Tuesday, May 22, 2018

கேரளாவில் பரவும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழப்பு?- மத்திய உயர்நிலை மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு

Published : 22 May 2018 07:41 IST

கோழிக்கோடு/புதுடெல்லி



கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவுடன் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து நேற்று ஆலோசனை நடத்திய உயர்நிலை மருத்துவக் குழுவினர். -

 THE HINDU

கேரளாவில் கடந்த 2 வாரமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் நிபா வைர ஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, இதுகுறித்து ஆய்வு நடத்துவதற்காக மத்திய உயர்நிலை மருத்துவக் குழு கேரளா விரைந்தது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்க ளில் இந்த மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பலனின்றி ஒரு செவிலியர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதில் கோழிக்கோடு மாவட் டம் சங்கரோத் கிராமத்தைச் சேர்ந்த மூஸா என்பவரின் 2 மகன் கள் மற்றும் ஒரு உறவினர் உள்ளிட்ட 3 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருந்தது தெரியவந்துள்ளது. புனே நகரில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதார செயலாளர் ராஜிவ் சதானந்தன் தெரி வித்துள்ளார். இதனிடையே, மூஸாவும் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மூஸாவின் வீட் டில் உள்ள கிணற்றில் வவ்வால்கள் அதிக அளவில் இருந்தது தெரியவந்துள்ளதாக கேரள சுகா தார அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். மேலும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித் தார்.

இதுதவிர, கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் லினியும் (31) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து இவருக்கு இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை உறவினரிடம் ஒப்படைக்காமல் சுகாதார துறையினரே தகனம் செய்தனர்.

மேலும் பெரம்பராவில் உள்ள இஎம்எஸ் நினைவு கூட்டுறவு மருத்துவமனையில் நிபா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை கவனித்து வந்த மேலும் 3 செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபோல கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். இவர்களும் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தார்களா என்பதை உறுதி செய்ய ரத்த மாதிரிகள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து நோய் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நிபா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என கோழிக்கோடு எம்பி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் வலியுறுத்தியதன்பேரில், தேசிய நோய் தடுப்பு மைய (என்சிடிசி) இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய உயர்நிலை மருத் துவ குழு கோழிக்கோடு வந்தது.

வவ்வால் மூலம் பரவும்

மலேசியாவின் கம்புங் சுங்கை நிபா பகுதியில் 1998-ல் புதுவித வைரஸால் காய்ச்சல் பரவியது. இதையடுத்து இதற்கு நிபா என பெயரிடப்பட்டது. இது பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து (பிளையிங் ஃபாக்ஸ்) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து மற்றவர்களுக் கும் விலங்குகளால் கடிபட்ட பழங்களை சாப்பிடும்போதும் பரவுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அத்துடன் கடும் தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். 10 நாட்களுக்குப் பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்து மூளைக்காய்ச்சலாக மாறி மரணம் ஏற்படக்கூடும். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் இறப்பு விகிதம் 74.5 சதவீதம் ஆகும்.

தடுப்பது எப்படி?

பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டால் நன்றாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நோயாளிகளை அணுகும்போது முகமூடி, கையுறை அணிய வேண்டும். தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...