Sunday, April 29, 2018

கொலை வழக்கில் அப்பாவி கைது போலீசார் சம்பளத்தில் இழப்பீடு நீதிபதி உத்தரவு

Added : ஏப் 28, 2018 23:18 

  மதுரை, கொலை வழக்கில் அப்பாவியை கைது செய்ததால்அவருக்கு போலீசார் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை விரகனுார் அருகே ஒரு நிறுவனத்தில் டிரைவர்சந்திரசேகரன், கிளீனர்சந்தானகிருஷ்ணன் வேலை செய்தனர். சந்தானகிருஷ்ணனை 2009 ல் கொலை செய்ததாக சந்திரசேகரன் மீது திருநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.மதுரை4 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா உத்தரவு: வழக்கில்,உண்மைக்குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கில் போலீசார்செயல்பட்டுள்ளனர். முறையாக விசாரிக்கவில்லை. சந்திரசேகரன் ஒரு அப்பாவி. அவர் மீதான குற்றச்சாட்டைநிரூபிக்கவில்லை. அவரை விடுதலைசெய்கிறேன். அவரை தேவையின்றி இவ்வழக்கில் சேர்த்து, போலீசார் அலையவிட்டுள்ளனர். அவருக்கு போலீஸ் தரப்பில் 1லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர்களில் குலாம், பணி ஓய்வு பெற்று விட்டார்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், குருவெங்கட்ராஜ் சம்பளத்திலும், குலாம் ஓய்வூதியத்திலும் 1 லட்சம் ரூபாயை டி.ஜி.பி., பிடித்தம்செய்ய வேண்டும். தங்கவேல், குருவெங்கட்ராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Advertisement
டாக்டர் சிவகுருநாதன் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை

Added : ஏப் 29, 2018 01:15 | 

  சென்னை, ''டாக்டர் சிவகுருநாதன் மீது, போலீசார் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர், செந்தில் கூறினார்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மயிலாப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ரூதர்புரத்தில் உள்ள, ஆர்.எம்.கிளீனிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு, டாக்டர் சிவகுருநாதன், அந்த பெண்ணை பரிசோதிக்கும் போது, அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.புகாரின் படி, நேற்று அவரை கைது செய்த மயிலாப்பூர் போலீசார், அலை பேசியை பறிமுதல் செய்தனர். அதில், பல பெண்களை, அவர் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.இந்நிலையில், சிவகுருநாதன் சம்பந்தமான ஆவணங்களை, தமிழக மருத்துவ கவுன்சிலிடம், போலீசார் நாளை தாக்கல் செய்ய உள்ளனர்.தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் கூறியதாவது:டாக்டர் சிவகுருநாதன் மீது, போலீசார் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்.எம்.டி., படித்துள்ள சிவகுருநாதனிடம், விளக்கம் கோரப்பட்டு, அதன்படி மருத்துவம் பார்க்க, ஓராண்டு தடை அல்லது ஆயுள் தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.
தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு, 'ஹால் டிக்கெட்'

Added : ஏப் 28, 2018 19:18 |

  ஸ்ரீநகர், : ஜம்மு - காஷ்மீரில், தாசில்தார் தேர்வில் பங்கேற்கும்படி, கழுதைக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பிய வினோத சம்பவம், மீண்டும் நடந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இன்று, தாசில்தார் பதவிகளுக்கான தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வை, ஜம்மு - காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.இந்நிலையில், இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டு கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், கச்சுர் கார் என்ற பெயரில், கழுதையின் படம் பதியப்பட்டு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஹால் டிக்கெட், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து, மாநில அரசு பணிகள் தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்து விட்டனர்.மாநில அரசின் தேர்வாணைய இணையதளத்துக்குள் புகுந்து, கழுதையின் படத்தை யாராவது பதிவு செய்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
கோடைக்கு சிறப்புபஸ்கள்

Added : ஏப் 29, 2018 02:48

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், கோடை விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், ஏப்., 20ல் இருந்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள, சுற்றுலா இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், இன்று முதல், ஜூன் 30ம் தேதி வரை, சிறப்பு பேருந்துகளை இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அண்ணா சதுக்கம் வழியாக 50; கோவளத்துக்கு, 3; வண்டலுார் உயிரியல் பூங்கா வழியாக, 20; மாமல்லபுரத்துக்கு, 5; பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு, 8; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு, 10; சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு, 4 என, 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்த சிறப்பு பேருந்துகள், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் இயக்கப்படும்.
தி.மலை கோவிலில் போலீஸ் குவிப்பு

Added : ஏப் 29, 2018 06:09 |

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை, 6:58 மணி முதல் நாளை காலை, 7:57 வரை, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர்.சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, கோவில் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட போலீசார், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும், நேற்று மதியம், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.மேலும், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
மாவட்ட செய்திகள்

அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க செல்போனில் புகார் தெரிவிக்கலாம், ராஜபாளையம் எம்.எல்.ஏ. வேண்டுகோள்






அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என்று ராஜபாளையம் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 28, 2018, 03:30 AM ராஜபாளையம்,

ராஜபாளையம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-ராஜபாளையம் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான தண்ணீர் பிரச்சினை, குடிநீர் மோட்டார் பழுது, தாமிரபரணி தண்ணீர் கிராமப்பகுதிகளுக்கு முறையான வினியோகம் செய்வது தொடர்பாகவும்,

மேலும் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பிரச்சினை குறித்தும், தெரு விளக்கு பிரச்சினை, குப்பைகள், வாருகால் சுத்தம் செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இந்த குறைபாடுகள் தொடர்ந்து இருந்தால் 9364544107, 9543184412, 8940272294 என்ற எனது செல்போன் எண் அல்லது வாட்ஸ்-அப்பில் புகார்களை தெரிவிக்கலாம். இந்த தகவல் செல்போனில் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, April 28, 2018

தேவையற்ற தலையீடு!


By ஆசிரியர்  |   Published on : 26th April 2018 02:26 AM  |   
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக அரசின் முடிவை செவ்வாய்க்கிழமை நிராகரித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் நிர்வாக முடிவுகளில் தலையிடுகிறது என்றும், வரம்பு மீறுகிறது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. மக்களின் அன்றாடப் பிரச்னைகள் குறித்து அரசியல் தலைமைக்கு இருக்கும் அளவுக்கு நீதிபதிகளுக்குப் புரிதல் இருக்காது என்கிற வாதத்தை ஒரேயடியாகப் புறம்தள்ளிவிட முடியாது.
 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்திய மருத்துவக் கவுன்சில் புதிதாகச் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. மருத்துவப் படிப்புக்கு "நீட்' தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் "தகுதிகாண்' தேர்வை ஏற்படுத்தியது இந்திய மருத்துவக் கவுன்சில். அதில் 50 சதவிகித ஒதுக்கீடு தேசிய அளவிலான சேர்க்கைக்கும், 50 சதவிகித ஒதுக்கீடு மாநில அரசுகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த எல்லா சேர்க்கைக்கும் தகுதிகாண் தேர்வு உண்டு. தமிழக அரசு, தனக்கு வழங்கப்படும் 50% இடங்களில், அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது. இதை இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.
 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை 9(4), அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவில்லை. ஊக்க மதிப்பெண் அளிக்கலாம் என்றுதான் தெரிவிக்கிறது. அதுவும் கூட விரைவில் அணுக முடியாத மலைப்பிரதேசங்கள், ஆதிவாசி வாழும் இடங்கள் ஆகியவற்றுக்குத்தான்.
 அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகள் இட ஒதுக்கீடு அளிக்க அனுமதித்தால், மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய நேரிடும் என்றும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒழுங்குமுறை அதிகாரங்களில் அத்துமீறித் தலையிடுவது போல ஆகிவிடும் என்றும் கூறி உச்சநீதிமன்ற அமர்வு தமிழக அரசின் இட ஒதுக்கீடு முடிவை நிராகரித்திருக்கிறது.
 இந்தியாவில் 10,189 பேருக்கு ஓர் அரசு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. அதேபோல 90,343 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற விகிதம்தான் காணப்படுகிறது. இந்தியாவில் 70 கோடி மக்கள் வாழும் கிராமங்களில் 11,054 மருத்துவமனைகள்தான் இருக்கின்றன. இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், மருத்துவர்களுக்கும் இடையேயான விகிதம் என்பது வியத்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருப்பதைவிடக் குறைவாகக் காணப்படுகிறது. மருத்துவர்கள் பற்றாக்குறைதான் நாட்டின்சுகாதார நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.
 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 60% மக்கள் ஊரகப் புறங்களில்தான் வாழ்கிறார்கள். அங்கே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத அவலம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஊரகப்புறங்களில் குறிப்பாக, வசதி இல்லாத பின்தங்கிய கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் தயாராக இல்லை.
 மருத்துவ பட்டப்படிப்பை முடித்த பிறகு இளம் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம் காட்டுவதற்கான காரணம், அவர்கள் தங்களது அனுபவத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. மருத்துவ மேல்படிப்பு சேர்க்கைக்கு அது கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது என்பதால்தான்.
 ஏற்கெனவே நடுத்தர வர்க்கத்தினரும், விளிம்பு நிலை மக்களும், அதிகரித்துவிட்ட மருத்துவ செலவினங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத நிலைமை ஏற்படுவது மிகப்பெரிய சமூக அநீதி. இதை அரசியல் தலைமை புரிந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கவுன்சிலும், நீதிமன்றமும் இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத்தான் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவு முறை அகற்றப்படுவது தெரிவிக்கிறது.
 இன்றைய மருத்துவக் கல்வியில் காணப்படும் மிகப்பெரிய குறை மருத்துவ பட்டப்படிப்பு முடிந்த பிறகு பெரும்பாலான மருத்துவர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியவோ, நோயாளிகளைப் பரிசோதித்து அனுபவம் பெறவோ முற்படுவதில்லை. மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிகாண் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்தான் முனைப்புக் காட்டுகிறார்கள். தகுதிகாண் தேர்வு எழுதி மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றாலும் கூட, மருத்துவப் பணிக்குத் தயாராவதில்லை. அடுத்து, சிறப்பு மருத்துவர் ஆவதற்கான படிப்புக்குத் தயாராகிறார்கள். பெரும்பாலான சிறப்பு மருத்துவர்கள் அடிப்படை நோயாளிகள் பரிசோதனை அனுபவம் இல்லாதவர்களாக மருத்துவத் தொழிலில் இருக்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 இப்படிப்பட்ட சூழலில் மருத்துவப் பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அரசு மருத்துவமனைகளில், அதிலும் ஊரகப் புறங்களில் பணிபுரிந்தால் மட்டுமே மேற்படிப்புக்குத் தகுதி பெறுவார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டால்தான் மருத்துவர்களின் தரமும் அதிகரிக்கும், ஊரகப் புற மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிபுரியவும் முற்படுவார்கள். அதை விட்டுவிட்டு தகுதிகாண் தேர்வு மட்டுமே மருத்துவ மேல்படிப்புக்கு அளவுகோல் என்கிற இந்திய மருத்துவ கவுன்சில், உச்சநீதிமன்றத்தின் கருத்து நடைமுறைப்படுத்தப்படுமானால், அடிப்படை நோயாளிகள் பரிசோதனை அனுபவம் இல்லாத வெறும் புத்தகப் புழுக்கள் மட்டும்தான் மருத்துவ மேல்படிப்புக்கும் சிறப்பு மருத்துவத்துக்கும் செல்ல முடியும் என்கிற அபாயத்தை மருத்துவக் கல்வி எதிர்கொள்ளும்.
 

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...