Wednesday, January 28, 2015

நயன்தாரா மது வாங்கும் காட்சி: 'நானும் ரவுடிதான்' படத்துக்கு சிக்கல்

Return to frontpage

நயன்தாரா | கோப்புப் படம்: பிவி சிவகுமார்

நடிகை நயன்தாரா மதுபானக் கடையில் மது வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ள 'நானும் ரவுடிதான்' படத்துக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் படம் 'நானும் ரவுடிதான்'. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது.

நயன்தாரா பீர் வாங்குவது போல வரும் காட்சி 'நானும் ரவுடி தான்' படத்துக்கு படமாக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த வீடியோ காட்சி குறித்து இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்துப் போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே, பெண்களை குடிக்கத் தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்கக் கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

குறள் இனிது - மாமனோ மச்சானோ...

Return to frontpage


அவர் என்ன பெரிய இவரோ? எனக்குள்ள அனுபவம் அவரது வயதைவிட அதிகம்!’ என்று பேசுபவர்களையும், ‘அட விடுப்பா, அந்த அதிகாரி எனது மாமா தான், அவர் தகுதி எனக்குத் தெரியாதா? நான் பார்த்துக் கொள்கின்றேன்’ என்று சொல்பவர்களையும் சந்தித்திருப்பீர்கள்.

பொதுவாக 45, 50 வயதுக்காரர்களுக்கு, 30, 35 வயதுடையவர்களைத் தங்களது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கின்றது! ‘அரசர் நம்மைவிட இளையவர் என்றோ, அரசர் நமது உறவினர் தானே என்றோ எண்ணி அமைச்சர் அரசருக்குரிய மதிப்பைக் கொடுக்கத் தவறக்கூடாது’ என்று சொல்லும் குறள் நமக்கும் நல்வழிகாட்டும்!

சற்றே எண்ணிப் பார்ப்போம். உயர் பதவிக்குத் தகுதி என்ன? வெறும் வயது அல்லவே? வயது தரும் அனுபவமும், அதனால் வரும் திறனும் முதிர்ச்சியும் தானே. ஒரே அலுவலகத்தில் சில வருடங்கள் ஒன்றாகவே வேலை பார்க்கும் இருவர் ஒரே மாதிரியாகவா வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கின்றனர்? நீங்களே சிலரைப் பார்த்து, இவருக்கு இந்த இளவயதிலேயே இவ்வளவு திட்டமிடும் திறன், அளப்பரிய ஆற்றல், முடிவெடுக்கும் முனைப்பு, கண்காணிக்கும் கண்டிப்பு எப்படி வந்தது என்று வியந்தது உண்டா இல்லையா?

சிறப்பாகப் பணியாற்றும் கெட்டிக்காரத்தனம் சிலருக்கு பிறவியிலேயே அமைந்து விடுகின்றது. வேறு சிலருக்கு உயர் கல்வியினாலோ, நல்ல பயிற்சியினாலோ, வளர்ப்பு சூழ்நிலையினாலோ கிடைத்து விடுகின்றது. இன்றைய உலகில் சிறுவயதிலேயே பெரும் சாதனை படைத்தவர் பலர். உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளின் சராசரி வயதே 45 தானாம்! ராஜா ராணி திரைப்பட இயக்குநர் அட்லிக்கு வயது 27. ‘கொலைவெறி’ பாட்டுக்கு இசையமைத்த அனிருத்துக்கு 21. நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கோ 17 வயதுதான்!

அடுத்த பிரச்சினை ஒருவரின் உறவினர் அவருக்கு மேலதிகரியாக அமைந்துவிட்டால் வருவது. மனம் அவரை மாமனாக மச்சானாக உறவு குறித்துப் பார்க்குமே தவிர அதிகாரியாகப் பார்க்காது. அவர் இடும் கட்டளைகளை ஏற்க மறுக்கும். தற்காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பெற்று, அக்குடும்பத்து உறவினர்களாலேயேநிர்வகிக்கப்படும் நிறுவனங்களும் உள்ளன. அப்பா நிறுவனத்தின் தலைவர்; மகன் செயல் இயக்குநர்; சித்தப்பா மாமா பிள்ளைகள் துறை பொறுப்பாளர்கள். அங்கு விற்பனையை அதிகரிக்கக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது உறவுகளை மறந்து பதவிகளின் தன்மையறிந்து நடந்து கொள்ள வேண்டுமில்லையா? தனிச் சலுகைகளை எதிர்பார்க்கலாமா? உறவு முறை எல்லாம் அலுவலகத்திற்கு வெளியே தானே? ஒருவர் பதவியில் அமர்ந்தபின், அவர் எப்படி அதை அடைந்தார் என்று முணுமுணுப்பதால் என்ன பயன்? பதவி பதவி தான்; அதிகாரம் அதிகாரம் தான். அங்கலாய்க்காமல், சங்கடப்படாமல் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுவிட்டால், தினம் தினம் பிரச்சினை இருக்காது! பணியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் கூடும்; மகிழ்ச்சியும் பெருகும்!!

நல்ல தமிழ்க் குறள் இதோ

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியொடு ஒழுகப் படும்

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Oneindia Tamil

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் 20 ஆயிரம் பக்தர்கள் எளிதாக தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
ரூபாய் 300 விரைவு தரிசனம் இணையதள முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு, "திருமலையில் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 92 ஆயிரம் பக்தர்கள் அன்றைய தினம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், திருமலையில் நடைபெற்ற 7 வாகன சேவைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கடந்த சில நாள்களாக ரூபாய் 300 விரைவு தரிசன பக்தர்களுக்காக இணையதளத்தில் அளிக்கப்பட்டு வந்த 18 ஆயிரம் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகிறது. இணையதள வசதியை தற்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்வதால் கூடுதலாக 2 ஆயிரம் டிக்கெட்டுகளை அளிக்க உள்ளனர். இதன் மூலம், 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் எளிதாக தரிசிக்க முடியும்" என்றார்.

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம் l

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதியான கடோங்கில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் உள்ளது. 

செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து இந்த கோவில் கட்டப்பட்டதால் செண்பக விநாயகர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த கோவிலில் ரூ.27 கோடி செலவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகளை தமிழகத்தைச் சேர்ந்த பழனி கிருஷ்ணமூரத்தி தலைமையிலான குழு செய்தது. திருப்பணிகள் சோழர்கால கட்டிடக்கலை பாணியில் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

கூகுளுக்கு நேரம் சரியில்லை... வருகிறது புது சர்ச் என்ஜின்!

Oneindia Tamil

கூகுளுக்குப் போட்டியாக புதிய சர்ச் என்ஜின் ஒன்று வந்துள்ளது. இந்த புதிய சர்ச் என்ஜினை பின்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது உள்ள அனைத்து சர்ச் என்ஜின்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் இந்த புதிய சர்ச் என்ஜின் அமைந்துள்ளது என்பதால் கூகுளுக்கு இது கடும் போட்டியாக அமையும் என்கிறார்கள்.

தற்போது உள்ள சர்ச் என்ஜின்களை விட இது துல்லியமாக ரிசல்ட்டுகளைக் கொடுக்கிறதாம். ஹெல்சிங்கி தகவல் தொழில்நுட்ப கழகம் இந்த சர்ச் என்ஜினை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் SciNet என்பதாகும். இந்த சைநெட் தற்போதுள்ள சர்ச் என்ஜின்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. நாம் தேடும் விவரம் தொடர்பான கீவேர்டுகளையும் இதுவே எடுத்துக் கொடுக்கிறது என்பது இதன் விசேஷமாகும்.

 எனவே தாங்கள் தேடும் விவரத்தை மிகப் பொருத்தமாக, சரியான முறையில், விதம் விதமான முறையில் தேடித் தேர்ந்தெடுக்க பயன்பாட்டாளருக்கு இது உதவி செய்கிறது. எப்படித் தேடுவது என்று தெரியாமலேயே தேடுவோருக்கும் கூட, இதைத்தானே தம்பி தேடுகிறாய் என்று எடுத்துக் கொடுப்பதால் இது மேலும் துல்லியமாகவும் இருக்கிறது. சிலருக்கு எந்த வார்த்தையைப் போட்டுத் தேடுவது என்று சரியாக தெரியாது. அந்த வார்த்தையை சரியாக போடத் தெரியாது.

அப்படிப்பட்டவர்களுக்கு இதுவே தேடவும் உதவுகிறது என்பது மிக முக்கியமானது. இதுகுறித்து இந்தத் திட்ட ஒருங்கிணைப்பாளர் துக்கா ருவோட்சோலோ கூறுகையில், இந்தப் பிரச்சினையெல்லாம் இப்போது கிடையாது. அனைத்துக்கும் சரியான தீர்வாக இது அமைந்துள்ளது. தாங்கள் தேடும் தகவல்களை துல்லியமான முறையில் தேடுவோர் இனி பெற முடியும் என்றார்.
இப்பச் சொல்லுங்கு, கூகுளுக்கு நேரம் சரியில்லைதானே!.. இருந்தாலும் கூகுள் ரொம்பப் பெருந்தன்மையான சர்ச் என்ஜின்தான்.. இந்த Scinet சர்ச் என்ஜின் குறித்த தகவல்களை கூகுளில் தேடினால் உடனே வந்து கொட்டி விட்டது!

DUBAI AIRPORT WORLD"S BUSIEST

'லிங்கா' இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு

Return to frontpage

நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்

'லிங்கா' படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இழப்பீடு எவ்வளவு என்பதை தயாரிப்பாளர் இன்று முடிவு செய்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தை வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.

தங்கள் இழப்பை ஈடுகட்ட, தயாரிப்பாளர் பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதற்கு செவிசாய்க்காததால் நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இது தொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் வேண்டுகோளை அடுத்து திருப்பூர் சுப்பிரமணியத்தை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை சந்தித்தார். “பணத்தை திருப்பிக் கொடுப்பதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ‘லிங்கா’வின் வசூல் என்ன?, அப்படத்தால் எவ்வளவு நஷ்டம் என்ற முழுவிவரம் எனக்கு வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணியம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போன் செய்து எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள், எவ்வளவு வசூல், எவ்வளவு நஷ்டம் என்ற விவரத்தை தயாரிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறினார்.

தற்போது விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் கணக்குகள் அனைத்தையுமே சரிபார்த்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டார் திருப்பூர் சுப்பிரமணியம். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யாருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பதை இன்று முடிவு செய்கிறார்கள்.

நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினி, "யாருடைய மனமும் வருத்தப்படாதபடி கொடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பணம் கொடுத்தவுடன், பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

NEWS TODAY 10.06.2026