Friday, January 19, 2018

நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில் : அழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஜன 19, 2018 00:58

கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு செல் வதற்காக, பிப்., 3ம் தேதி, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது.

ஆன்மிக தலங்கள் : இத்திட்டத்தின் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, சிறப்பு ரயில் களில் சென்றுவர முடியும்.அந்த வகையில், வரும் பிப்., 3ல், மதுரையில்இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மூலம், ஆந்திராவில் ஸ்ரீசைலம், மஹாராஷ்டிராவில் பார்லி வைத்யநாத், குருஷ்னேஷ்வர்... பீம்சங்கர், திரையம்பகேஷ்வர், குஜராத்தில் சோம்நாத், மத்தியபிரதேசத்தில் மஹாகாலேஷ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட, நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரலாம். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்படுவோர், ஈரோட்டில் இருந்து ரயிலில் செல்லலாம். 13 நாள் கொண்ட யாத்திரைக்கு, நபருக்கு, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகன வசதி : இதில், 'ஸ்லீப்பர்' ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி அனைத்தும் அடங்கும். மேலும் விபரம், முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 9003140655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...