Friday, January 19, 2018


30 பைசா குறைவுக்கு நடத்துனர் பணி நீக்கம் செல்லாது : தொழிலாளர் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட மறுப்பு

Added : ஜன 19, 2018 00:44

சென்னை: 'நடத்துனரின் பணப் பையில், 30 காசு குறைவாக இருந்ததற்காக, பணி நீக்கம் செய்தது செல்லாது' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில், நடத்துனராக, தனஞ்செயன் என்பவர் பணியாற்றினார். பணியில் இருக்கும் போது, திடீர் சோதனை நடத்தப்பட்டதில், டிக்கெட் வழங்கியதில் குறைபாடுகள், சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இருந்தது ஆகியவற்றுக்காக, தனஞ்செயன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின், விசாரணை நடத்தப்பட்டது. விளக்கம் திருப்தி அளிக்காததால், பணி நீக்கம் செய்து, 1995ல், நிர்வாகம் உத்தரவிட்டது.

2002ல் உத்தரவு : இதையடுத்து, தொழிலாளர் நீதிமன்றத்தில், தனஞ்செயன் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, பணியில் அமர்த்தும்படி, 2002ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழக நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவை பார்க்கும் போது, ஒவ்வொரு பிரச்னையையும் பரிசீலித்திருப்பது தெரிகிறது.

போக்குவரத்து கழகத்தின் நிலை உத்தரவுப்படி, ௨௦ ரூபாய் வரை குறைவாக இருந்தால், அது அனுமதிக்க கூடியது தான் என்றும், இந்த வழக்கைப் பொறுத்தவரை, ௩௦ பைசா மட்டுமே குறைவாக இருந்தது என்றும், தொழிலாளர் நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டு சரக்குகளுக்கு டிக்கெட் வழங்காததற்கு, நிர்வாகமே நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது. எனவே, 30 பைசா குறைவை நியாயப்படுத்தி, தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கான முடிவுக்கும், உரிய ஆதாரங்கள் உள்ளன.

போக்குவரத்து கழக நிலை உத்தரவுப்படி, 20 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் கூட, அந்த ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க தேவையில்லை. நடத்துனரை பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என, தொழிலாளர் நீதிமன்றம் முடிவுக்கு வந்ததில், நியாயம் உள்ளது.
அதனால், அந்த உத்தரவில், குற்றம் காண முடியாது; அதில், குறுக்கிட தேவையில்லை.

போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, 68 ஆயிரம் ரூபாயை, நிர்வாகம், டிபாசிட் செய்துள்ளது.

50 சதவீத சம்பளம் : தற்போது, தனஞ்செயன், பணி ஓய்வு பெற்று விட்டதால், மீண்டும் பணியில் சேர்க்கும் கேள்வி எழவில்லை. தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து, பணி ஓய்வு பெறும் நாள் வரை, 50 சதவீத சம்பளம் பெற உரிமை உள்ளது. மேலும், டிபாசிட் தொகையையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு பெண்ணை மணந்த விருத்தாசல இளைஞர்

Added : ஜன 19, 2018 06:11



விருத்தாசலம்: விருத்தாசலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஸ்பெயின் நாட்டு பெண்ணை காதலித்து, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர், வசந்தராஜ், 29; பொறியியல் பட்டதாரி. இவர், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், எம்.பி.ஏ., படித்தார். பின், அங்கேயே தங்கி, நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.மாட்ரிட் நகரைச் சேர்ந்த பியத்திரிஸ், 29, விமான பைலட்டாக பணி புரிந்து வருகிறார். பியத்திரிசும், வசந்தராஜும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, விருத்தாசலத்தில், இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. மேளம், நாதஸ்வரம் முழங்க, மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள், மண மக்களை வாழ்த்தினர்.
நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில் : அழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஜன 19, 2018 00:58

கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு செல் வதற்காக, பிப்., 3ம் தேதி, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது.

ஆன்மிக தலங்கள் : இத்திட்டத்தின் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, சிறப்பு ரயில் களில் சென்றுவர முடியும்.அந்த வகையில், வரும் பிப்., 3ல், மதுரையில்இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மூலம், ஆந்திராவில் ஸ்ரீசைலம், மஹாராஷ்டிராவில் பார்லி வைத்யநாத், குருஷ்னேஷ்வர்... பீம்சங்கர், திரையம்பகேஷ்வர், குஜராத்தில் சோம்நாத், மத்தியபிரதேசத்தில் மஹாகாலேஷ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட, நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரலாம். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்படுவோர், ஈரோட்டில் இருந்து ரயிலில் செல்லலாம். 13 நாள் கொண்ட யாத்திரைக்கு, நபருக்கு, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகன வசதி : இதில், 'ஸ்லீப்பர்' ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி அனைத்தும் அடங்கும். மேலும் விபரம், முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 9003140655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதே நாளில் அன்று

Added : ஜன 18, 2018 19:15 |





1933 ஜனவரி 19

சீர்காழி கோவிந்தராஜன், நாகை மாவட்டம், சீர்காழியில், சிவசிதம்பரம் - அவையாம்பாள் தம்பதிக்கு, 1933 ஜன., 19ல், மகனாக பிறந்தார். சென்னை தமிழ் இசை கல்லுாரியில் பயின்ற இவர், 1949ல், இசைமாமணி பட்டமும், 1951ல், சங்கீத வித்வான் பட்டமும் பெற்றார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் பெற்றவர். 1983ல், சென்னை பல்கலைக் கழகம், அவருக்கு, முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழிசை கல்லுாரியின் முதல்வராக பணியாற்றியவர்.திரைப்படத் துறையில், நடிகராகவும், பின்னணி இசை பாடகராகவும் திகழ்ந்தார். தெய்வத் திருமணங்கள் உள்ளிட்ட சில படங்களில், அகத்தியர் வேடத்தில் நடித்து உள்ளார். ஏராளமான பக்தி பாடல்கள் பாடி உள்ளார். 1988 மார்ச், 24ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.
வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்

Updated : ஜன 18, 2018 15:54 | Added : ஜன 18, 2018 13:55 



சென்னை: ''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை பொதுமேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும் பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.

ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும் போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆய்வே இல்லை:

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக்கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

அந்த கட்டுரைகளை தொகுத்தவர் தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்தவில்லை. அந்த புத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில் தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில் தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழு கதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள் தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அளித்த பேட்டி:
கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒரு தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.

கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?

நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.
கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?
நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்து தான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.

கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு புரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?

நாராயணன்: இது ஒரு அனுமானம் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

வைரமுத்துவின் பதில் என்ன:

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லப்படுவதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அது அனுமானத்தின் பேரில் தான் என்பது தான் வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரையின் ஆசிரியர் தரும் விளக்கம்.

இது குறித்து ஒரு வைணவ அறிஞர் கூறும்போது, ‛‛எந்த ஆதாரமும் இல்லாத ஒரு தகவலை, ஆதாரப்பூர்வ தகவலைப் போன்று வைரமுத்து பேசி உள்ளார். அதுவும், நடக்காத ஒரு ஆய்வை, நடத்தாத ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயருடன் அவர் எவ்வாறு குறிப்பிட்டார்.
அக்கட்டுரையை எழுதிய நாராயணன் என்பவரே, ஆண்டாள் பற்றிய செவி வழி செய்தியை மட்டுமே குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட, ஆதாரமற்ற ஒரு தகவலை வைரமுத்து ஏன் பரப்பினார். இதன் மூலம் வேண்டுமென்றே ஆண்டாளை வைரமுத்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது. அவரது உள்நோக்கமும் புரிகிறது. கடவுளாக வணங்கும் ஒருவரைப் பற்றி, மாபெரும் பொய்யை பேசிய வைரமுத்து, இனிமேலாவது பொய் சொன்னேன் என ஒப்புக்கொள்வாரா. பகிரங்க மன்னிப்பு கேட்பாரா'' என்று கூறினார்.


Thursday, January 18, 2018


தொடர் கதையாகும் மாணவர் மரணங்கள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்!?

NARESH B




டெல்லியில் தொடரும் மாணவர்களின் மரணங்களில் இவ்வளவு ஒற்றுமை இருக்கமுடியுமா? அந்த ஒற்றுமை நமக்குச் சொல்ல வரும் செய்திகள் என்னென்ன? இந்த மரணங்களைச் சுற்றி இவ்வளவு சர்ச்சை எதற்காக...?

2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி, டெல்லி எய்ம்ஸில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “எனது மகனின் மரணம் மர்மம் அல்ல. அவனை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டனர். எங்கள் குமுறல்களைக் கண்டுகொள்ளாமல் சரவணனின் மரணத்தைத் தற்கொலை என்று கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறது டெல்லி காவல்துறை. நாங்கள் சரவணன் மரணம்குறித்து வழக்குத் தொடுத்துள்ளோம்” என்றார் அவரின் தந்தை.

2018 ஜனவரி 17-ம் தேதியன்று டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவ அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “சரத் பிரபுவின் அறையில் சில மருந்துகள் மற்றும் ஊசி போடப்பட்டதற்கான காலியான நீடில் (syringe) கிடைத்திருக்கிறது. அதுகுறித்துத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதுகுறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளது டெல்லி காவல்துறை. `இந்த மரணத்தையும் தற்கொலை என்று கூறி வழக்கை முடித்துவிட வாய்ப்புள்ளது' என்று சரவணின் தந்தை, சரத் பிரபுவின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

சரத் பிரபுவின் உறவினர் நவநீத கிருஷ்ணன் அளித்த பேட்டியில், "சரத் பிரபு நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளக்கூடியவர் அல்ல. அவர், எப்போதும் அதுபோன்ற மன நிலைக்குச் செல்லாதவர்” என்று கூறியுள்ளார்.

சரவணன், சரத் பிரபு இருவரின் மரணங்களுமே ஒரே மாதிரியான 'மர்ம மரணங்கள்' எனலாம். இருவருமே மருத்துவக் கல்லூரி மாணவர்கள். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த, சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர், அவரின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம்குறித்து முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், "என் மகன் என்னுடன் மரணமடைவதற்கு முந்தையநாள் வழக்கம்போல தொலைபேசியில் பேசினான். தற்கொலை செய்யும் அளவுக்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தளவுக்கு அவன் கோழையும் கிடையாது'' என்றார்.

மரணமடைந்த மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வந்து மர்மமான முறையில் இறந்த அல்லது தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல் இன்னும் நீளக்கூடும். ரோஹித் வெமுலாவையும் சேர்த்துதான் சொல்கிறேன். `இந்த மரணங்களை எல்லாம், ஒன்று தற்கொலை என்று குறிப்பிட்டு வழக்கை முடிப்பது அல்லது மர்மமான மரணம் என்று அறிவிப்பது' என்பது சிக்கலான காலகட்டங்களில் காவல்துறை கடைப்பிடிக்கும் போக்கு. ஆனால், டெல்லியில் தொடர்ந்து நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கும், இதுபோன்ற போக்கைக் கடைப்பிடிப்பது ஆபத்தானதாக அமையும்.

“தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் மரணம்குறித்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டுப் பிரச்னைக்கான உண்மையான காரணம் என்னவென்று விசாரிக்க வேண்டும்" என்று சரவணின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் என்ன தெரியுமா?

“தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்துவிட்டுச் செல்லவேண்டும். பதிவு செய்யாமல் செல்வதால்தான், இவ்வளவு குழப்பமும் ஏற்படுகிறது. ஆயினும் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்பதுதான்.

`டெல்லியில் நடக்கும் மரணங்களைத் தடுக்க, அரசாங்கத்திடம் பதிவு செய்துவிட்டுப் போனால் போதும் என்பதுதான் தீர்வு' என்பதை, பிள்ளைகளை இழந்து அழுதுகொண்டிருக்கும் அந்தப் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்ல முடியும்?

தமிழக மாணவர்களின் இறப்புகள், மர்மமான மரணங்களா? கொலைகளா அல்லது தற்கொலைகளா? என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால், 'அந்த இடத்தில் மாணவர்களுக்கான இயல்புநிலை இல்லை' என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பிரச்னையின் வேர் என்பது அரசாங்கப் பதிவேடுகளிலோ, கல்லூரிப் பதிவேடுகளிலோ இல்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையிலேயே உள்ளது. அங்குள்ள கல்விக்கூடங்களின் அரசியலில் உள்ளது. 'பாகுபாடுகளும், பிரிவினைகளும் ஏகபோகத்துக்கு கல்விக்கூடங்களில் மலிந்துகிடக்கின்றன' என்பதை முத்துக்கிருஷ்ணனும், ரோகித் வெமுலாவும் வெளிப்படையாகவே எழுதி விட்டுத்தான் இறந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற மாணவர்களுக்கான உடனடிப் பாதுகாப்பு என்பது கல்வி-அரசியல் விடுதலையும், அதற்கான விசாரணைகளும், நீதியும்தான். இவற்றைத் தனிப்பட்ட மரணங்களின் விசாரணையாகக் கருதமுடியாது. ஏனெனில் இந்த மரணங்களின் பின்னணியில் உள்ள ஒற்றுமை நமக்கு உரைக்கும் செய்தி, 'இது தனிப்பட்ட பிரச்னை அல்ல; ஒற்றுமையாக, ஒட்டுமொத்தமாக கல்விக்கூடங்களில் நிகழ்த்தப்படவேண்டிய மாற்றங்கள் என்பதுதான்.

Cashing in: Junked notes turn files, pads at Puzhal prison

| TNN | Updated: Jan 18, 2018, 07:26 IST

Notes are shredded 
Notes are shredded
 
CHENNAI: The office files and pads being supplied to many government offices in the state are made of pulp from an unusual source - junked currency notes.
Following the demonetisation of Rs 500 and Rs 1000 notes in November 2016, the RBI has despatched shredded notes valued at more than Rs 100 crore to the city's Puzhal prison where they are being recycled into customised stationery.

A prison officer said, "We are engaging at least 30 inmates in the stationery making industry. We have received orders from many state government departments and the industry is running round the clock."

Used in government offices, a file pad is a type of semi-corrugated, hard pad with corners embellished with coloured cloth. At least 1,000 office pads are made every day at the stationery making unit in Puzhal using demonetised notes.

Each inmate makes around 50 pads daily and is paid a salary of Rs 18 or Rs 25 per hour depending on whether he is a skilled or semi-skilled worker.

"Puzhal prison inmates have so far prepared stationery items using at least nine tons of shredded demonetised currency notes," said the deputy inspector-general of prisons (in charge) A Murugesan.

Narrating the process, a prison officer said, "The shredded currency notes are pulverised and mixed with glue powder and powdered coconut fibres. The mixture is converted into sheets which are kept in the sun for drying. The sheets are then cut with a machine into the right size to hold A-4 paper. A sheet of wrapper is pasted on the pad. Subsequently, cloth in different colours is pasted in the corners."

Though six other jails in Tamil Nadu including those in Vellore, Salem and Madurai make file pads, Puzhal is the only centre to make such stationery using demonetised currency.

NEWS TODAY 11.06.2026