Tuesday, May 22, 2018

ரஜினி, கமலுக்கு வழிவிடுவதே விஜய்க்கு நல்லது: எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி

Published : 20 May 2018 13:42 IST


ம. மோகன்





நடை, உடை, தோற்றம் என அனைத்திலும் கிட்டத்தட்ட டிராஃபிக் ராமசாமியாகவே மாறியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். ‘‘ஆமா தம்பி... வயசு 76 ஆகிடுச்சே. 69 படங்கள் இயக்கிட்டேன். நடிப்புல டிராஃபிக் ராமசாமி மூணாவது படம்’’ என்று இயல்பாகப் பேசியவர் பேட்டிக்குத் தயாரானார்.

‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் பயப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். இது ஆளுங்கட்சிக்கு விடுக்கும் சவாலா?

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ படத்தில் நான் உதவியாளர். அப்ப எனக்கு 24 வயசிருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எம்ஜிஆர் வந்துட்டா குண்டூசி விழுற சத்தம்கூட இருக்காது. அன்னைக்கு வாகினி ஸ்டுடியோவுல பாட்டு ஷூட்டிங். திரும்ப ஒரு டேக் வேணும்னாகூட அவரோட காதுக்கிட்ட போய் மெதுவாத்தான் சொல்லணும். அந்த மாதிரி சூழல்ல ஒரு டேக் கொஞ்சம் சுமாரா இருந்ததால என்னையும் அறியாமலேயே ‘அண்ணே... ஒன்ஸ்மோர்’ன்னு எம்ஜிஆரைப் பார்த்து கத்திட்டேன். அதைக் கேட்டு ஒட்டுமொத்த யூனிட்டும் என்னைய திரும்பிப் பார்த்துச்சு. அடுத்த நாள் காலையில, கார் வரும்னு ரெடியாகி வீட்ல உட்கார்ந்திருக்கேன். ம்ஹூம்… 10 மணி ஆகியும் கார் வரல. ஒரு ஆட்டோ பிடிச்சு வாகிணி ஸ்டுடியோவுக்கு போனா, ‘சேகரு.. நம்ம அடுத்த படத்துல வேலை செய்துக்கலாம்பா’ன்னு சொன்ன இயக்குநர், மேனேஜரை அழைத்து, ‘சேகருக்கு செட்டில் பண்ணி அனுப்பிடுங்க’ன்னுட்டு போய்ட்டார்.

அப்படிப்பட்ட நான் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தப்ப கருணாநிதி எழுதிய ‘நீதிக்கு தண்டனை’யைப் படமாக எடுத்தேன். அது கருணாநிதி கைதுசெய்யப்பட்டு விடுதலையான சமயம். படம் ரிலீஸாகி 15 நாள் கழிச்சு எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்துக்கு வரச் சொன்னார். பொதுவா பெண்கள் சென்டிமென்ட் என்றால் கொஞ்சம் ஸ்மூத்தா ஹேண்டில் செய்வார்னு கேள்விப்பட்டிருந்ததால மனைவியையும் அழைச்சுக்கிட்டுப் போனேன். எனக்கு பின்னாடி வந்தவங்க எல்லாரும் எம்ஜிஆரை பார்த்துட்டுப் போறாங்க. கடைசி வரைக்கும் எங்கள கூப்பிடல.

மூணு நாள் கழிச்சு மறுபடியும் கூப்பிட்டிருந்தார் போனேன். ‘என்னப்பா சேகர்.. நீ எடுத்த ‘நீதிக்கு தண்டனை’ படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. எம்ஜிஆர் பிக்சர்ஸ்ல படம் பண்ணி ரொம்ப நாளாச்சு. வருஷத்துக்கு ரெண்டு படம் பண்ணே’ன்னு கேட்டார். இதை நான் எதிர்பார்க்கல. ‘எதுக்கு இவனைப் பகைச்சிக்கணும்’னு அவர் நினைச்சிருப்பாரோனு இப்ப நினைக்கிறேன். ஆனா, அந்த வருஷத்தோட முடிவுல அவர் இறந்துட்டார். இதேமாதிரி திமுக ஆட்சியிலும் ‘சட்டப்படி குற்றம்’ படம் எடுத்துட்டு ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதிச்சேன். ‘சாட்சி’, ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களை எடுத்தபோதும் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டவன். அதனாலதான் சொல்றேன். எதிர்ப்புகளும் மிரட்டல்களும் எனக்குப் புதிதல்ல; எது வந்தாலும் சமாளிப்போம்.

திரைத் துறையில் நீங்கள் உருவாக்கிய இயக்குநர்களும் நடிகர்களும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்களா?

நன்றி மறவாமல் இருக்கிறார்களா என்றால் அதுக்கு பதில் சொல்ல முடியாது. மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களில் நன்றி மறக்காமல் இருப்பவர் விஜயகாந்த் மட்டும்தான். அவர் திரும்பவும் பழைய சூழலுக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இயக்குநர் ஷங்கர் என் மாணவர்தான். ஆனால், அவர் நன்றிக்குரியவராக இருக்கிறாரா என்று கேட்கக் கூடாத உயரத்தில் இருக்கிறார். நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வளவுதான். மற்றபடி இயக்குநர்கள் செல்வபாரதி, ’கோயம்புத்தூர் மாப்ளே’ எடுத்த ரெங்கநாதன், மஜித், இப்போ படம் எடுத்துக்கிட்டிருக்குற எம்.ராஜேஷ், பொன்ராம் எல்லோரும் என் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்.

2011 தேர்தலில் உங்கள் மகன் விஜயின் ஆதரவை ஜெயலலிதா கோரியதாக சமீபத்தில் பேசியுள்ளீர்கள். ஜெயலலிதா மறைந்த பிறகு இதைச் சொல்வது ஏன் என்று சர்ச்சையாகிவருகிறதே?

உண்மைதான், அந்த நேரத்தில் எங்களுக்கு பதினைந்து சீட் கேட்டோம். அவர்கள் மூன்று தருவதாகச் சொன்னார்கள். உடனிருந்த சசிகலா அம்மையார், ‘நீங்கள் என்ன அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியா?’ என்று கேட்டார். நாங்கள் உங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம் என்றோம். அவர்கள் மூன்றுக்கு மேல் கொடுக்க முன்வராததால் நாங்கள் வேண்டாம் என்று திரும்பினோம். பிறகு, திருச்சிக்கு அழைத்து ஆதரவு வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டார். ஆதரவு அளித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில், ‘இந்த வெற்றிக்கு விஜய்யும் ஒரு காரணம்’ என்று நான் பேசினேன். அதை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி பேச பல உண்மைகள் உள்ளன. ஆனா, திரும்பத் திரும்ப அதெல்லாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல உங்கள் மகன் விஜயும் இப்போது அரசியலுக்கு வருவாரா? ரஜினி, கமலின் அரசியல் பிரவேசத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

விஜய் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் குழந்தை அல்ல. நல்லது கெட்டதைத் தீர்மானிக்கும் வயது அவருக்கு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. சீனியர்கள் என்ற முறையில் கமலும் ரஜினியும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். அந்த சீனியர்களுக்கு விஜய் வழிவிடலாம் என்றே தோன்றுகிறது.

(இன்னும் நிறையப் பேசுகிறார் எஸ்.ஏ.சி. விரிவான பேட்டிக்கு, வரும் வார

‘காமதேனு’ வாங்குங்கள்.)
நாட்டு மாட்டுப் பாலுக்குப் படையெடுக்கும் மக்கள்!

Published : 20 May 2018 09:13 IST
 
கா.சு.வேலாயுதன்



‘கறக்கறது கா(ல்) படி; ஒதைக்கறது பல்லு போக!’ நாட்டு மாடுகளைப் பற்றி இப்படியொரு சொலவடை உண்டு. இதை மனதில் வைத்தே கொங்குப் பகுதி விவசாயிகள் நாற்பதாண்டு காலமாக நாட்டு மாடுகளைக் கைவிட்டு, கலப்பின மாடு வளர்ப்புக்கு மாறி இருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம், ‘உதைபட்டு பல்லு போனாலும் நாட்டு மாடுகளை வளர்த்தியே தீரணும்’ என்று பிடிவாதம் பூண்டுவிட்டார்கள் போலும். அந்த அளவுக்கு நாட்டு மாடுகளை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஏன்..?

‘நாட்டு மாடு கோமியம் கிடைக்கும். ஆடு, நாட்டு மாட்டின் உரம் கிடைக்கும். புதுமனை மற்றும் கோ-பூஜைக்கு நாட்டு மாடு வழங்கப்படும். சுத்தமான நாட்டுப் பசும்பால் கிடைக்கும்’ - இப்படியெல்லாம் கோவை புதூர் பகுதியில் விளம்பரப் பலகைகள் முளைத்திருக்கின்றன. இப்படி விளம்பரப்படுத்தும் அளவுக்கு நாட்டு மாடுகள் மீது அப்படி என்ன திடீர் கரிசனம்?

“நாலு வருஷம் முன்னாலதான் நாட்டு மாடு வளர்த்தற ஆசையில எங்க வூட்டுக்காரர் ஒரு நாட்டு மாடும், மூணு கன்னுக்குட்டியும் வாங்கிட்டு வந்தார். அதுதான் இப்ப 20 உருப்படியாவும், 4 கறவையாகவும் பெருகியிருக்கு.பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, நெல்லந்தவுடு, பச்சை சோளத்தட்டுன்னு நிறைய செலவு இருக்கு. ஒரு மாடு ஒரு லிட்டர்லேர்ந்து மூணு லிட்டர் வரைக்கும் கறக்கும். கறந்த சூட்டோட துளி தண்ணி கலக்காம லிட்டர் 100 ரூபாய்க்குத் தர்றோம். நாட்டு மாட்டுப்பாலே வேணும்னு நிறைய பேர் வந்து கேட்கிறாங்க. முக்கியமா நாட்டுப் பசும்பாலைக் குடிச்சுப் பழகின குழந்தைங்க திரும்ப பாக்கெட் பாலையோ, கலப்பின மாட்டுப்பாலையோ கொடுத்தா குடிக்க மாட்டேங்குது’’ என்கிறார் கோவைபுதூர், ஐஸ்வர்யா நகர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும்
கேரளாவில் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழப்பு?- மத்திய உயர்நிலை மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு

Published : 22 May 2018 07:41 IST

கோழிக்கோடு/புதுடெல்லி



கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவுடன் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து நேற்று ஆலோசனை நடத்திய உயர்நிலை மருத்துவக் குழுவினர். -

 THE HINDU

கேரளாவில் கடந்த 2 வாரமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் நிபா வைர ஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, இதுகுறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய உயர்நிலை மருத்துவக் குழு கேரளா விரைந்தது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்க ளில் இந்த மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பலனின்றி ஒரு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதில் கோழிக்கோடு மாவட் டம் சங்கரோத் கிராமத்தைச் சேர்ந்த மூஸா என்பவரின் 2 மகன் கள் மற்றும் ஒரு உறவினர் உள்ளிட்ட 3 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்துள்ளது. புனே நகரில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதார செயலாளர் ராஜிவ் சதானந்தன் தெரி வித்துள்ளார். இதனிடையே, மூஸாவும் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மூஸாவின் வீட் டில் உள்ள கிணற்றில் வவ்வால்கள் அதிக அளவில் இருந்தது தெரியவந்துள்ளதாக கேரள சுகா தார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். மேலும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித் தார்.

இதுதவிர, கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் லினியும் (31) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து இவருக்கு இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை உறவினரிடம் ஒப்படைக்காமல் சுகாதார துறையினரே தகனம் செய்தனர்.

மேலும் பெரம்பராவில் உள்ள இஎம்எஸ் நினைவு கூட்டுறவு மருத்துவமனையில் நிபா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை கவனித்து வந்த மேலும் 3 செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபோல கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். இவர்களும் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தார்களா என்பதை உறுதி செய்ய ரத்த மாதிரிகள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நோய் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நிபா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என கோழிக்கோடு எம்பி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வலியுறுத்தியதன்பேரில், தேசிய நோய் தடுப்பு மைய (என்சிடிசி) இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய உயர்நிலை மருத் துவ குழு கோழிக்கோடு வந்தது.

வவ்வால் மூலம் பரவும்

மலேசியாவின் கம்புங் சுங்கை நிபா பகுதியில் 1998-ல் புதுவித வைரஸால் காய்ச்சல் பரவியது. இதையடுத்து இதற்கு நிபா என பெயரிடப்பட்டது. இது பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து (பிளையிங் ஃபாக்ஸ்) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து மற்றவர்களுக் கும் விலங்குகளால் கடிபட்ட பழங்களை சாப்பிடும்போதும் பரவுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அத்துடன் கடும் தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். 10 நாட்களுக்குப் பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்து மூளைக்காய்ச்சலாக மாறி மரணம் ஏற்படக்கூடும். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் இறப்பு விகிதம் 74.5 சதவீதம் ஆகும்.

தடுப்பது எப்படி?

பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டால் நன்றாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நோயாளிகளை அணுகும்போது முகமூடி, கையுறை அணிய வேண்டும். தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
'கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் துவக்குங்க!'

Added : மே 22, 2018 01:40

சென்னை: கூடுதலாக மருத்துவ கல்லுாரிகள் துவங்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில், தமிழக மாணவர்கள் இடம்பெற்றனர்.17 மாணவர்கள்இவர்களுக்கு, இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன. மாநில அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்படாததால், மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களை தேர்வு செய்யும் வகையில், தங்கள் பெயர்களை, மாநில கவுன்சிலிங்கில் சேர்க்கும்படி, ௧௭ மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ படிப்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான கால அட்டவணையை, அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சில வழக்குகளில் தேவைப்பட்டால், அதை மட்டும் தனியாக அணுகலாம். ஒருவருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஒட்டுமொத்த நடவடிக்கையையும் தடுக்கக் கூடாது. சிலர் மட்டுமே, நீதிமன்றத்தை அணுகுகின்றனர். சிலரது வழக்குகளுக்காக, ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கையை நிறுத்தக் கூடாது. வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் வழக்கு தொடுக்காதவர்களின் உரிமைகளை, சம நிலையில் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வராதவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.இடைக்கால உத்தரவில், மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கும் போது, மருத்துவ படிப்புக்காக ஏங்கி நிற்கும், மற்ற மாணவர்களின் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது.தரவரிசை பட்டியல்தனிப்பட்டவர்களின் வழக்கை, தகுதி அடிப்படையில் முடிவு செய்யும் போது, அதற்கான நிவாரணம் கிடைத்து விடும். மாநில தரவரிசைப் பட்டியலை வெளியிட, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால், மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலை வெளியிட முடியவில்லை.இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களும் பெற்றுள்ளனர். மாநில ஒதுக்கீட்டின் கீழ், இடங்களை பெற, இவர்களுக்கு தகுதி இருந்தால், அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், அதை சட்டப்பூர்வ உரிமையாக கருத முடியாது.நாட்டில், அதிக அளவில் நிலப்பரப்பு உள்ளது; மக்கள் தொகையும் அதிகம். இளைஞர்கள், புத்தி கூர்மையுடன் உள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில், மாணவர்கள் விருப்பப்படி பாடங்களையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்ய ஏதுவாக, போதிய அளவில், மருத்துவ கல்லுாரிகள் இருப்பதை, உறுதி செய்ய வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது.தற்போதைய தேவை கருதி, கூடுதலாக மருத்துவ கல்லுாரிகளை, மத்திய, மாநில அரசுகள் துவங்குவது முக்கியமானது. அவ்வாறு போதிய எண்ணிக்கையில், மருத்துவ கல்லுாரிகள் துவங்குவதால், அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி, மத்திய, மாநில அரசுகள், தங்கள் கடமைகளை ஆற்றுவதாக கருதலாம். மக்களுக்கு, போதிய மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டியதும், அடிப்படை உரிமையாகும்.மக்கள் தொகைக்கு ஏற்ப, மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றாமல், அரசு கடமை தவறுவதாக தான் அர்த்தம். அதிக டாக்டர்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவை உள்ளது. எனவே, அதற்கான வாய்ப்புகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் விரக்தி அடைந்து விடுவர்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
'2வது மனைவிக்கு ஓய்வு கால பணப்பலன்'

Added : மே 22, 2018 01:16

மதுரை: மரணமடைந்த ஆசிரியரின் இரண்டாவது மனைவி குடும்பத்துக்கு, ஓய்வு கால பணப்பலன்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் கலைச்செல்வி தாக்கல் செய்த மனு:இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த ஜேம்ஸ் என்பவரின், இரண்டாவது மனைவி நான். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜேம்ஸ், 2017ல் இறந்தார். அவரது இறப்பு மற்றும் ஓய்வுக்கால பணப் பலன்களில் பங்கைப்பெற, எங்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. மாநில கணக்காளர் தலைவர், திண்டுக்கல் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கலைச்செல்வி மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அரசு வழக்கறிஞர், 'இரண்டாவது மனைவியின் மகன் உட்பட அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் உரிமை உள்ளது பற்றி, ஜேம்சின் இரு மனைவியரிடமும் விசாரித்து முடிவு செய்யப்படும்' என்றார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் மற்றும் அவரது மகன், இறந்த ஜேம்சின் முதல் மனைவி மற்றும் இதர சட்டப்பூர்வ வாரிசுகள் விளக்கமளிக்க, துவக்கக் கல்வி அலுவலர் சமவாய்ப்பளிக்க வேண்டும். மனுதாரர் மனுவை தகுதி அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு
பிறப்பிக்க வேண்டும்' என்றார்.

அரசு ஊழியர்கள் விரைவில் போராட்டம் : ஜூலை 21, 22 மாநாட்டில் முடிவு

Added : மே 22, 2018 02:38

மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடு வது குறித்து, ஜூலை 21, 22 தேதிகளில் மதுரையில் நடக்கும் மாநில பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில், அரசு ஊழியர்கள் முடிவு செய்கின்றனர்.அரசு ஊழியர்கள் சங்க மாநில மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், மாநில பேரவை பிரதிநிதிகள் மாநாடு ஆண்டிற்கு ஒரு முறையும் நடக்கும். நடப்பாண்டிற்கான பேரவை மாநாடு மதுரை யில் ஜூலை 21, 22 நடக்கிறது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மதுரையில் நடந்தது. மாநில பொது செயலர் அன்பரசு, மாநில நிர்வாகிகள் செல்வம், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில நிர்வாகிகள் கூறியதாவது: மாநிலத்தில் 148 அரசு துறைகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. வேலைவாய்ப்புக்காக 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதுடன், மக்களிடம் திட்டங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. இந்நிலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை அகற்றிவிட்டு அவுட்சோர்சிங் முறையை கொண்டு வர அரசு முயற்சிக்கிறது.புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, சம்பள முரண்பாடு களைதல், சத்துணவு, அங்கன்வாடி போன்ற தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள்குறித்து பேரவை மாநாட்டில் முடிவு செய்யப்படவுள்ளது, என்றனர்.
பெண் டாக்டரை கட்டிப்போட்டு கொள்ளை : பரமக்குடியில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

Added : மே 22, 2018 02:33



பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓய்வு பெற்ற பெண் டாக்டரை கட்டிப்போட்டு தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.பரமக்குடி சேதுபதி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி டாக்டர் கிருஷ்ணவேணி. சென்னையில் உள்ள மகனை பார்க்க டாக்டர் பாலசுப்பிரமணியன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 3:00 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த முகமூடி அணிந்த நான்கு நபர்கள் கிருஷ்ணவேணியை மிரட்டி கட்டிப்போட்டனர். பின், நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.சம்பவம் குறித்து கிருஷ்ணவேணி கூறியதாவது:கொன்று விடுவதாக முகமூடி கொள்ளையர் மிரட்டினர். எனது வைர தோடு உட்பட அனைத்து நகைகளையும் கழற்றி கொடுத்தேன். கைகளை கட்டி போட்டு, 37 பவுன் தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள், 2 அலைபேசிகளை கொள்ளையடித்து தப்பினர், என்றார்.வெளியே வந்த அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். மோப்பநாய் அருகிலுள்ள வைகை ஆறு வரை ஓடியது.கொள்ளையர்கள் தாங்கள் வந்த பைக்கை அங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அது திருட்டு வாகனமா எனவும் விசாரணை நடக்கிறது.



Advertisement

NEWS TODAY 25.07.2026