மருத்துவர் நடராஜன். அதேநேரம் கருணைக்கொலை செய்வதில் உள்ள பிரச்னைகளையும் அலசுகிறார்.

" கருணைக்கொலை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. சட்டமானால், தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதேசமயம், குணப்படுத்தமுடியாத புற்றுநோயாளிகள், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள் உடலளவில் மிகவும் துயருகிறார்கள். அதனால் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம். சிலர் தாங்களாகவே விரும்பி இறக்கிறார்கள். இதற்காக, தனிப்பட்ட முறையில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று சிலர் செய்துவருகிறார்கள்.

கருணைக் கொலையில், இரண்டு வகைகள் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, அதுவரை அளித்துவந்த சிகிச்சைகளை நிறுத்தி அவர்களை இறக்கச் செய்வது 'பேசிவ் எத்னேஸியா' (Passive Euthanasia). ஊசி அல்லது வேறு ஏதேனும் முயற்சியால் அவர்களை இறக்கச்செய்வது 'ஆக்டிவ் எத்னேஸியா' (Active Euthanasia). 'பேசிவ் எத்னேஸியா' பெரும்பாலான இடங்களில் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

முன்பைவிட, கருணைக்கொலைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும், கடுமையாகக் கண்காணிக்கப்படவேண்டும். ஒரு மருத்துவக் குழு ஏற்படுத்தி அவர்களின் அனுமதி பெற்றபிறகே கருணைக்கொலை செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். " என்கிறார் மருத்துவர் நடராஜன்.



" ஒரு மனிதனுக்கு, கௌரவமாக வாழ்வதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ அதேபோல், கௌரவமாக இறப்பதற்கும் உரிமை உள்ளது. அதனால் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்க்கத்தக்கது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப்பது பேசிவ் எத்னேஸியாவுக்குத் தான். இதை செயல்படுத்தும்போது, மருத்துவக் குழுவின் பரிந்துரை வேண்டும் என்றும், விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது நீதிமன்றம். முடிந்தால், ஒவ்வொரு கருணைக்கொலைக்கும் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற ஓப்புதல் பெறவேண்டும் என்பதை அவசியமாக்கலாம். " என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்.
``நான் வேற கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" - கணவன் கேள்வியால் தூக்கில் தொங்கிய மனைவி 

பாலஜோதி.ரா

"நிர்மலா,எனக்கு குழந்தை வேணும். உனக்கு குழந்தைப் பெற்றுத் தர முடியாது. அதனால,நான் வேற கல்யாணம் பண்ணிக்கட்டுமா?"என்று தனது கணவன் கேட்டதால்,மனமுடைந்த மனைவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த பரபரப்பு சம்பவம் ஆலங்குடி அருகில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள உள்ளது கூழையன்காடு என்ற கிராமம். இங்கு வசிப்பவர்கள் நடேசன்,நிர்மலா தம்பதி. நடேசன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2006.-ம்வருடம் திருமணம் நடந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தை இல்லை. அதற்கான சிகிச்சைகளை இருவரும் எடுத்திருக்கிறார்கள். ஆனால்,எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நாளடைவில் குழந்தையின்மைக்குக் காரணம் நீதான் என்று கணவனும் மனைவியுமாக ஒருவரை ஒருவர் குறைகூறி சண்டையிட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சிறிய சண்டைகள் வளர்ந்து பெரிதாயிருக்கிறது. குழந்தையின்மையைக் காரணமாக வைத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் மற்றபடி ஒற்றுமையாக ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதனைக் காரணமாக வைத்து மனைவியைக் கொடுமைப்படுத்துவதோ அல்லது அவரை தாய் வீட்டுக்கு அனுப்பும் காரியங்களிலோ நடேசன் செய்யவில்லை என்கிறார்கள் அந்தத் தெருவில் வசிப்பவர்கள்.

இப்படியே 11 வருடங்கள் கடந்த நிலையில், சமீபகாலமாக நடேசன் வேறு திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வந்திருக்கிறார். அது பற்றிய பேச்சு அடிக்கடி எழுந்திருக்கிறது. நிர்மலாவின் சம்மதத்தைப் பெற நடேசன் தீவிரமாக முயற்சி செய்து வந்ததாகவும், நிர்மலா தரப்பில் பிரச்னை ஏதும் வந்துவிடக்கூடாது என்று நடேசன் கவனமாகவும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. தனது கணவன் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வதில் தீவிரமாக இருப்பதை அறிந்து நிர்மலா மனம் உடைந்துப் போனார். கடந்த சில நாட்களாக பித்துப் பிடித்தவராக நிர்மலா காணப்பட்டிருக்கிறார். உறவினர்கள் வீட்டுக்கு வந்து சமாதானம் பேசியும் சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில், இன்று காலை விட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு நிர்மலா இறந்திருக்கிறார். நிர்மலா இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஆலங்குடி போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று போலியோ முகாம்... பெற்றோர்களே மறவாதீர்!'

மலையரசு

போலியோ நோய் ஒழிப்புக்காக ஆண்டுதோறும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொட்டு மருந்து, இன்று தமிழகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் காலை 7 மணி முதல் சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.




தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் தவணையாக கடந்த மாதம் 28-ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் தவணையாக இன்று கொடுக்கப்படுகிறது. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மருந்து வழங்க ஆயிரம் நடமாடும் மையங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். மேலும் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கலாம் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு 14-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
FIR against patent official for demanding bribe upheld

By Express News Service | Published: 11th March 2018 03:49 AM

 
The accused allegedly demanded a bribe of Rs 10 lakh for releasing a patent in favour of one GR Kaliaperumal.

CHENNAI: The Madras High Court has upheld an FIR registered by the CBI against S P Subramaniyan, Deputy Controller and branch head in the office of Controller-General of Patents, Designs and Trademarks at Anna Nagar, for allegedly demanding a bribe of Rs 10 lakh for releasing a patent in favour of one G R Kaliaperumal.

The CBI had registered the case based on information from reliable sources and started investigation. “Since the probe is in the early stages, it is not permissible under law to put a spoke in the course of investigation,” said Justice G Jayachandran, while dismissing the petition from Subramaniyan. “It is always open to the petitioner to appear before the investigation officer as and when summoned and put forth his case.”

Kaliaperumal was accorded patent right for his invention ‘A Composition, Ornamental Plaster mould and not a method for preparing the said mould thereon’, after giving `3 lakh to the official. Thereafter, armed by the patent certificate, Kaliaperumal issued notices to four firms alleging violation of his patent right. In the said dispute, Subramaniyan and his accomplice Madhusudhan demanded `10 lakh on June 9, 2017. Since Kaliaperumal paid only `3 lakh, the officials revoked the patent right granted to him.

High Court division bench says illegality cannot be regularised

By Express News Service | Published: 11th March 2018 03:46 AM




CHENNAI: Holding that if illegality is regularised or accepted, law-abiding citizens would also be driven to an extent that the best method is to violate the law and take advantage of the situation, a division bench of the Madras High Court has said.

“We do not understand as to how the violators can inculcate the values to the children and their family members,” a bench of Justices M Venugopal and S Vaidyanathan said.

The bench was dismissing an application from D Rajappa and R Jayalakshmi to review an order dated January 3 last, by which the request of the petitioners for regularisation of their building was rejected by the High Court.
Permission must for erecting mobile towers: Madras High Court

By Express News Service | Published: 11th March 2018 03:44 AM |

Last Updated: 11th March 2018 03:44 AM



Image used for representational purpose

CHENNAI: The Madras High Court has held that permission from the authorities concerned for erecting mobile phone towers is compulsory.

A Division Bench of Justices M Venugopal and S Vaidyanathan gave the ruling, while disposing of writ petitions from Indus Towers Limited at Ekkatuthangal to quash an order of the executive officer of Nandhivaram-Guduvancherry Town Panchayat in Kancheepuram district restraining it from erecting a mobile tower in the area. Another petition challenged an order of the executive officer of Annur Town Panchayat in Coimbatore district, ordering removal of its tower at Annur.

“As cell phone towers are for the purpose of making citizens use the cell phones, it is mandatory on the part of the petitioners to seek prior permission from the authorities concerned,” the Bench said. “Without their permission, the petitioners cannot be permitted to operate the cell phone towers from the Base Trans Receiver Station Towers.”

The Bench directed Indus Towers to approach the local bodies that restricted them from erecting the tower/remove the tower by way of applications. Passing similar orders on another petition from the same company dealing with emission of radiation by mobile phone towers, the Bench observed that whether the radiation in the cell phones causes health hazard or not, certainly mobile phone distances the family members.

NEWS TODAY 21.12.2024